Sunday, September 30, 2012

கற்பதோடு கேட்டலும் நன்று- ஸ்டேன்லியில் மெடிகிளப் துவக்கம் !




ஸ்டான்லி மருத்துவ கல்லூரி இளங்கலை மாணவர்கள் நல்லதொரு   முன்முயற்சியில் இறங்கியுள்ளனர். Medi Club ஒன்றைத் துவக்கியுள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை   நிகழ்ச்சியை நடத்திடத் திட்டமிட்டுள்ளனர். எச் பிரவீண், இறுதி ஆண்டு MBBS மாணவர் Mediclub  அமைப்பின் செயலாளராக உள்ளார்.,

கதிர்வீச்சியல் என்ற விரிவுரையுடன் முதல் கூட்டம் தொடங்கியது. கதிரியக்க சிகிச்சைத் துறை, சி அமர்நாத் இரண்டு மணி நேரம் விளக்கவுரை ஆற்றினார்.. சென்ற வெள்ளியன்று நடந்த மேற்படி கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். மாணாக்கர்கள் பங்கேற்றனர். 

கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவ கல்லூரி மற்றும் திருச்சி உள்ள KAP விஸ்வநாதன் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.  ஸ்டான்லி மருத்துவ கல்லூரி டீன் ."சி கீதாலட்சுமியும் பங்கேற்றுச் சிறப்பித்தார்...   

மெடி கிளப்பிற்காக நாற்பது உறுப்பினர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாடு முழுவதும் இருந்து பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்களை அழைக்க திட்டமிட்டுச் செயலாற்றுவர்.. வரும் மாதங்களில் மற்ற நிகழ்வுகளத் தொடர்ச்சியாக நடத்திடவும்  திட்டமிட்டுள்ளது.

புற்றுநோய் குறித்ததொரு  ஆராய்ச்சிப் பட்டறை , அத்துடன் சொற்பொழிவுகளை இந்த ஆண்டு  நடத்திடவும் திட்டமிட்டுள்ளனர்.

\"எங்களது   ஸ்டேன்லியில் மெடி கிளப் .  நன்றாக இயங்கினால்,  ஆண்டுகளுக்கு ஒரு ஜோடி மருத்துவ மாணாக்கர்களை  மற்ற மாநிலங்களில் இருந்து  அழைக்கவும் முடியும் என்று நம்புவதாகப் "பிரவீண் கூறினார். 

இவ்வரிசையில்  சங்கங்களில் இந்திய  மருத்துவ மாணவர் சங்கம்,  திருச்சியில் இயங்கிவரும் இசிஜி-எகோ-கிளப் அகியவற்றக் குறிப்பிடலாம். எங்களது மெடி கிளப்பும் அவற்றைப் போன்று மிகச் சிறப்பாக நடைபெறும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.
















0 comments:

Post a Comment

Kindly post a comment.