Tuesday, September 4, 2012

8 மணி நேர வேலைக்காகப் போராடும் மருந்து விற்பனைப் பிரதிநிதிகளும், பொது மக்களின்i வினாக்களும் ?




மருந்துகளைக் கொண்ட கைப்பை, டையுடன் கூடிய ஆடையணிந்த நல்ல தோற்றமுடைய ஆடவர்/ மகளிர், ஊர்வலம் செல்ல இரு சக்கர வண்டிகள் தேனீயினும் மேலாகச் சுறுசுறுப்புடன் இயங்கும் மருந்து விற்பனைப் பிரதிநிதிகளைக் கண்டால், இது போன்றதொரு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலே எல்லோருக்கும் எழும்.

ஆனால் அவர்களுக்குத்தான் எத்தனை எத்தனை பிரச்சினைகள் ?

 1) மகிழ்வுடன் திருமணம் முடிந்த தினத்தன்றே, ஓர் மருந்தாளுநரை, உங்கள்
    வேலை    மீது தலைமைக்குத் திருப்தி இல்லை, உடனடியாக நேரில்      
    தலைமையகம் செல்லவும்.  அல்லது என்னிடம் வந்து வேலைநீக்க
   அனுமதியைப் பெற்றுக் கொள்ளவும் என்ற    தந்தி வருகின்றது.  
   முதலிரவைக் கொண்டாடுவாரா? அல்லது தலைமையகம்  செல்வாரா ?
   டிஸ்மிஸ் ஆர்டரை   வாங்கிக் கொள்வாரா? மொத்தத்தில் அவர் வேலை 
  போய்விட்டது என்பதைச் சொல்லித்ன் தெரிய வேண்டியதில்லை. .

2)  15 ஆண்டுகள் பணிக்காலம் கொண்டவரும், சிறந்த மருந்து விற்பனைப்
     பிரதிநிதியும்,    பல்வேறு மருந்து விற்பனைக் கடைகளுடனும்,        
     மருத்துவர்களுடனும்  தொடர்புடையவருமான ஒருவரை, அவர் வேலை
     பார்த்த நிர்வாகத் தலைமை திடீரென்று காரண காரியங்களின்றி
     வேலைநீக்கம் செய்து விடுகின்றது.

3)   எட்டு வருடங்களுக்குள் மூன்று நிறுவனங்களுக்கு மாறிட வேண்டிய
      நிர்ப்பந்தம் நிறுவனங்களின் தந்திரோபாயங்கள், துபுறுத்தல், பழிவாங்குதல்        
      என  எல்லாவற்றையும் சந்திக்க வேண்டியிருந்தது. தற்போதைய
      நிறுவனத்திடமிருந்து நான்கு மாதங்களாகச் சம்பளம் வரவே இல்லை

 இவை எல்லாம் 2003 இந்துவில் வெளியான செய்திகளின் ஒரு பகுதிதான்!
 இவை எல்லாம் இன்றும் தொடர்கதைதான்!


மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்காக sales promotion Employees
( Condirions of Services ) Act (SPE Act ) -1976-இயற்றப்பட்டது. நிர்வாகங்கள் அனைத்துச் சட்டங்களையும் முறையாக அமுல் படுத்துவதில்லை.

இந்தியத் தொழிலாளர் தகராறு சட்டம் ( ID Act ) பிரிவு 2 (S)-ல் விற்பனை அபிவிருத்திப் பணியாளர்கள் சேர்க்கப்பட்டு  8 மணி நேர வேலை  செய்யும் தொழிலாளி”  ஆககப்படல் வேண்டும். இக்கோரிக்கைகளை ஆந்திரா, திரிபுரா, அஸ்ஸாம், மேகாலயா, மேற்குவங்காளம்,நாகாலாந்து, பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களும், சத்தீஸ்கர் யூனியன் பிரதேசமும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்திவிட்டன.தமிழக அரசும் விரைவில் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கின்றனர்.

1மணிநேர உணவு இடைவேளை, 1 மணி நேரம் அலுவலகப் பணிகளுக்காக, 6 மணி நேரம் களப் பணி ஆக மொத்தம் 8 மணிநேர வேலைநேரமாக அறிவிக்கப்படல் வேண்டும். கோரிக்கைமனு 2008-டிசம்பரில் தொழிலாளர் ஆணையரிடமும், 2011 ஜூனில் தொழிலாளர் துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

குறைந்தபட்ச ஊதியம் 10000/- வேலை நிர்ணயம், பெண்களுக்கு 6 மாதகால பேறுகால விடுப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகஉக்காக மத்திய,மாநில அரசுகளிடம் போராடி வருகின்றோம். வேலைநீக்கம், இடமாற்றம், ஊதிய முடக்கம் போன்ற பல்வேறு இன்னல்களும் தொடர்கதையாகி வருகின்றன.

பையைத் தூக்கிக்கொண்டு டாக்டர்கள், மருந்துக் கடைகள் என அலையும் மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குக் குறந்தபட்சச் சம்பளம் 10000 கூட இல்லை என்பது வியப்பிற்குரிய தகவல்.

உஙகள் கோரிக்கை வெற்றி பெற வாழ்த்துகின்ரோம். அதே நேரத்தில்,

வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் விற்பனை செய்யப் படுகின்றனவா?.

உற்பத்தி விலையைவிடப் பன்மடங்கு லாபம் வைத்து மருந்துகள்
விற்கப்ப்படுகின்றன என்று கூறப்படுகின்றதே அது எந்த அளவிற்கு உண்மை?
லாப% இத்தனை அளவிற்குமேல் போகக்கூடாது என்று அரசாங்கம் கட்டுப் படுத்துகின்றதா?

புற்றீசல்கள் போல் தோன்றி, திடீரென்று காணாமற் போய்விடும் மருந்துக் கம்பெனிகளைக் கட்டுப்படுத்திட வழி என்ன ?

என்பன போன்ற மக்களின் வினாக்களுக்கும்விடயளிக்க வேண்டிய கடமையும் மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கு உண்டு என்பதையும் நினைவூட்டுகின்றோம்

அறிவிக்கை உதவி ;_

தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கம்
3, கம்பர் தெரு, அபித் காலனி, சைதாப்பேட்டை, சென்னை-600 015

தொலைபேசி :- 2381 2792 மின்னஞ்சல் ;- rnmsra@hotmail.com

TNMSRA

.

.


0 comments:

Post a Comment

Kindly post a comment.