Tuesday, September 4, 2012

மாணிக்க வாசகர் பேரெனக்கு! - முத்துத்தாண்டவர் வரலாற்றுச் சுருக்கம்.!

தமிழிசை மூவரைப்பற்றி நீண்டகால்  இடைவெளிக்குப்பின் வந்துள்ள நூல்.

சீர்காழி மூவருடன் நாமும்சேர்ந்து வாழும் எண்ணத்தை ஏபடுத்திவிடும் நூல்.

டாக்டர் சுதா சேஷய்யன் ஆன்மிகப்பணியில் ஈடிணை சொல்ல இயலாத நூல் .



நூலாசிரியர் அறிமுகம் :-

சுதா சேஷையன் முனைவர் பட்டம் பெற்றவரல்ல, உண்மையிலேயே ஒரு டாக்டர். மருத்துவருக்கு இவ்வளவு தமிழாற்றலா? நம்ப முடியவில்லை. ஆனால், உண்மை! நம்பித்தான் ஆகவேண்டும். தமிழிசை மூவர் குறித்த தகவல்களைத் தேடிக்கொண்டிருந்தபோது, ஈவேரா இயக்கம் குழந்தைகளுக்காக “பிஞ்சு” என்றொரு இணைய இதழை நடத்துவது பார்வையில் பட்டது. அது,

முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோரைப்பற்றிய தகவல்களைக் கொஞ்சம் தமிழிலேயே தந்தது.

அதன் பின் ஓரிரு தினங்களிலேயே ஞாயிற்றுக் கிழமையும் வந்தது,
தினமணிக் கதிருடன்!

 உள்ளே முதலில் நான் பார்ப்பது புதிய புத்தகங்களைப் பற்றிய செய்திகளைத்தான்! சீர்காழி மூவர் எழுதியவர்,
டாக்டர் சுதா சேஷையன்.

போதிய தகவல்கலே கிடைக்காத சூழலில், தமிழ்த்தாத்தா உ.வே.சா. போன்று அரிதின் முயன்று, தகவல்களச் சேகரித்து, நேரில் தமிழிசை மூவருடன் வாழ்ந்து கண்ட அனுபவத்தைத்தந்து, நம்மை அவர்கள் காலத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டார்.

மாலையில் டிரஸ்ட் புரத்தில் ஓர் திருமணம் ஆனால், நான் முதலில் சென்றது, மேற்படி புத்தகத்தை வெளியிட்ட LKM, Publicarions, 33/4 (15/4)  Thiyakarayanagar, Chennai -600 017. புத்தகத்தை வாங்கியதும் பெருமகிழ்ச்சி.  9940682929

சென்னை மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் துறையில் இயக்குநராகப் பணியாற்றுகின்றார். முன்னர், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் பதிவாளராகவும் இருந்தார். " CTAY'S ANATOMY " என்ற சர்வதேச வல்லுநர் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். பிரிட்டானிகா தமிழ்க்கலைக் களஞ்சியத்தின் பதிப்பு மற்றும் தொகுப்பாசிரியர்.

இவரது ஆன்மிக ஈடுபாடு அளப்பரியது. எண்ணற்ற சொற்பொழிவுகள், ஏறாத மேடை கிடையாது. தமிழ அரசின் முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்.

தேவாரத் திருவுலா, ஸ்ரீலலிதா, ஸ்ரீ மத்வர், இந்த நூற்றாண்டில் இந்துமதம், மருத்துவக் களஞ்சியம், Fighiting blood pressure, Arthritis, குடும்பமும் தேசமும்
 ( டாக்டர் அப்துல்கலாம் எழுதிய Family and the Nation -நூலின் மொழிபெயர்ப்பு ),  சீர்காழி மூவர்  ஆகியவை.

பிரவசன சூடாமணி, சுதா சார வர்ஷினி, ஞானத் தமிழ் வாணி, அருள் மொழி அரசி, பாரதி இலக்கியச் செல்வர், கலைமாமணி ஆகியவை இவர் வாங்கியுள்ள விருதுகளில் சில. பெறவிருக்கும் பட்டங்களோ பல.

மனம் உருகுது விழி புனல் பூணுது, இன்னும் ஒருதரம், சேவிக்க வேண்டுமையா,  ஆருக்குத்தான் தெரியும், பூலோகக் கைலாசகிரி, ஆடிய வேடிக்கை பாரீர்,
அம்பர சிதம்பரம், தெண்டனிட்டேன் என்று, மனமறியாமலே மையல் கொண்டேன், வருவார் வருவார், மாயா வித்தை செய்கிஆனே, அருமருந்தொரு தனிமருந்து,
தெருவில் வாரானோ, மாணிக்க வாசகர் பேரெனக்கு -என்ற 14 இனிமையான தலைப்புக்களில் முத்துத் தாண்டவருடன் நாம் வாழும் பிரேமையை ஏற்படுத்திவிடுகின்றார்.

