டாக்டர் நடேச முதலியார்
”ஜஸ்டிஸ் கட்சிக்குப் பணம் கிடையாது.இன்ன்றைய தினம் நமது கட்சிக்கு ஏதாவது செல்வாக்கு இருக்குமானால், அது நமது கட்சியில் உள்ள் அங்கத்தினர்களால் அல்ல. நமது எதிரிகளுடைய ( காங்கிரசுடுடைய ) குற்ரங் குறைகளால் நமக்கு ஏற்பட்டுள்லது ஆகும்.
இந்தச் சக்தியின் மீது நாம் பலமான அஸ்திவாரம் போட்டுக் கட்டிடம் கட்ட வேண்டியது நம் முன்னால் இருக்கும் வேலை. அப்போதுதான் தேசம் முழுமைக்கும் தானே பிரதிநிதித்துவம் வகிப்பதாகச் சொல்லும் காங்கிரசின் வேஷத்தை நம்மால் கலைக்க முடியும். தேர்தலில் நமக்கு ஜெயம் கிடைக்காது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.
பிராமணர் அல்லாதார் எல்லோரும் ஒன்றாகக் கூடிய போதிலும் நமது இயக்கத்தின் அடிப்படையான கொள்கையை மாற்ரி அமைக்காவிட்டால் நம்மால் வெற்ரி பெற முடியாது. தேர்தல்களில் ஜஸ்டிஸ் கட்சியின் பெயரால் அபேட்சகர்களாக நிற்பதற்கும் யாரும் முன் வருவதில்லை.கடந்த 20 வருடங்களாக வாழ்விலும் தாழ்விலும் (அந்நிய) அரசாங்கத்தை ஆதரித்து வந்ததால், நமது பெருமையும் பெயரும், செல்வாக்கும் இன்று சீர்குலைந்து போயின.
தற்போதுள்ள கவர்னர், காங்கிரசின் மாயையில் அகப்பட்டுக் கொண்டிருக்கிரார். பிரிட்டிஷ் அரசாங்கமே அந்த வலையில்தான் விழுந்திடுக்கிறது. இம்மாதிரியான படு மோசமான நிலைமை இத்தேசத்தில் ஒருநாளும் ஏற்பட்டதில்லை.
ஐரோப்பியர்கள் மட்டும் நமது ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தால், நமக்குச் சரியான பலம் ஏற்பட்டுவிடும்.
தமிழகத்தில் உள்ள பாமர மக்கள் திராவிட இயக்கத்தை ஆதரிக்கின்றனர். ஆனால், பிற மாநிலங்களில் இந்த இயக்கத்திற்குக் கொஞ்சம் கூட ஆதரவு கிடையாது.டாக்டர் அம்பேத்கரும் சில நண்பர்களும் இந்த இய்க்கத்தைப் பற்ரி மூச்சுக்கூட விடாதே என்று சொல்லி விட்டனர். ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள பலருக்கு இந்த எண்ணம் பிடிக்கவில்லை. இந்த அடிப்படையான லட்சியத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால் நமது இயக்கம் வெற்றி பெறப்போவது இல்லை”.
உண்மையில் இந்த உரையை 1940-ஆம் ஆண்டில் ஈ.வே.ரா. நிகழ்த்தியபோது, தமிழகத்திலும் திராவிட இயக்கத்திற்கு ஆதரவு இருந்ததில்லை.
மூத்த பத்திரிக்கையாளர் கே.சி. லட்சுமிநாராயணன் எழுதிய, திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு என்ற நூலிலில் இருந்து.
வெளியீடு ;- எல்கேஎம் பப்ளிகேஷன்ஸ், தி.நகர், சென்னை-17
2436 1141, 2434 0599
0 comments:
Post a Comment
Kindly post a comment.