28 தேதியுடன் சென்னை எழும்பூரில் முடிவடைந்த தொல்லியல் கன்காட்சியின்போது பல புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன.
அவற்றுள் கொடுமணல் அகழ்வாய்வு என்ற நூலும், தமிழ்க்கீர்த்தனைகள் என்ற நூலும் கருத்தைக் கவர்ந்தன.
சுமார் 112 பக்கங்கள் கொண்ட தமிழ்க்கீர்த்தனைகள் புத்தகம்விலை குறிப்பிடப்ப்டாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. விலைப்பட்டியலில் குறிப்பிட்டிருந்த ரூபாய் 37/-
1993-ல் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை சென்னை-113-லிருந்து 500 பிரதிகள் வெளியிடப்பட்டிருந்தன. இதன் பதிப்பாசிரியர், ஆர்.வசந்த கல்யாணி எம்.ஏ. கல்வெட்டாய்வாளர் , தொல்பொருள் ஆய்வுத் துறை. பொறுப்பாசிரியர், நடன.காசிநாதன், எம்.ஏ. இயக்குநர், தொல்பொருள் ஆய்வுத் துறை.
கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இசைப்பாடல்கள் யாவும் தெலுங்கில் இயற்றப்பட்டு வேகமாகப் பரவி வந்தன. இச்சூழலில், வாழ்ந்த உடையார் பாளையம், அரியலூர் ஜமீந்தார்கள், கபித்தலம் இராமபத்திர மூப்பனார், அவர் தந்தையார் முத்தைய மூப்பனார், இஞ்சிக்கொல்லை வேங்கடராமன் போன்றவர்கள் தமிழிசைக் கலைஞ்ர்களுக்குக் கொடுத்த ஆதரவும் மதிப்பும், அப்போது இயற்றப்பட்ட தமிழ்க் கீர்த்தனைகள் வாயிலாகத் தெரிய வருகின்றன.
அவற்றுள் கிடைத்த,
முத்துத்தாண்டவர் கீர்த்தனைகள் 2
கனம் கிருஷ்ணையர் கீர்த்தனைகள் 31
பாலகவி சண்பகமன்னார் கீர்த்தனைகள் 11
பால சரஸ்வதி கீர்த்தனை 1
இயற்றியவர் பெயர் தெரியாதவை 4 - ஆக மொத்தம் 60 தமிழ்க்
கீர்த்தனைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
பாட்டு எண் : 1 கீர்த்தனை:- 1
தளு: தோடி ராகம் ஜம்பை தாளம்

பல்லவி
அம்பர சிதம்பர சதானந்த
அடிகள் மறவாதருளும் அனுதினமே ( அம்பர )
அனுபல்லவி
செம்பொன் மலைச் சிலைவளைத்த திவ்விய பரமானந்த
சம்போ சிவசங்கர ஸ்ரீதாண்டவ நடேசா ! ( அம்பர )
சரணம்
கங்கை மதி அரவசைய காதிற் குழை அசைய
செங்கைமழு துடிஅசைய செய்ய ஜடை அசைய
பொங்குபுலி யதளசைய பொற்பாதச் சிலம்பசைய
மங்கைசிவ காமவல்லி மகிழ நடம் புரியும் ( அம்பர )
நின்மல நிரலாம்ப நிர்க்குண நிரஞ்சன
சின்மயானந்த பர சிற்குண சொரூபா !
வன்மலங்கள் நீக்கியருள் வாரியுரவே எனது
புன்மையற உமைக்காணப் பொதுவில் நடம்புரியும் ( அம்பர )
துங்கமறை ஆகமங்கள் சொன்னவிதி வழுவலாமா ?
சிங்கார மாமகங்கள் செய்து தினந்தினமும்
மங்காத நீறுபுனை வைதிக மூவாயிரவர்
நங்கோ வென்றே பரவநாளும் நடம்புரியும் ( அம்பர )
இந்தக் கீர்த்தனை தமிழிசை மூவர் என்று பாரட்டப்பட்டவருள் முதல்வரான
முத்துத் தாண்டவர் கீர்த்தனைகளுள் ஒன்று. எடுத்துக்காட்டாக இங்கே பதியப்பட்டது. இதரக் கீர்த்தனைகள் விபரங்களைத் தெரிவித்தால் நன்றி உடையவராவோராவோம்.
ஆடினது எப்படியோ (கல்யாணி ராகம்)கீர்த்தனை வரிகள் தெரிந்தால் எழுதவும்
ReplyDelete01.பூலோக கைலாயகிரி சிதம்பரம் அல்லால்
ReplyDeleteபுவனத்தில் வேறும் உண்டோ....
