Saturday, September 1, 2012

கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை சார்பாக 4-வது ஆண்டு இலக்கியப் பரிசுகள் 2012 .

கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை சார்பாக 4 ஆம் ஆண்டாக வழங்கப்படும் இலக்கியப் பரிசுகள் - 2012க்காக இவ்வாண்டு  பத்திரிகை துறைக்கு முதல்பரிசு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் “தினமணி” நாளிதழ் ஆசி ரியர் கே. வைத்தியநாதன் சிறந்த பத்திரிகையாள ராக முதன்மைப் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள் ளார். இதற்காக அவருக்கு இவ்வாண்டு முதன்மைப்பரிசு ரூ. ஒன்றரை லட்சம் ரொக்கமும், கேடயமும், சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.

 மேலும் சிறப்புப் பரிசுகள் 16 பேருக்கு

கீழ்க்காணும் இலக்கிய வகைகளில்

ஒவ்வொருவருக்கும் ரூ. 10 ஆயிரமும், கேடயமும்,

நினைவுப்பரிசும் வழங்கப்படுகிறது.

சிறுகதை: அகில் (எ)அகிலேஸ்வரன் சாம்பசிவம், கனடா;

 நூல் பெயர் -  கூடுகள் சிதைந்த போது

மா. அன்பழகன், சிங்கப்பூர்;

நூல்பெயர்- என் வானம் நான்மேகம்

கவிதை: கா.ஜெய்கணேஷ், நாமக்கல்;

 நூல்பெயர் - நடப்பின் முகவரி

பத்மாவதி இளங்கோவன் , பிரான்ஸ் ;

நூல்பெயர் - சிறுவர் இலக்கியம்

டாக்டர் ஓ.கே. குணநாதன், இலங்கை;

 நூல்பெயர்- பறக்கும் ஆமை

செல்வி. மலர்விழி, குமரிமாவட்டம் ;

நூல்பெயர்- தூப்புக்காரி

டாக்டர் எஸ். சிங்காரவடிவேல்,

நூல்பெயர்-  ஆத்தா கல்லறையில் ஒரு  ஆவாரஞ்செடி

கட்டுரை: புலவர் செ. இராசு, ஈரோடு;

நூல்பெயர்- வாழ்நாள் சாதனை விருது

இராஜம் இராஜேந்திரன் , மலேசியா;

நூல் பெயர்- மலேசியப் புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்

சிவ. தியாகராஜா, லண்டன்;

நூல்பெயர் - தமிழ் மக்களும் தழுவிய மதங்களும்

கலாமணி பரணீதரன், இலங்கை;

நூல்பெயர் - ஜீவநதி சிற்றிதழ்

இணையம்: ஜெ. வீரநாதன்,

 நூல்பெயர்: இணையத்தை அறிவோம்

மொழிபெயர்ப்பு: இலக்குவன், திருவரங்கம்- திருச்சிராப்பள்ளி;

நூல்பெயர்- இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு, இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்

ஆர். சௌரிராஜன், சென்னை;

 நூல்பெயர் - கு.சி.பா. நூல் மொழிபெயர்ப்பு

திரு. உபாலி லீலாரத்ன, இலங்கை;

நூல் பெயர்- கு. சி. பா. சர்க்கரை நூல் மொழி பெயர்ப்பு

லோலா. முத்துபா , உஸ்பெக்கிஸ்தான்;

 நூல் பெயர்- கு. சி. பா. நூல் மொழிபெயர்ப்பு

மேற்படி விருதுகள் 2.10.2012 செவ்வாய்க் கிழமை காலை 9 மணிக்கு நாமக்கல் 

செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் கு. சின்னப்பபாரதி 

அறக்கட்டளை விருது வழங்கும் விழாவில் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு கு. சின்னப்பபாரதி அறக்கட்டளைத் தலைவர் பா. செல்வராஜ் 

தெரிவித்துள்ளார்.

நன்றி :- தீக்கதிர் இணையதளம்.

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
அறம் வளர்ந்திடுக! மறம்மடி வுறுக! 
- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.