Saturday, September 29, 2012

மருத நிலமும் பட்டாம்பூச்சிகளும்-சோலை சுந்தரபெருமாள்-தினமணிக்கு ஓர் கேள்வி ?

மருத நிலமும் பட்டாம்பூச்சிகளும் - சோலை சுந்தரபெருமாள்; பக்.296; ரூ.150; முற்றம், சென்னை-14; )98847 14603.

நூலாசிரியரின் கருத்தரங்க உரைகள், இதழ்களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல். வண்டல் நிலப் பகுதியின் குறிப்பாக தஞ்சை மாவட்ட மக்களின் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள்.

தஞ்சை மண்ணின் சாதியப் பண்பாடு, உணவு, பழக்க, வழக்கங்கள், வழிபாடு ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அம்மண்ணில் வளம்பெற்றிருந்த நிலவுடைமைச் சமூக அமைப்பே இருந்தது என்பதைச் சொல்லும் நூல்.

தஞ்சை மாவட்ட எழுத்தாளர்களின்சிறப்பான இலக்கியங்களைப் பற்றிய அறிமுகமும், விமர்சனங்களும் உள்ள கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன. நூலாசிரியர் எழுதிய புத்தக விமர்சனக் கட்டுரைகளும் உள்ளன.

இது தவிர, "கேரளம் - தமிழகம் தண்ணீர் பகிர்வுக்கான பரிந்துரைத் திட்டம்', "வல்லிக்கண்ணன் ஒரு வரலாறு', "கதைத் தொகுப்பில் கலைஞர் பெயர் விடப்பட்டுள்ளதா?',

"கல்விக்கூடங்களில் அழியும் குழந்தைமை' என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல கட்டுரைகளைத் தொகுத்திருப்பது, கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது.

’அருந்தவப் பன்றி ‘ என்று பாரதியார் நூலுக்குப் பெயர் வைத்தபோது ஏற்படாத உறுத்தல் இப்பொழுது மட்டும் ஏன் ஏற்படுகின்றது ?



0 comments:

Post a Comment

Kindly post a comment.