சீர்காழி மூவர்- தமிழிசை மூவர்பால் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

1 )அனைத்துக் கீர்த்தனைகளயும் தமிழில் இயற்றியது. கர்நாடக
   சங்கீதத்தையே மனம்  ஊன்றிக் கேட்டால்  ஏதோ  ஒரு வகையில்
   சிலநேரங்களில் நம்மைஅறியாமல் ரசிக்க முற்பட்டுவிடுவோம். அதுவும்
   தமிழிசை என்றால் சொல்லவும் வேண்டுமோ?

2 ) ஆந்திராவில் செக்கந்திராபாத்தையும், நம்பள்ளி என்கிற
    ஹைதராபாத்தையும்   இணைக்கும் நீண்ட பாலத்தில் பல சிலைகள் உண்டு.
    ஆனால் திருவையாற்றில்   ஆண்டுதோறும் விழாவெடுக்கின்றோமே
    தியாகராஜர், அவருக்குச் சிலை கிடையாது .  தெலுங்கைத் தாய்      மொழியாகக் கொண்ட அவர் தமிழ்நாட்டிலேயே  தங்கிவிட்டதால்  அங்கே அவருக்குச்    சிலை வைக்கப்படவில்லை. கலையில் கூட அரசியல்?

    சீர்காழியில் மூவருக்கும் கட்டப்படத்திட்டமிட்ட நினைவு மண்டபத்தின்
    கதி என்னவாயிற்று என்று தெரியவில்லை. தமிழர்களாக இருப்பதால்
     தாமதமாகின்றதோ?


முத்துத் தாண்டவருக்கு  அப்பா அம்மா வைத்த பெயர் தாண்டவர். இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். தில்லை ஆண்டவரை நினைத்து, தாண்டவம் ஆடுபவரான அவருடைய அழகை எண்ணி, அந்தப்பெயரையே பிள்ளைக்கும் வைத்தார்கள்.

தாயும், தந்தையும் சிறு வயதிலேயே இறந்து போனார்கள். சீர்காழியில் பிறந்து வளர்ந்த இவர், சீர்காழி பிரம்மபுரீஸ்வர் திருக்கோயிலிலேயெ தளக்கருவி   (வாச்சியம்- இசைக் கருவி, மிருதங்கம் )வாசித்து வந்தார்.

திருக்கோயில் ஆடல் நங்கை சிவபாக்கியம். அவரது பக்தி மணம் கமழும் பாடல்களால் தூண்டப்பட்ட தாண்டவர், பெரும்பாலும் தன்னுடைய நேரத்தை, அவர் வீட்டிலேயே செலவிட்டார். சிவபாக்கியம் கோவிலுக்கு வந்துவிட்டால், இவரும் கோயிலுக்கே வந்து விடுவார். அவரோடு உரையாடுவது, நமச்சிவாய மந்திரத்தை ஓதுவது, ஓதுவா மூர்த்திகளின் பாடலுக்கும், ஆடல் நங்கையரின் ஆடலுக்கும் வாச்சியம் வாசிப்பது என்பதாகவே இவரது நேரம்மெல்லாம் செலவானது.

சின்னாட்களில் இவர் நோய்வாய்ப்பட்டார். தொழுநோய் என்றார்கள், சிலர். வேறு ஏதோ பெயர் எல்லாம் சொன்னார்கள்.கைகால்கள் பலங் குன்றின. லல்லும் முள்ளுங் குத்தினால் கூடத்தெரியாமல் உடல் ரத்தக் களறியானது. உற்றார், உறவினர், உடன்பிறந்தோர் ஒதுக்கி வைத்து உதாசீனம் செய்தனர்.வாச்சியம் வாசிக்க இயலாமற் போனது. முத்துத் தாண்டவருக்கு  அப்பா அம்மா வைத்த பெயர் தாண்டவர். இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். தில்லை ஆண்டவரை நினைத்து, தாண்டவம் ஆடுபவரான அவருடைய அழகை எண்ணி, அந்தப்ப்யரையே பிள்ளைக்கும் வைத்தார்கள்.

தாயும், தந்தையும் சிறு வயதிலேயே இறந்து போனார்கள். சீர்காழியில் பிறந்து வளர்ந்த இவர், சீர்காழி பிரம்மபுரீஸ்வர் திருக்கோயிலிலேயெ தளக்கருவி
(வாச்சியம்- இசைக் கருவி, மிருதங்கம் )வாசித்து வந்தார்.

