Sunday, September 2, 2012

செந்தமிழ்ச் செல்வர், மொழிஞாயிறு, பாவாணரின் வாழ்க்கைச் சுருக்கம்- க.தமிழ் மல்லன்



23 உலகப் பெருமொழிகளில் இலக்கண இலக்கிய ஆராய்ச்சித் தெளிவும்,

58 உலக மொழிகளில் வேர்ச்சொல் ஆய்வறியும் கொண்ட ஒரே ஒரு 

தமிழன் ! நெல்லை தந்திட்ட செந்தமிழ் வேந்தன்! 


பாவாணரின் வாழ்க்கைப் பாதை :-

1902:-   தந்தை : ஞானமுத்து தாய் : பரிபூரணம் மதம்: சீர்திருத்தக் 

             கிறித்துவம்
   
              பிறந்த தேதி 07-02-1902. 

             பிறந்த ஊர் :சஙகரநயினார் கோவில்,

             திருநெல்வேலி மாவட்டம்.

1907(?) :- மிசெளரி நல்லஞ்சல் உலுத்தரன் விடையூழிய் நடுநிலைப் பள்ளியில்
       
                துவக்கக் கல்வி. எம்.இ.எல்.எம். MELM ஆம்பூர்.

                வழிநிலைக் கல்வி: பாளையங்கோட்டைத் திருச்சபை விடையூழியர்

              கழக  (  CMS )  உயர் நிலைப்பள்ளி 3 ஆண்டுகள். 
         
1918 :-   முதற்படிவ ஆசிரியர், நடுநிலைப்பள்ளி, சீயோன்

1922:-    உதவித் தமிழாசிரியர், கிறித்துவ உயர்நிலப்பள்ளி, ஆம்பூர்

1924:-    உதவித் தமிழாசிரியர்,திருவல்லிக்கேணி கெல்லற்று

              உயர்நிலப்பள்ளி,சென்னை

               மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் தேர்வில் வெற்றி

1925 :-  தமிழாசிரியர், கிறித்து உயர் நிலைப்பள்ளி, சென்னை

1928 :-   தலைமைத் தமிழாசிரியர், பின்லேக் கல்லூரி உயர்நிலைப் பள்ளி,

             இராச மன்னார் குடி

1930 :-    எஸ்தர் முதல் மனைவி. ஒரு பையன்.  முதல் மனைவி

               இறந்துவிட்டார்.பின்னர் நேசமணியாரை 2 ஆம் மனைவியாக

               மணத்தல்

1934 :-   இயற்றமிழ் இலக்கணம் நூல் வெளியீடு. தலைமைத் தமிழாசிரியர், ஈபர்

             மேற்காணியர் பள்ளி, புத்தூர், திருச்சி.

1936:-     கட்டுரை வரைவியல் என்னும் உரை இலக்கணம் நூல் வெளியீடு

             
1937 :-    இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடுதல்,செந்தமிழ்க்காஞ்சி முதல்

               பாகம்

1940 :-    ஒப்பியன் மொழிநூல் வெளியீடு


1942 :- தலைமைத் தமிழாசிரியர் :- முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளி,

           சென்னை

1944 :- தமிழ்த் துணைப் பேராசிரியர், சேலம் நகராண்மைக் கல்லூரி,

           இராமசாமிக் கவுண்டர், தி.வை. சொக்கப்பா ஆகியோரின் நட்பு.

           திராவிடத்  தாய் நூல்  வெளியீடு

1949:-   சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் நூல் வெளியீடு.

1950 :-  உயர்தரக் கட்டுரை இலக்கணம் (1-ஆம் பாகம் ) வெளியீடு.

1951 :- உயர்தரக் கட்டுரை இலக்கணம் (2 ஆம் பாகம்) வெளியீடு

1952 :- க.மு. பட்டம் பெறுதல், (தனி மாணாக்கர் ) சென்னைப் பல்கலைக் கழகம்

            பழந்தமிழாட்சி நூல் வெளியீடு.

