Tuesday, September 25, 2012

இந்தியாவில் உள்ள அமெரிக்கா விசா மையங்களில் தமிழோசை, நாளை முதல்!

அமெரிக்க விசா புதிய நடைமுறையினைப் பதிவு செய்வதில் இவ்வளவு அக்கறை எதற்காக என்ற வினவுகின்றீர்களா? 

நம் நாட்டில் ரேஷன் அட்டை முதல் ஒவ்வொன்றிற்கும் நடையாய் நடப்பதில் உள்ள சிக்கல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளவும்,


அமெரிக்கத் தூதரகங்களிலும், அவற்றின் 33  விசா மையங்களிலும் தமிழோசை ஒலிக்கப் போகின்றது என்பதற்காகவும்தான் !

புதிய இணைய தளம் துவக்கம். முகவரி ;- www.ustraveldocs.com/in

ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் அனைத்துத் தகவல்களும் கிடைக்கும். விண்ணப்பங்களை நிறைவு செய்து , நேர்காணல் முன்பதிவையும் செய்து கொள்ளலாம்.

மேலும், விண்ணப்பதாரர், தொலைபேசி, மின்னஞ்சல், ஆன் லைன் சாட்டிங் மூலமும் தொடர்பு கொள்ளலாம். ஆங்கிலம் அல்லது இந்தியில் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி;- support-india@ustraveldocscom மின்னஞ்சலுக்கு இரு நாட்களில் பதில் கிடைக்கும்.

தொலைபேசியில் தொடர்பு கொள்ளப் பயன்படுத்த வேண்டிய எண்கள் :-
 ( 91-120 ) 660-2222 அல்லது ( 91-22 ) 6720-9400 .

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும் , ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையும் மேற்படி எண்களில் தொடர்பு கொண்டு பேச முடியும்.

அமெரிக்காவிலிருந்து அழைத்தால், 1-301-616-5424 என்ற எண்னிலிருந்து பதில் கிடைக்கும்.

தமிழ், தெலுங்கு,  குஜராத்தி,  பஞ்சாபி ,   இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தொலைபேசிகளில் பயன்படுத்தலாம்.

இந்த அழைப்பு மைய எண்களைத் தொடர்பு கொள்ளக் கட்டணம் எதுவும் கிடையாது.

அழைப்பு மைய அலுவலக நேரங்களில் இணைய தளம் மூலமாக உரையாடலாம். விசா விண்ணப்பக் கட்டணத்தை  ஆக்ஸிஸ் , மற்றும் சிட்டி பேஙின் 1800-க்கும் மேற்பட்ட கிளைகளில் ரொக்கமாகச் செலுத்தலாம்.  மின்னணுப் பணப் பரிவர்த்தனையையும் - EFT- பயன்படுத்தலாம். அல்லது கைபேசி வழியாகவும் செலுத்தலாம்.

நேர்காணலுக்காக இரண்டு வெவ்வேறு  நேரங்களில் முன்பதிவைச் செய்தல் வேண்டும்.  கைரேகைப் பதிவிற்கு ஒன்று. மற்றொன்று.நேர்காணலுக்கானது. குழுவாகவும் முன்பதிவு செய்யலாம். கைரேகைப் பதிவு செய்ய அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்று அவசியம் தேவை.

நேர்காணல் முடிந்த ஒரு வாரத்திற்குள் பாஸ்போர்ட், விசா, குடியேற்ற விசா உள்ளிட்ட இதர ஆவணங்கள் நாட்டில் உள்ள 33 மையங்கள் மூலமாகத் திருப்பி அளிக்கப்படும். நேர்காணலுக்கான முன்பதிவின்போதே ஆவணங்களைப் பெற்வதற்கான மையத்தையும் விண்னப்பதாரர் தேர்ந்தெடுக்க வேண்டும்.

 விசா விண்னப்ப நிலவரத்தை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். கட்டணங்களில் மாற்றம் எதுவும் இல்லை.  பல முறை சென்று வரக்கூடிய 10 ஆண்டு விசா வழங்கும் முறையும் தொடரும். அமெரிக்க விசாப் பிரிவுத் தலைமை அதிகாரி ஜூலியா ஸ்டான்லி தரும் தகவல்கள் இவை.நாளை முதல் நடைமுறையில்!

நன்றி:-
தினமணி 25, செப்டம்பர், 2012, நாளிதழ். 

0 comments:

Post a Comment

Kindly post a comment.