திருக்கோயில் ஆடல் நங்கை சிவபாக்கியம். அவரது பக்தி மணம் கமழும் பாடல்களால் தூண்டப்பட்ட தாண்டவர், பெரும்பாலும் தன்னுடைய நேரத்தை, அவர் வீட்டிலேயே செலவிட்டார். சிவபாக்கியம் கோவிலுக்கு வந்துவிட்டால், இவரும் கோயிலுக்கே வந்து விடுவார். அவரோடு உரையாடுவது, நமச்சிவாய மந்திரத்தை ஓதுவது, ஓதுவா மூர்த்திகளின் பாடலுக்கும், ஆடல் நங்கையரின் ஆடலுக்கும் வாச்சியம் வாசிப்பது என்பதாகவே இவரது நேரம்மெல்லாம் செலவானது.

சின்னாட்களில் இவர் நோய்வாய்ப்பட்டார். தொழுநோய் என்றார்கள், சிலர். வேறு ஏதோ பெயர் எல்லாம் சொன்னார்கள்.கைகால்கள் பலங் குன்றின. லல்லும் முள்ளுங் குத்தினால் கூடத்தெரியாமல் உடல் ரத்தக் களறியானது. உற்றார், உறவினர், உடன்பிறந்தோர் ஒதுக்கி வைத்து உதாசீனம் செய்தனர்.வாச்சியம் வாசிக்க இயலாமற் போனது.


ஒரு நாள் அர்த்தஜாமப்பூஜை முடியும்  வரை நாள் முழுவதும் உறங்கிவிட்டார். ஒரு சிறுமி வந்து, அப்பா உச்சிக்காலத்திலிருந்தே உன்னைப் பார்க்கலையாம்,  வெளியே  காத்திருக்கின்றார், நான் சீக்கிரம் போக வேண்டும், என்று அவசரப்படுத்திய கதியில், பிரசாதத்தை வாயில் ஊட்டிவிட்டு ஓடியே போய்விட்டாள்.

எழுந்தார், எந்தச் சிரமும் இல்லை. நடந்தார், நடையில் எந்தத் தள்ளாட்டமும் இல்லை. கோயில் கதவு பூட்டியிருந்ததால், முன் மண்டபத்தில் அமர்ந்து நமசிவாய மந்திரத்தை உட்ச்சரிக்க ஆரம்பித்தார்.

மறுநாள் பெரிய குருக்கள், தாண்டவரின் மேனியில் ஒருவித ஒளி பொலிவதையும், நோயின் அறிகுறிகள் மிகக் குறந்து காணப்படுவதையும் கண்டு ஒன்றுமே பேசாமல் கொடி மரத்தை நோக்கிக் கும்பிட்டார்.

”நேற்று சிவகாமி, அவ அம்மாவோட சிதம்பரம் போயிருந்தா முத்து. இன்னிக்கு மதியம்தான் வருவார்கள்”  என்று பெரிய குருக்கள் பேசிக்கொண்டே போக, தாண்டவருக்கு, அம்மையப்பன் திருவிளையாடிய தாண்டவம் முழுமையாகப் புரிந்தது.

சிவபாக்கியத்திடம், தாண்டவர் சொல்லுவார்: “வேகமா பாடி , அந்த வேகத்திலேயே முதல் வரிசையைத் தொட்டு இழுத்துப் பாடுறது, அந்த அனுபவத்துக்குல்லேயே தள்ளுது சிவா” என்பார்.

அதற்கு, சிவா, ‘அப்படின்னா சரணாவிந்தத்துல விழற சரணாகதின்னு சொல்லு ” பேசிக்கொண்டே இருந்த சிவபாக்கியம் ம்மெல்லத் திரும்ம்பிக் கண்னைத் துடைத்துக் கொண்டாள்



(இராகம்: மாயாமாளவகெள்ளை)

ஆடிக்கொண்டார் -அந்த
வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ ?

ஆர நவமணி மாலைகள் ஆட
       ஆடும் அரவம் படம் விரித்தாட
சீரணி கொன்றை மலர்த்தொடை  ஆட
       சிதம்பரத்தோர் ஆட
பேரணி வேதியர் தில்லைமூவாயிரம் பேர்களும்
       பூசித்துக் கொண்டு நின்றாட
காரணி காளி எதிர்த்து நின்றாட
       கனகசபை தனிலே   ( ஆடிக்கொண்டார் )


நிர்த்த கணபதி வேலார் நின்றாட
          நின்று அயன் மாலுடன் இந்திரன் ஆட
முப்பத்து முக்கோடி தேவருடனே

         முனிவரும் நின்றாட
மெய்ப்பதி மேவும் பதஞ்சலி ஆட
        வியாக்ரம பாதரும் நந்தியும் ஆட
ஒப்பற்ர சிவகாமி அம்மையும்
            கூடவே நின்றாட   ( ஆடிக்கொண்டார் )


அனுபல்லவியை இணைத்து, பல்லவி-அநுபல்லவி-சரணம் என்கிற திரிதாது    (திரி-மூன்று) முப்பிரிவு முறையை, தாளத்துக்கும் கதிக்கும் பொருந்தி முழுமைப்படுத்திக் கொடுத்தவர் முத்துத் தாண்டவரே ஆவார். பின் வந்தோர் அனைவருமே இதனை ஏற்றுக் கொண்டதால், கீர்த்தனை மரபின் பிதாமகர் என்றே கருதப்படுகின்றார்.

