தனிமனித விழிப்புணர்வும், கொண்ட குறிக்கோளுக்கு மாற்றமில்லாத உறுதிமிக்கச் செயல்பாடும் படிக்காத மேதை காமராஜருக்குத் தமிழக முதலமைச்சர் பதவியைப் பரிசாக அளித்தது. அவரது இலவசக் கல்வித் திட்டமும், மதிய உணவுத் திட்டமும் தமிழகக் கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கை வளம் பெற்றிடப் பலவகைகளிலும் உதவின. அவரையும், அவரது திட்டங்களுக்குத் துணைநின்ற திரு.நெ.து சுந்தரவடிவேலு அவர்களையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டியது அவசியமாகின்றது.!
சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், டில்லி உயர்நீதிபதிமன்றத் தலமைப் பொறுப்பேற்கின்றார். தேனி மாவட்டம், கம்பம் வட்டம், சி.புதுப்பெட்டி கிராமத்தில் பிறந்தவர், இந்தியத் தலைநகருக்குச் செல்கின்றார்.
வழக்கறிஞர், அரசுப் பிளிடர், சென்னை உய்ர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதி, நிரந்தர நீதிபதி என, 32 ஆண்டுகள் அவரது வாழ்க்கை, சென்னை உயர் நீதிமன்றத்திலேயே செலவாகின்றது.
பதவி உயர்வு பெற்றுச் செல்லும் அவரது வழியனுப்புவிழாவில் பங்கேற்றுச் சிறப்பித்த நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கூட்டம் குறித்துப் பத்திரிக்கைகள், அனைத்தும் பாராட்டுகின்றன. இது வெறும் நடைமுறைச் சடங்கல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றன.
தன் பணிகளுக்குக் குடும்பத்தினரும், உறவினர்களும் உற்ற துணையாய்த் திகழ்ந்தனர் என்பதே அவரது நன்றியுரைச் செய்தி.
சாலகளில் விளம்பரப்போர்டுகள் வைக்கத் த்டை, தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளத் தடை, பஸ்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்திட ஆணை என, அவர் தீர்ப்பளித்த வழக்குகளின் எண்ணிக்கை 1,26,000 என்ற , தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.நவநீதகிருஷ்ணனின் பாராட்டுரைத் தகவல்கள் என்றென்றும் நினைவில் நிற்கக்கூடியவை.
தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்கும் டி.முருகேசரை எல்லோருடனும் சேர்ந்து பாராட்டி வாழ்த்துக்களைச் சொல்லி மகிழ்வோம்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.