இராம குருநாதன் மற்றும் மொழி பெயர்ப்பாளர் கெளரி
சங்க இலக்கியம் என்ற தலைப்பில்
சாகித்ய அகாதெமி உறுப்பினர் இராம. குருநாதன் பேசியது:
சங்க இலக்கியங்கள் தமிழர்களது வாழ்க்கையை அகம், புறம் என இருவகையில் வெளிப்படுத்துவதாக உள்ளன. இதில் காதல் வாழ்க்கையை அதிகமாக சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.
சங்க இலக்கியப் பாடல்கள் காட்சியை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும்படியாக மிக நுட்பமாக அமைக்கப்பட்டுள்ளன. தமிழர் வாழ்க்கையை நில அடிப்படையில் சங்க இலக்கியங்களில் பாடியுள்ளனர். வாழ்க்கையை மலர் என்றால், அதன் இன்பத்தை மலரில் உள்ள தேனுக்குச்சமமாக பாடியுள்ளனர்.
சங்க கால காதலுக்கு சாதி, மதம் இல்லை என்பதற்கு பல பாடல்கள் சான்றாக உள்ளன. புறத்தில் தமிழரின் வீரத்தை காட்டுவதாக பாடல்கள் அமைந்துள்ளன. மாநாட்டின் மூலம் நாம் தற்போது ஒன்றுபட்டுள்ளோம். இதுபோல தமிழர் ஒன்றுபட்டால் நம்மை எதிர்க்கும் சக்தி எதுவுமில்லை என்றார் ராம.குருநாதன்.
தில்லித் தமிழ்ச் சங்கமும்\\தினமணி நாளிதழும் இணந்து அனைத்திந்திய தமிழ்ச் சங்கங்களையும் புது தில்லியில், இம்மாதம், 15, 16 தேதிகளில் ஐக்கியப்படுத்திக்காட்டிய புதுமைக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஒரே ஒரு தமிழ் வலைப் பதிவரின் விழாத் தொகுப்பு.
உதவி, தினமணி, புதுதில்லி., 16, செப்டம்பர், 2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.