நாள்தோறும் சீகாழியிலிருந்து சிதம்பரம் வரும் தாண்டவர், சந்நிதியில், முதலில் அவர் காதில் விழும் வார்த்தையைக் கொண்டே அன்றையப் பாடலப் பாடுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.ஒவ்வொரு நாளும் பாடி முடித்ததும் பஞ்சாட்சரப்படியில் பொற்காசுகளைப் பெறுவதும் தொடர்ந்தது.


நாட்கல் ஓடின அம்பலவாணன் ஆடிக்கொண்டே இருந்தார். தாண்டவர் பாடிக் கொண்டே இருந்தார்.

ஆவணி மாதம் பூசத் திருநாள். சந்நிதியில் நின்ற தாண்டவரின் மனதுக்குள் மாணிக்கவாசகர் உலா வந்தார். சைவபெருமானோடு பெசிக் கொண்டிருந்த உரையாடலை நிறுத்தி, மாணிக்கவாசகரோடு பேஅசத் தொடங்கினார். தாண்டவர். ”என்ன கனக்குப் போட்டீர் சுவாமி ?” தாண்டவர் வினவ,

”எல்லோரும் ஒரே கணக்குத்தான் முத்துத் தாண்டவரே” என விடை பகர்ந்தார்
மாணிக்க வாசகர்.

”இருந்தாலும் நீர் போட்ட கணக்கொரு ஞானக் கணக்கு “ -தாண்டவர்.

”தாண்டவரே! எல்லோரும் சூன்யம் என்பார்கள். சிலர் சூன்யமல்ல, பூரணம் என்று புரியும் பொழுது கணக்கு சமன் பட்டுவிடும் “

“ பூஜ்ஜியத்துக்குள்ளே பரமனின் ராஜ்ஜியம் என்கிறீரா- தொடர்கிறது

ஆடல்வல்லான் ஆட, உடனிருக்கும் சிவகாமி அம்மையாரும் மாணிக்க வாசகர் பாடலையே தாண்டவர் பாட, நடராஜரின் அர்த்த புஷ்டிப் பார்வையால் சிவகாமி அம்மையார் தப்புத் தாளங்கள் போட, இதுவொரு வினோதக் கணக்குத்தானே?.

புல்லாகிப் பூடாகி, பல்விருகமாகி, பறவையாஇ, பாம்பாய், விலங்காய், மனிதராட், தேவராய் பற்பல பிரவி எடுக்கும் இந்தஆன்மா, எந்தப் பிறவி எடுத்தாலும் ஆண்டவனுக்கு என்ன கொடுத்துவிட முடியும்?

தாண்டவரின் குரல் ஓங்கி ஒலிக்கின்றது.

”மாணிக்கவாசகர் பேறெனக்குத் தரவல்லயோ அறியேன்
காணிக்கையாகக் கொடுத்தேன் உனக்கு என்னை
ஆணிப்பொன்னே தில்லை அம்பலவாணா”


கட்டையின் மேல் வைத்துச் சுட்டுவிடாதே
         கள்ளக்குழியில் புதைந்து விடாதே
பட்டும் பணியும் தரித்து அயலோர் வந்து
        பால் அள்லிக் குத்தாதே
கிட்டி ஒருவர் சடங்கு செய்யாதே

பொன்  பூமாரி இமையோர் சொரிந்திடப்
     பொன்னூசலோடும் திருவாதிரை நாளில்
கற்பூர தீபம் போல் என்றன் உடலைக் கனக சபையில்
        கலந்து கொள்வாயே     ( மாணிக்க )


என்ற பாடலைப் பாடி முடித்து, பஞ்சாட்சரப்படியேறி பரமனாரின்

ஜோதித் திருமேனியின் அருகில், அன்பையே அர்ச்சனைப்பாட்டாக்கிய

முத்துத் தாண்டவர், ஊராரும் , பேராரும்  காண முழு முதல்வனோடு

இரண்டறக்  கலந்தார். ஆதிரையானோடு கலக்கும் நாளெல்லாம் ஆதிரை

நாளன்றோ ?









       




0 comments:

Post a Comment

Kindly post a comment.