02. பேசாதே நெஞ்சமே பேசாதே
03. காணாமல் வீணில் காலங் கழித்தோமே - காணாமல்
04. தெரிசனம் செய்வேனே முத்தி கொடுக்கும்
திகழ் அம்பல வாணனைத் -தெரிசனம்
05. கண்டபின் கண்குளிர்ந்தேன் -பிறவிக்
கடலைக் கரைகடந்தேன்
06. அருமருந்தொரு தனிமருந்திது
அம்பலத்தே கண்டேன் -அருமருந்
07. தெண்டனிட்டே னென்று சொல்லுவீர் -
நடேசர்க்கு நான் - தெண்டனிட்டே
08. மாணிக்க வாசகர் பேறெனக்குத்தர
வல்லாயோ அறியேன் - மாணிக்க
09. ஆடிக்கொண்டா ரந்த வேடிக்கை காணக்கண்
ஆயிரம் வேண்டாமோ -ஆடிக்
10. சேவிக்க வேண்டுமையா -சிதம்பரம்
சேவிக்க வேண்டுமையா - சேவிக்க
11. தெருவில் வாரானோ - என்னைச் சற்றே
திரும்பிப் பாரானோ -தெருவில்
ஆகிய பாடல்களும், முத்துத்தாண்டவர் மீது கலைமாமணி வரகூர் ஆ.சு. முத்துகுமாரசாமி பாடிய 7-ம் கைவசம் உள்ளன.
ஆர்வலர் அணுகுக.
பல்லவி:
ReplyDeleteஆடிக்கொண்டார் அந்த வேடிக்கைக் காணக்
கண் ஆயிரம் வேண்டாமோ
அனுபல்லவி:
நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர் நம்பர்
திருச்செம்பொன் அம்பலவாணர் (ஆடிக்கொண்டார்)
சரணம்1:
பங்கய சிலம்பைந்தாடப் பாதச்
சதங்கைகள் கிண்கிண்ணென்றாட
பொங்கமுடனே உரித்து உடுத்த புலித்தோல் அசைந்தாட
செங்கையில் ஏந்திய மான் மழுவாட
செம்பொற்க்கழற்க் கண் முயலகனாட
கங்கை இளம் பிறை செஞ்சடையாடக்
கனக சபை தனிலே (ஆடிக்கொண்டார்)
சரணம்2:
ஆர நவமணி மாலைகளாட ஆடும் அரவம் படம் விரித்தாட
சீரணிக் கொன்றை மலர்த் தொடையாடச் சிதம்பரத்தேர் ஆட
பேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேர்களும் பூஜித்துக் கொண்டு நின்றாட
காரணி காளி எதிர்த்து நின்றாடக் கனக சபை தனிலே (ஆடிக்கொண்டார்)
சரணம்3:
ந்ரித்த கணபதி வேலர் நின்றாட நின்றயன் மாலுடன் இந்திரன் ஆட
முப்பத்து முக்கோடி தேவருடனே முனிவரும் நின்றாட
மெய்ப்பதி மேவும் பதஞ்சலி ஆட வ்யாக்ர பாதரும் நந்தியுமாட
ஒப்பற்ற சிவகாமி அம்மையும் கூடவே நின்றாட (ஆடிக்கொண்டார்
Another Muttut tANDavar song:
ReplyDeleteபல்லவி:
ஆரார் ஆசைப் படார் நின் பாதத்துக்கு ஆரார் ஆசைப்படார்
அனுபல்லவி:
அருள் பாராய் பதம் தாராய் துயர் தீராய் புலியூராய் நின் பாதத்துக்கு
சரணம் 1
கனக மேனியன் பன்னக சயனனோடு கஞ்சன் புலி பதஞ்சலி போற்ற
அனவரதமும் கனக சபையுள் நின்றாடி சிவம் தனைத்-தேடிய பாதத்துக்கு
கஞ்சன் = பிரமன் புலி= வ்யாக்ரபாதர் பதஞ்சலி= ஆதிசேஷன்
------------------------
சரணம் 2
பாலித்த வேங்கனல் போலுற்ற அந்தகன் பாசத்தின் மேவியே தேசிப்பதேதுனை
சேவித்த வேளையிலே முக்தி பாலிக்கும் தேவே எனையாண்ட கோவே நின் பாதத்துக்கு
அந்தகன் = யமன். MarkaNDan episode
--------------------------------------
சரணம் 3
அருவரை தன்னை இருபது கையால் அசைத்துப் பலன் கொண்டெடுத்த ராவணன்
ஒருபது சிரமும் நெரியவே முன்னாள் ஒரு விரல் ஊன்றும் மருமலர்ப் பாதத்துக்கு
அருவரை = கைலாய மலை
----------------------
சரணம் 4
மூவாயிரவரும் பூவார் மனிதரும் முப்பத்து முக்கோடி தேவர் முனிவரும்
தேவாதி தேவனே வா வாவென்றேத்திடும் தேசா சிவகாமி நேசா நின் பாதத்துக்கு
நண்பர் எஸ்.சுப்பிரமணியம் அவர்களுக்கு நன்றி. தாங்கள் அனுப்பியுள்ள இரு கீர்த்தனைகளின் இராகம் மற்றும் தாளம் இரண்டையும் அனுப்புவித்தால் ஆவணமாகும். நன்றி. தமிழ் விக்கிபீடியாவையும் பார்க்கக் கோருகின்றேன்.
ReplyDeleteஇரண்டாவது பாடலுக்கு மட்டும் தெரிவித்தால் போதும். நன்றி.
DeleteADik KoNDAr anda vEDikkai---mAyAmALavagauLa rAgam, Adi tALam
ReplyDeleteArAr AsaippaDAr---shankarAbharaNam rAgam, misra jhampa tALam
தமிழில் எழுதி அனுப்பினால் நலம்.
ReplyDelete