Friday, September 7, 2012

சுய மரியாதை இயக்கத்தினரும், ஜஸ்டிஸ் கட்சியினரும் வன்முறையாளர் ஆன கதை !


1931-ல் ஈரோட்டில்  ஈ.வே.ரா. நடத்திய சுயமரியாதை மாநாடு . 

1919-ல் ஈ.வே.ரா. காங்கிரசில் சேர்ந்தார். மிகக் குறுகிய காலத்திலெயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார். இதற்கு இராஜாஜியே முழுக்காரணம் ஆவார்.  ” என்னை இராஜாஜி அவர்கள்தான் முதன் முதலில் கோயமுத்தூர் ஜில்லா காங்கிரஸ் செக்ரட்டரி ஆக்கினார். பிறகு அவர்தான் என்னைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக்கினார். நமது தலைவர்“நாயக்கர்”  என்று அழைத்ததோடு, பார்ப்பனரில் வெகுபேரை என்னைத் தலைவர் என்று அழைக்கும் படியும் செய்தார்.” இதனை
 26-12-1972-ல் விடுதலை நாளிதழின் தலையங்கத்திலே ஈ.வே.ரா.வே. எழுதியுள்ளார்.”

1924-லில் அவர் ஜஸ்டிஸ் கட்சியினர் பக்கம்  செல்ல முற்பட்டார். கடவுள் மறுப்புக்ம் கொள்கைக்காகச் சுய மரியாதை இய்க்கத்தை ஆரம்பித்தார். அவரை ஆடிரியராகக் கொண்டிருந்த “குடியரசு” பத்திரிகையும் சுய மரியாதைக் கொள்கைப் பிரசாரத்தில் ஈடுபட்டது. 1931-ல் ஈரோட்டில் சுயமரியாதை மாநாடு நடத்தினார்.

 மாநாட்டில் பங்கேற்ற ப.ஜீவானந்தம், உப்புச் சத்தியாக்கிரகத்தில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் தீவிரமாகக் கலந்து கொள்லவேண்டும் என்று வற்புறுத்திய ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

மேலும், “ சுதந்திரம் இல்லாத அடிமை நாட்டில் மக்கள் சுய மரியாதையுடன் வாழ முடியாது. எனவே இந்தியாவிற்கு முதலில் சுதந்திரம் வந்தாக வேண்டும். ஆங்கிலேயரின் ஆதிக்க ஆட்சி இந்தியாவிலிருந்து அகறறப் பட்டாக வேண்டும்” என்று ஜீவானந்தம் குறிப்பிட்டபோது, மாநாட்டில் பலத்த கைதட்டல் எழுந்தது.


ஜீவானந்தத்தின் தீர்மானத்தைக் கண்டு ஈ.வே.ரா. கதிகலங்கிப் போய்விட்டார். ஜீவாவை எதிர்ப்பதற்கு கோவை அய்யாமுத்துவைப் ப்யன்படுத்திக் கொண்டார். அவரது சூழ்ச்சியின் விளவாகத் தீர்மானம் தோல்வி கண்டது.

 “தீண்டப்படாதவர்கள் பொதுக்குளத்தில் நீர் எடுத்துக் கொள்ளும்  உரிமைக்காக நாம் முதலில் போராடுவோம்; பிறகு உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொள்வோம் “ என்று அறிவித்த அய்யாமுத்துவின் சமரசத் தீர்மானம் நிறவேற்றப்பட்டது.

” சுய மரியாதை சத்தியாக் கிரகக் கமிட்டி ஒன்றை நியமித்து, சில கோயில்களையும் குளங்களையும் தேர்ந்தெடுத்து, அங்கேல்லாம் அரிஜன மக்கள் பிரவேசத்திற்காகப் போராட்டம் நடத்துவது என்றும், 30 நாட்கள் காலவறையறைக்குள் தெரிவிக்கவேண்டும் என்றும் “ கோவை அய்யாமுத்து கொண்டு வந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இந்தத் தீர்மானங்களின்படி ஈ.வே.ரா. செயல்படவில்லை.

கோவையில் தேசிய சுய மரியாதை மாநாடு:-

  “தேசிய சுய மரியாதை “ மாநாட்டினை நடத்தினர். இந்திய விடுதலைக்கு எதிராக
ப.ஜீவானந்தமும், லோவை அய்யாமுத்துவும், இணந்து கோவையில் , “தே
” ஈ.வே.ரா.வின் சுய மரியாதை இயககம்” செயல்பட்டதை அந்த மாநாட்டில் பேசிய எல்லோரும் எதிர்த்தார்கள். உப்புச் சத்தியாக்கிரகத்தில் சுய மரியாத இயக்கத்தினர் ஈடுபட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆலயங்கள், பொதுக் குளங்கள் / கிணறுகள் ஆகியவற்றப் பயன்படுத்திட ஹரிஜன மக்களுக்கும் முழு உரிமை உண்டு என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றினர்.

”இந்த மாநாட்டில்தான், ஈரோடு மாநாட்டில் தீர்மானங்களை நிறவேற்றிவிட்டுப் பொறுப்பற்ர முறையில், மேல் நாட்டுக்குக் கப்பலேறிச் சென்றுவிட்ட ஈ.வே.ரா.விற்கு, மக்கள் சுய மரியாதையுடன் வாழ வேண்டும் என்ற விருப்பம் உண்மையிலேயே கிடையாது என்றும், இந்தியா சுதந்திரம் அடையக்கூடாது என்பதுதான் அவரதுவிருப்பம்” என்றும் ப.ஜீவானந்தம் முழக்கமிட்டார்.

மாநாடு முடிந்ததும், கோவை அய்யாமுத்துவும், ப.ஜீவானந்தமும் சுய மரியாத இயக்கத்திலிருந்து விலகினர். காங்கிரஸ் மகாசபை நடத்திய விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றனர். ஜீவா சிறந்த பெச்சாளர். கொள்கைப் பற்று மிக்கவர். இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கு கொண்ட போராளி. பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். இறுதிக்காலம் வரையில் தனி வாழ்வில் எளிமை பேணியவராக- தியாக சீலராக- வாழ்ந்தார்.

கோவை  தேசிய சுய மரியாதை மகாநாட்டின் எச்சடிக்கையை அலட்சியப்படுத்திய சுய மரியாதை இயக்கமும், ஜஸ்டிஸ் கட்சியும் வன்முறை வழிகளைப் பின்பற்றத் துவங்கின.

நன்றி :- மூத்த பத்திரிக்கையாளர் , கே.சி. லட்சுமிநாராயணன்., எழுதியுள்ள,

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான “ வரலாறு ”  Feb. 2012

எல்கேஎம் பப்ளிகேஷன், 15/4 (33/4 ) இராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17

தொலைபேசி :- 2436 1141 / 2434 0599

0 comments:

Post a Comment

Kindly post a comment.