சென்னையில் உள்ள உணவு பொருள் துறையின் 15 மண்டலங்களுக்கும்
வருகின்ற சனிக்கிழமை ( நாளை ) பின்வரும் இடங்களில் குறைதீர் கூட்டம்
நடைபெறும். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்
துறையின் ஆணையாளர் பஷீர் அகம்மது வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
புதிதாக ரேஷன் அட்டை பெறுவது, முகவரி மாற்றம் செய்வது உள்ளிட்ட
பிரச்னைகள் இருந்தால் வரும் சனிக்கிழமை நடைபெறும் குறைதீர்
கூட்டத்தில் முறையிடலாம்.
சென்னையில் உணவுப் பொருள் வழங்கல் துறையின் 16 மண்டலங்களிலும்
சனிக்கிழமை ( 8-09-2012) இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து,
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின்
ஆணையாளர் பஷீர் அகமது வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சூளை பகுதி (சிதம்பரனார்) - சென்னை நடுநிலைப் பள்ளி, வாத்தியார் கந்தப்ப
தெரு, சூளை.
இராயபுரம் - சென்னை உயர்நிலைப் பள்ளி, மணிகண்டன் 8-வது தெரு, பழைய
வண்ணாரப்பேட்டை
.
பெரம்பூர் - ஜமாலியா மேல்நிலைப் பள்ளி, பெரம்பூர் ரயில் நிலையம்
பின்புறம்.
அண்ணாநகர் - சென்னை நடுநிலைப்பள்ளி, சுந்தரம் பிள்ளை தெரு,
புரசைவாக்கம்.
அம்பத்தூர் - பிரிட்டானியா உயர்நிலைப் பள்ளி, ராஜா தெரு, பாடி.
வில்லிவாக்கம் - சென்னை தொடக்கப்பள்ளி, திருவீதியம்மன் கோயில் தெரு,
கொளத்தூர்.
திருவொற்றியூர் - சி.குருமூர்த்தி வித்யாலயா உயர்நிலைப் பள்ளி,
ஆர்.வி.நகர், கொடுங்கையூர்.
ஆவடி - நகராட்சி நடுநிலைப் பள்ளி, பிள்ளையார் கோயில் தெரு,
கோவர்த்தனகிரி.
தியாகராய நகர் - அரசினர் மேல்நிலைப் பள்ளி, செட்டித் தெரு, போரூர்.
மயிலாப்பூர் - சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி,
முண்டககண்ணியம்மன் கோயில் தெரு, மயிலாப்பூர்.
பரங்கிமலை - ஜே.எம்.ஏ. நடுநிலைப் பள்ளி, பம்மல் பிரதான சாலை. பம்மல்.
தாம்பரம் - திருவஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலகம், திருவஞ்சேரி.
சைதாப்பேட்டை - சென்னை மாநகராட்சி பள்ளி, ராஜலட்சுமி நகர்,
வேளச்சேரி.
ஆயிரம்விளக்கு - சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, திருவள்ளுவர்
சாலை, வன்னிய தேனாம்பேட்டை.
சேப்பாக்சேப்கம் - சென்னை மாநகராட்சிப் பள்ளி, நாகப்ப முதலித் தெரு,
புதுப்பேட்டை.
சோழிங்கநல்லூர் - மாநகராட்சி கோட்ட அலுவலகம், கிழக்கு கடற்கரை
சாலை, கொட்டிவாக்கம்.
அந்தந்தப் பகுதியில் இயங்கும் பொறுப்பாளர் அலுவலகங்களுக்குச்
சென்றால்., விண்ணப்பங்களை வாங்கவே மறுக்கின்றனர். புதிய கார்டு
வழங்கும்போது எல்லாம் சரியாய்ப் போகும் என்ற பதிலே கிடைக்கின்றது.
மீண்டும் வற்புறுத்திக் கேட்டால், டிசம்பரில் வரச் சொல்கின்றார்கள்.
பல டிசம்பர்கள் சென்றுவிட்டன. பயன் இல்லை.
இப்போதையத் தகவல் ஒருநாள் கால அவகாசத்திலேயே நாளிதழ் களில் ( ?)
வந்துள்ளன. முழுமையான தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.
குறிப்பிட்ட அலுவலகங்களில் எத்தனை ஆண்டுகள் பழமையான கார்டாக
இருந்தாலும் பாதுக்காப்பாக வைத்திருப்பது பாராட்டத்தக்க அம்சம். இன்னும்
சிறிது முனைப்போடு செயல்பட்டால் மக்களின் ரேஷன் கார்டு
பிரச்சினைகளை முழுமையாகத் தீர்த்து விட முடியும்.
நன்றி :-தினமணி, 07-09-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.