1953. :- முதல் தாய் மொழி அல்லது தமிழாக்க விளக்கம் நூல் வெளியீடு


1954 :- தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் நூல் வெளியீடு

1955 ;- தமிழ்த் தொண்டுக்காகப் பாராட்டும், வெள்ளித் தட்டும் பரிசளிப்பும்

            த்மிழர் பேரவை, சேலம்.

1956:- தமிழர் திருமணம் நூல் வெளியீடு

           பல்கலைக்கழக வாசகர், அண்னாமலைப் பல்கலைக் கழகம்

1960 :- ஆட்சிச் சொல் தொகுப்பில் பங்கேற்றதைப் பாராட்டித் தமிழக ஆளுநர்

         தாமிரத்  தட்டுப் பரிசளித்தல்.

1961:- சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு- நூல் வெளியீடு.

           வாசகர் பணியினிறும் வெளியேறுதல். காட்டுப்பாடியில்

           வறியவாழ்க்கை.

           ( இச்சுழலில், தென்மொழி ஆசிரியர், பெருஞ்சித்திரனார் வசூலித்து  

             உதவிய தொகை  உருவா 2211,04 காசுகள் )

1963:-  துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு.


1966 :- இசைக்த்தமிழ்க் கலம்பகம்  ( முதல் பாகம் ) நூல் வெளியீடு

           பண்டைத் தமிழர் நாகரீகமும் பண்பாடும் நூல் வெளியீடு.

           The primary classical languge of the world -நூல் வெளியீடு

         திருச்சி துறையூரில் அக்டோபர், 16 ஆம் நாள், பொற்கிழி வழங்கும் விழா.

1967 :- தமிழ் வரலாறு நூல் வெளியீடு.

          வடமொழி வரலாறு நூல் வெளியீடு

           The language of probkem of tamizwaadu and its logical solurion        
       
            நூல்வெளியீடு

           மணி விழா-மதுரை எழுத்தாளர் மன்றம்


1968 :- இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் ? நூல் வெளியீடு.

            உலகத் தமிழ்க்  கழகம்  தோற்றம்.

          வண்ணனை மொழிநூலின் வழுவியல்  வெளியீடு.

           திருச்சி புத்தனாம் பட்டி பொற்கிழி வழங்கு விழா.

1969 :- தமிழ் கடன் கொண்டு தழைக்குமா? நூல் வெளியீடு. இசையரங்கு

          இன்னிசைக்  கோவை நூல் வெளியீடு.

         திருக்குறள் தமிழ் மரபுரை நூல் வெளியீடு.

        பெரியார் தென்மொழிக் கல்லூரி அமைப்புத் திட்ட முயற்சி.

1970    தமிழ் மொழியியல் சொற்பிறப்பியல் பணியைப் பாராட்டிச்

           சிவனியக்  கொண்முடிபு நூற்பதிப்புக் கழகம் வெள்ளித்தட்டு பரிசளித்தல்
         
1971 :- செந்தமிழ் ஞாயிறு பட்டமளிப்பு , பறம்புமலை-பாரி விழாவில்!

1972 :- தமிழர் வரலாறு, தமிழர் மதம்  நூற்கள்  வெளியீடு


1973 :- வேர்ச்சொற் கட்டுரைகள் நூல் வெளியீடு

 1974 ;- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயகுநர்-தமிழ்நாடு
       
             அரசு,சென்னை

1978 :- மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை நூல் வெளியீடு

1979 ;- தமிழிலக்கிய வரலாறு நூல் வெளியீடு

1980 :_ செந்தமிழ்ச் செல்வர் பட்டமளிப்பு- தமிழக அரசு

1981 :- சனவரி 5 உலகத் தமிழ் நாட்ட்டில் சொற்பொழிவு.

           16-01-1981 வைகறை 12.35  மறைவு.

