குமுதத்திற்கு இழப்பொன்றும் இல்லை ?
இப்பொழுதெல்லாம் இதுபோன்ற பத்திரிக்கைகளை வாங்குவதும் இல்லை; படிப்பதும் இல்லை. 7 பேர் ஒட்டு மொத்த ராஜினாமா என்று எழுந்த கலகக் குரலால் 05-09-2012 இதழை வாங்கிப் பார்த்தேன்.
நான் சாண்டில்யனின் மன்னன் மகள் குமுதத்தில் வந்தபோதெல்லாம் குமுதத்தைப் படித்த ஆசாமி. ஆசை என்றொரு படமாம் , அதில் இது ஒரு காட்சியாம் என்று, இடது பக்கத்தில் கதாநாயகன் எம்.ஜி.ஆர் படத்துடன், கதாநாயகியையும் போட்டு, அதற்குக் கீழ் மேலே சொன்ன வசனத்தை இடப்பக்கமே எழுதிவிட்டு, வலது பக்கத்தில் ஒன்றுமே எழுதாமல் வெறும் வெள்ளைக் காகிதமாகவே விட்ட்ட் விடடுவிட்ட காலத்திலும் குமுதத்தைப் படித்தவன்.
எனக்குத் தெரிந்து குமுதம் பின் வாங்கியது ஒரே ஒரு கட்டத்தில்தான். சுஜாதா எழுத ஆரம்பித்த கதைக்கு, குறிப்பிட்ட ஒரு சாரரிடமிருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தபோது, அந்தக் கதையை எழுத வேண்டாம் என்று சொல்லிப் பின் வாங்கிக் கொண்டது.,குமுதம்.
ஏதாவது ஒரு மாற்றத்தைச் செய்துகோண்டே இருக்கும் . அந்த மாற்றத்தில் அடுத்து என்ன வரும் என்ற எதிர்பார்ப்பை வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும்பொழுது, அதனை அப்படியே நிறுத்திவிட்டு அடுத்து வேறொரு புதுமைக்குள் சென்றுவிடும். குமுத்தில் பால்யூ காட்டிய தீரமகள் அதிகம்.அவர் காணாத பெரியமனிதர்கள் கிடையாது குமுதத்தின் பேட்டிக்காக. அவர் எழுதிடும் ஓரிரு வரிச் செய்திகளுக்காகவே பெரிய பூகம்பமே கிளம்பும். காலத்திற்கேற்றவாறு எழுதுவதில் வல்லவர்.சென்னை எழும்பூரில் உல்ள அஞ்சல் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றியவர். ஒரு கட்டத்தில் அலுவக்வேலையா அல்லது குமுதமா என்ற வினா எழுந்தபோது குமுதத்தினையே தேர்ந்தெடுத்தார், பால்யூ என்கிற பாலசுப்பிரமணியன்.
பல்வேறு பிரபலங்களைக் குமுதத்தின் ஆசிரியராக்கி, அவர்கள் திறமை முழுவதையும் காசாக்கிக் கொண்ட ஒரே தமிழ் வார இதழ் குமுதம்தான். அதே நேரத்தில், குமுதத்தில் தொடர்ந்து வந்த எல்லாவற்றையும் விடுபடாமலும் பார்த்துக்கொள்ளும்.சாமர்த்தியமும் குமுதத்திற்கு உண்டு. கவிப்பேரரசு வைரமுத்து மட்டும் தான் விதிவிலக்கு. தான் தயாரிக்கும் இதழ்களில் எல்லாம் கடவுளைப் பற்றிய செய்திகளை இடம்பெறச் செய்யமாட்டேன் என்ற கண்டிஷனுடந்தான் பொறுப்பேற்றார்.
சென்னை ஞாநி ( ஓ பக்கங்கள் ) ( கோவை ஞானி மார்க்சியவாதி ) தான் பத்திரிக்கை நடத்திய போதெல்லாம், இணைய தளம் உட்பட எல்லாக் கட்டங்களிலும் ஒரு பின் குறிப்பைக் கொடுக்காமல் இருக்கமாட்டார். என்ன அது? குமுதம் குழுமம் தவிர எல்லோரும் எனது படைப்புக்களை எடுத்துக் கையாளலாம், ஞாநி என்ற பின் குறிப்புடன், என்றவர் கூட, ஆனந்த விகடனில், ஆளுங்கட்சியின் நிர்ப்பந்தத்தால் எழுத முடியாதபோது குமுதம்தான் அவரை அரவணைத்துக் கொண்டது. ஒரு கட்டத்தில், ஆனந்த விகடனுக்கு நேரிட்ட நிர்ப்பந்தம் குமுதத்திற்கும் ஏற்பட்டபோது, கல்கிக்குத் தாவி விட்டார்.
