Saturday, September 29, 2012

எல்லாமே தனிமனித உபயோகத்திற்காகத்தான் ! வியாபாரத்திற்கல்ல ! - சிங்கப்பூர் ரமேஷ் சக்ரபாணி , இதழியலாளர் !


 அன்பிற்கினிய வலைப்பூ அன்பர்களே !

நான் பார்த்த தெரிந்த நல்லவற்றை- நல்லவர்களை மறக்காமல், மறக்காமல் பதிவு செய்யும் களம்,  “மனித தெய்வங்களும் சில சேகரிப்புக்களும் “  - rssairam.blogspot.com - -வலைப்பூ !

வெளிப்படையாகச் செய்யப்படும் செயல்கள் அனைத்திலுமே  பொது நன்மை  மேலோங்கியிருக்கும்.

http://www.openreadingroom.com http://www.openreadingroom.com இந்த இணையதளத்திலும் அத்தன்மையே ஒளிர்கின்றது. அரசியல். ஆன்மிகம், இசை, இலக்கணம். உடல்நலம், எழுத்தாளர்கள் எனப் பல பிரிவுகள் உள்ளன.  அனைத்தின் மூலமாகவும் தமிழை உலகம் முழுவதும் உலாவரச் செய்து வருகின்றார்.

அசோக மித்திரனும் கிடைப்பார். சின்னப்பா பாகவதரின் கதையையும்   படிக்கலாம். விந்தனும் நமக்காகக் காத்திருக்கின்றார். ஸ்ரீரங்கம் சுஜாதாவும் , குன்றக்குடி அடிகளாரும் உலா வருகின்றனர்.நாம் எதிர்பார்க்கும் பல படைப்பாளிகளின் பங்களிப்பும் உண்டு. வல்லிக்கண்ணனின் பெயர்க் காரணமும் தெரியவரும்.

சிறியன் சிந்திக்காத வல்லிக்கண்ணனும் அன்புடன் அழைக்கின்றார். “ சிறியன சிந்தியாதான், வல்லிக்கண்ணன் “ என்பது ஒரு நூலின் தலைப்பு. இதுபோன்று, ஒருவரைப் புகழ்ந்துரைக்கும் வார்த்தைகள் விக்கிபீடியாவில் இடம்பெறக் கூடாதாம். தமிழ் விக்கிபீடியா பொறுப்பாளர்கள் அதனை நீக்கிவிட்டனர். ஆனால், அந்த நூல் தந்த விபரங்கள் முழுவதையும் ஏற்றுக் கொண்டு விட்டனர். இத்தகு  தடைகளைத் தகர்த்து, தெரிந்த நல்ல ஆவணப்பதிவுகளை  தமிழ் விக்கிபீடியாக்களில் உருவாக்கிட இதுபோன்றதளங்களும், ,அவற்றை இயக்குவோரும் துணை நிற்பர் என்பதே எம்போன்றோர் எதிர்பார்ப்பு.

எல்லாவற்றிற்கும் மேலாக இவ்வலைத்தளத்தில் இன்னொரு சிறப்பான வசதியும் இருக்கின்றது. அது ரகசியம். பரம ரகசியம். தெரிந்துகொள்ள விரும்புவோர் செல்க. காண்க. பயன்படுத்திப் பலன் பெறுக.  

எல்லாமே தனிமனித உபயோகத்திற்காகத்தான் !  வியாபாரத்திற்கல்ல !   

இணையதள உரிமையாளர் என்ன சொல்கின்றார்?

Openreadingroom.com is a work in progress primarily aimed at creating a central repository of Tamil literary works in the public domain for free download. Close to a thousand works are now permanently available at a single resource for the benefit of the Tamil diaspora scattered across the globe.

The project was conceptualized and commissioned by Ramesh Chakrapani, a Singapore-based journalist and Tamil enthusiast.

The free Internet Tamil library includes a wide range of narrative prose such as the novel, the short story, autobiography, travelogue, commentary, children’s literature and translation. Many of the writers featured here played an integral role in the evolution of contemporary Tamil literature. We hope you find the content useful and the web site easy to navigate.

Do let us know how we can do better, and please spread the word.The First 1,000!  (old)

Today, our little Tamil archive hit the 1,000 mark! It is also, coincidentally, the day of the birth of this blog. There are now officially more than one thousand Tamil books for download, and that includes entire novels, short stories, anthologies, poetry collections, essays and essay collections, travelogues, plays and plenty of other category non-fiction. The number of individual works, of course, has long crossed the 1,000 mark since many of the files are collections.

We hope you find this site useful. We plan to keep adding as much public domain material as we can locate and organize. Please spread the word if you liked our little corner of the Web. Feedback and suggestions on content and design are most welcome.

1 comments:

  1. Hi Rama Samy

    Thanks a ton for the excellent writeup on my free library. I hope the word spreads even further and more people benefit from it.

    Cheers

    Ramesh Chakrapani

    ReplyDelete

Kindly post a comment.