மறைவுக்குப்பின் வெளிவந்தவை :-

           கிறித்துவக் கீர்த்தனைகள்

1985  செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி

1985:- செந்தமிழ் ஞாயிறு தேவநேயம்- பாவாணர் ஆராய்ச்சி நூலகம்.

1986:- வேர்ச் சொற் சுவடி

       சுட்டு விளக்கம்

       கட்டுரை :- கசடற

       An Epirome of the Lemurian Language And its Reaction

       தமிழர் வரலாற்றுச் உருக்கம்

பாவாணர் வெளியிடத் திட்டமிட்டிருந்த நூல்கள்:-

மண வாழ்க்கை, தொல்காப்பியத் திறனாய்வு, பழமொழி பதின்மூவாயிரம், மொழிச்சிக்கல் தீர்வு, மீண்டும் வழக்கூன்ற வேண்டுஞ் சொற்கள், மறைமலையடிகளின் வாழ்க்கை, இசைத் தமிழ்ச் சரித்திரம், சிலப்பதிகாரச் சிறப்பு, தலை நாகரீகம், Origin of Culture, தொல்காப்பிய விளக்கம், இராமசாமிக் கவுண்டர் வாழ்க்கை வரலாறு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் நெறிமுறைகள், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி 32 மடலங்கள், பொருளிலக்கண மாண்பு ஆகிய 15 நூல்கள்.

பாவாணரைப் பற்றி வெளிவந்த நூல்கள் :-

பாவாணரும் தனித்தமிழும்                                 :- மு.தமிழ்க் குடிமகன்

தேவநேயப் பாவாணரின் சொல்லாய்வுகள்  :- இளங்குமரன்

நாங்கள் காணும் பாவாணர்                 :-    தொகுப்பு.-நெய்வேலி, உ.த.க.கிளை

பாவாணர் கடிதங்கள்                                -   இரா.இளங்குமரன் (தொகுப்பு )


பாவாணர் பொன்மொழிகள்                     :- இரா.இளங்குமரன் ( தொகுப்பு )

 பாவாணர் உவமைகள்       :                       - இரா. இளங்குமரன் ( தொகுப்பு )

 புலமை சுமந்த புயல்         :                          - ய.மணிகண்டன்

நூல் உதவி :- பாவாணர் பெருமை ( வாழ்க்கை வரலாறு )

நூலாக்கம் :- க.தமிழ் மல்லன் க.மு. கல்.இ.

தனித் தமிழ்ப் பதிப்பகம்,

64, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி, 605009

தொலைபேசி 248951  - ( 2001 டிசம்பரில் )

http://www.devaneyam.net/

தேவநேயப் பாவாணர் வழிநின்று மொழி ஆய்வை ஊக்குவித்தல்; நம் அன்னைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் உறுதுணையாய் நிற்றல்; என்றும் 

எப்போதும் தமிழைத் தூயதாகப் போற்றிப் பேணல்.

தேவநேயப் பாவாணர் தொடர்பிலான அனைத்தும் இங்கு தொகுக்கப்படும்.
பாவாணர் அறக்கட்டளை
எண் 1, சோப்பியா சாலை,  #03-35, அமைதி நடுவம்,  சிங்கப்பூர் - 228149வெ.கரு.கோவலங்கண்ணன்
அறங்காவலர்கள்
நிறுவனர் / தலைவர் :வெ.கரு.கோவலங்கண்ணன்
செயலர் :கோ.பொற்கைப்பாண்டியன்
உறுப்பினர் :பொற்கைப்பாண்டியன் தேன்மொழி
கோ.திருமகள்
கோ.சிவகாமி
கோ.கண்ணன் நம்பி( 1941.10.07 - 2012.05.14 )



”தமிழயரத் தாழ்ந்தான் தமிழந் அவனே

தமிழுயரத் தானுயர்வான் தான் “

                                              பாவாணர்





     


 





 

0 comments:

Post a Comment

Kindly post a comment.