136 பக்கங்களைக் கொண்ட குமுதத்தில் அட்டைப் பட விளம்பரங்களையும் சேர்த்து 26.5 பக்கங்களை விளம்பரங்கள் இடம்பிடித்துவிட்டன. குமுதம் ஹெல்த், குமுதம் பப்ளிகேஷன்ஸ் உரிமைக்குரல் பற்ரிய தகவல், குமுதம் சினேகிதிக்கு ஒரு பக்கம், தற்போது விற்பனையில் என்ற குமுதம் ஜோதிடம் அறிவிப்பு, குமுதம் பக்தி ஒரு பக்கம் எதுவுமே விட்டுப்போகவில்லை.
ஆறு வித்தியாசம்; ச்சீய்! புதிA பகுதி இரண்டு பக்கம்,அரசு பதில்கள் 3.5 பக்கங்கள், படிங்க..சிரிங்க இரண்டு பக்கம், இப்படி நடந்தால் எப்படி இருக்கும் இரண்டு பக்கங்கள், வி.ஐ.பி. விஷயங்கள் இரண்டு பக்கங்கள்,
இளையராஜாவைக் கேளுங்கள் அதிரடி ஆரம்பம்; 6 பக்கங்கள், அஞ்சல் அட்டை இரண்டு பக்கங்கள்,
சினிமா சமாச்சாரங்கள்;
-
1.தமன்னா என்னை ஏமாற்றி விட்டார்-தயாரிப்பாளர் பாய்ச்சல் 4 பக்கங்கள்
2. நான் -சினிமா விமர்சனம் - 2 பக்கங்கள், பில்டிங் மட்டும்தான் ஸ்ட்ராங் என்ற
குமுதத்தின் முத்தாய்ப்புடன்
3.பாயும் பேரரசு :-பலடைரக்டர்களுக்கு சினிமாவே தெரியலே, கல்யாண
வீடியோ மாதிரி சினிமா எடுக்குறாங்க; - 3 பக்கங்கள்
4. பாலிவுட் கலாட்டா 3 பக்கங்கள்
5.ஷூட்டிங் ஸ்பாட்: இயக்குநர் சமுத்திரக் கமியின் கதை; ஜெயிச்சாதான்
வாழ்க்கை 4 பக்கங்கள்.
6.லைட்ஸ் ஆன் சுனில் யாரை கிஸ்ஸடிக்கலாம்- நயன்தாரா படம் உள்லிட்ட
செய்திகள் 3 பக்கங்கள். ( லைட்ஸ் ஆன் சுனில் தொடர்ந்து வருகிறது நீண்ட
நாட்களாய் )
7. சுனிலிடம் கேளுங்கள் ( இதுவும் நெடுநாளாய் ...........)
அரசியல்:-
1. தலையங்கம் :- தேர்தல் தேவையா? ஒரே பக்கம்.
2. கார்ட்டூன்; ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி ஊழல் செய்த பிரதமர் பதவி
விலக வேண்டும் 1 பக்கம்.
3 ) அரசியல் அக்கப்போர் பர பர 1 பக்கம்.
3 ) காங்கிரஸ் சுற்றும் காதுல பூ-நிலக்கரி ஊழல் 3 பக்கங்கள்
ஒரு பக்கக் கதைகள்:-
புதிய மருமகள், பரிகாரம்,சின்னத்தாயி, அன்றும் இன்றும், 4 பக்கங்கள்
புதிய பகுதி:- சரத்தான் முதலில் காதலைச் சொன்னார் ...... 4 பக்கங்கள்.
