-
சில மாதங்களுக்கு முன் நமது திட்டக்குழு வறுமைக் கோட்டிற்கு ஒரு வரையறை செய்து நாட்டை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. தற்போது 12-வது ஐந் தாண்டுத் திட்ட ஆவணத்தில் மக்க ளுக்கு உடல்நலப் பராமரிப்பு அளிக்கும் கடமை யிலிருந்து அரசு விலகிக் கொண்டு, ஐந்து நட்சத்திர மருத்துவமனைகள் வசம் அதைத் தள்ளிவிட வேண்டும் என்ற நோக்கில் ஒரு பரிந்துரையைச் செய்து மற்றுமொரு அதிர்ச்சியை அளித்துள் ளது.
மக்கள் உடல்நலத்திற்கென அரசு ஒதுக்கும் நிதி மொத்த தேசிய உற்பத்தி யில் 1.1 சதவீதத்திற்கு மேல் உயராமல் நீண்ட காலமாகத் தேங்கி நிற்கிறது. இதை உயர்த்த வேண்டும் என்று பல ஐந்தாண் டுத் திட்ட ஆவணங்கள் இலக்கு நிர்ணயிப்பது வழக்கம். ஆனால் ஒரு போதும் இலக்கை எட்டும் அளவிற்கு அரசிடம் முனைப்பு இருந்ததில்லை.
ஆட்சியாளர் கள் தம்பட்டமடித்துக் கொள்ளும் தாரா ளமயக் கொள்கைகள் அமலுக்கு வந்து 20 ஆண்டுகள் கழித்து என்ன நிலை மை? உடல்நலக் குறியீடுகளில் பங்க ளாதேஷ், நேபாளம் ஆகிய நாடு களைவிட இந்தியா பின்தங் கியிருக்கிறது. தென் ஆசியாவில் நமக்கும் பின்னால் வரிசையில் நிற்கும் நாடு எது எனத் திரும்பிப் பார்த்தால், பாகிஸ்தான் மட் டுமே நிற்கிறது! (பிறக்கும் 1000 குழந் தைகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தை களின் இறப்பு விகிதம் பங்களாதேஷில் 48, நேபாளத்தில் 50, இந்தியாவில் 63, பாகிஸ்தானில் 87).
நவீன தாராளமயக் கட்டமைப்பில் உடல் நலத் துறைச் சீர்திருத்தங்கள் என் பது மெக்சிகோ, கொலம்பியா, இந்தியா ஆகிய நாடுகளில் ஒரே மாதிரியான திசையில் தான் பயணிக்கின்றன. 30 ஆண்டு களுக்கு முன் உலக வங்கியும் சர்வதேச நிதியமும் சுகாதாரத் துறையில் அரசு செலவினத்தைக் குறைக்க வேண் டும்,..அரசு மருத்துவமனைகளில் பயனா ளிக் கட்டண முறையை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற பல கடு மையான நிபந்தனைகளை வளரும் நாடுகள் மீது விதித்தன.
அரசு செய்து வந்த மருத்துவ சேவை படிப்படியாகக் கட்டுப்படுத்தப்பட்டு திட்டமிட்ட முறையில் தனியார் மருத்துவமனைகள் வளர்ந்து வந்ததற்கு அந்த நிபந்தனைகளே காரணம். சென்ற நூற்றாண்டு இறுதியில் உலக வங்கி-ஐஎம்எஃப்பின் விருப்பங் கள் அநேகமாக நிறைவேறிவிட்டன. அதேசமயம் சுகாதாரத் துறையை அரசு கைகழுவிவிடும் போக்கிற்கு எதிராக மக் கள் இயக்கங்களும் பொதுக் கருத்தும் வலுவாக எழுந்தன. அத்துறையில் அரசு தன் செலவினத்தைக் கூட்ட வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்தது.
ஐ.மு.கூட்டணி-1 ஆட் சியின்போது இடதுசாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக அரசு தேசிய ஊரக உடல்நலப் பராமரிப்புத் திட்டத்தைத் தொடங் கியது. உளப்பூர்வமாகச் செய்வதற்கும் ஒப்புக்குச் செய்வதற்கும் வித்தியாசம் உண்டல்லவா? என்ஆர்எச்எம் திட்டத்திற் குப் போதுமான நிதி ஒதுக்காததால் அது அரசின் சவலைப் பிள்ளையாகத்தான் இருந்தது.
கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை சிகிச்சைக் கான வசதிகளைச் செய்வது, போதுமான அளவில் மருத்துவர்களையும் செவிலி யர்களையும் நியமிப்பது, அவர்கள் அங்கு மனநிறைவோடு பணியாற்றக் கூடிய சூழலை ஏற்படுத்துவது, மருத்துவ சேவை சரிவர நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்கும் ஏற்பாடுகளைச் செய்வது போன்ற எதிலும் அரசு குறிப்பிடத்தகுந்த அளவில் கவனம் செலுத்தவில்லை.
மருத்துவத் துறைக்கு அரசு செலவிடும் நிதியினால் பலன் அடைபவர்கள் மக் களாக இல்லாமல் தனியார் மருத்துவ மனை முதலாளிகளாக இருக்குமாறு அரசு பார்த்துக்கொண்டது. அதற்காக அரசு வகுத்த ஒரு தந்திரம்தான் `ராஜீவ் காந்தி ஸ்வஸ்திகா பீமா யோஜனா’ என்ற பெயரில் பல மாநிலங்களில் தொடங் கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள்.
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங் களுக்கு 30,000 ரூபாய் அளவுக்கு உடல் நலக் காப்பீட்டுப் பாதுகாப்பு அளிப்பது, அந்தக் காப்பீட்டுத் தொகையை அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் தனியார் மருத்துவமனைகளுக்குத் தாரைவார்ப் பது என்பதுதான் இந்த சூப்பர் இன் சூரன்ஸ் திட்டம்.
அறுவை சிகிச்சை தேவையில்லாத போதும் அந்த சிகிச்சையைச் செய்து கொள்ளையடித்த காரணத்திற்காக 22 தனியார் மருத் துவமனைகளின் மீது அண்மையில் சத்தீஸ்கர் அரசு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இது ஓர் உதாரணம்தான்.
தனியார் மருத்துவமனைகளை ஊட்டி வளர்ப்பது என்ற அரசின் முடிவு மக் களின் உடல்நலத்தைப் பாதுகாக்க எந்த உத்தரவாதத்தையும் அளிக்கப் போவ தில்லை.
(உதவிய கட்டுரை :
பீப்பிள்ஸ் டெமாக்ரசியில்
அமித் சென்குப்தா எழுதியது)
நன்றி :- தீக்கதிர், 03-09-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.