அயலகச் செய்திகள்,கவிதை,இசை, சமூகம், பகீர் ரிப்போர்ட்,
வி.ஐ.பி.விஷயங்கள், மிடில் கிளாஸ் டூ மில்லியினர், காலேஜ் கேம்பஸ், டி.வி,
பேசும் படம், இசை சாதனை , மேனியழகு, நினைவலைகள்,
1 ஒபாமாவுக்கு உதவும் தமிழர் 3 பக்கங்கள்
2.கிட்னியைக் கெடுக்கும் போலி நெய் 3 பக்கஙகள்
3.இவர்கள் இப்படித்தான் 2 பக்கங்கள்
4.ஒன்றைப் பத்தாக்கும் முதலீடு 5 பக்கங்கள்
5. தாவணிக் கனவுகள் :தமிழருவி மணியன் ( ?) 8 பக்கங்கள்
6. சி.ஆர்.பி.க்காகக் கண்ணீர் சிந்த விடமாட்டேன் 3.5 பக்கங்கள்
7.எம்.ஜி.ஆர்.பாராட்டு; ம.பொ.சி.நெகிழ்ச்சி 3 பக்கங்கள்
8 ) சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து-2 ஆம் வகுப்பு மாணவன் திவ்ய தர்ஷன் 3 பக்.
9) தினக்கூலியில் கட்டிய காந்தி மண்டபம் 3 பக்கங்கள்
10 ) ஸ்டாராஙான முடி எளிதான வழி 4 பக்கங்கள்
11) கேன்ஸர் கேன்ஸல்- புட்டபர்த்தி பாபா பக்தித் தொடர் 7 பக்கங்கள்
12 ) இது நிஜமும் அல்ல, கற்பனையும் அல்ல-விஜடகாந்த் பலஅசைவுகளில், 4
பக்கங்கள்
13) ஸ்டார் கவிதை, மறுநாள் மரணம் 2 பக்
14) நினைவலைகள். அந்தப் புன்னகை மிஸ்ஸாகாது(ரா.கி. ரங்கராஜன்
அஞ்சலிக்கூட்டம்) 3 பக்கங்கள்
இப்படியாக குமுத்தத்தை வாங்குபவர்கள் முன் அட்டை முதல் கடைசி
அட்டை வரை விளப்பரங்கள் உட்பட படித்தே தீருவர்.
அரசு விளம்பரங்கள் எதுவும் குமுதத்தில் வருவதில்லை. எனவே, அரசைச்
சார்ந்து குமுதம் இயங்குவதில்லை ஆனால், குமுதத்தின் தலையங்கம்,
கார்ட்டூன், அரசியல்செய்திகள் நச்சென்றுதான் இருக்கும்.
ஒரு வீட்டில் எத்தனைபேர் இருந்தாலும் , அந்தவீடு வாங்கும்
பத்திரிக்கைகளில் குமுதமும் ஒன்றாகத்தான் இருக்கும். அதிலும் போட்டி
போட்டுக்கொண்டு படிக்கும் பத்திரிக்கை ஆறு வித்தியாசங்களைக் கொண்ட
குமுதமாகத்தான் இருக்கும்.
ஏழு பேர் வெளியே சென்றுவிட்டதால் குமுதத்தில் எந்தவிதமான மாற்றமும்
இல்லை. வழக்கம் போல் வந்து கொண்டுதான் இருக்கின்றது.
”தமிழர்களின் இதயத் துடிப்பு குமுதம்” என்று முகப்பில் போட்டுள்ளது
குமுதம்.
குமுதத்தில் வரும் செய்திகளுக்காகத் தான் தமிழனின் இதயம் துடிக்கும்
என்றால் என்ன செய்வது அது தமிழனின் தலை எழுத்து ?
யாராவது கவிஞரைத்தான் கேட்கவேண்டும்/
ஈரோடு தமிழன்பனே நிழலாடுகின்றார், நெஞ்சத்தில்!
தமிழர்களின் தாய் மொழியாய்த் தமிழ் வந்து வாய்த்ததுதான், தமிழ் செய்த
பெரும் பாவம்.
வலுவான கட்டமைப்புடன் கூடியது குமுதம் குழுமம். 7 பேரை நம்பியல்ல.
இரு தரப்புமே யோசிக்கலாம். முடிவையும் மாற்றிக் கொள்ளலாம். நல்ல
முடிவிற்கும் வரலாம். 7 குடும்பங்களின் பிரச்சினை. நல்லவிதமாகத் தீர்ந்திட
வேண்டும் என்பதே குமுதம் வாசகர்களின் விருப்பம்..
0 comments:
Post a Comment
Kindly post a comment.