Saturday, September 1, 2012

சென்னையில், பப் நுழைவுக் கட்டணம்- 7 மணிக்கு முன்1999, 2999 , 7 மணிக்கு மேல் 8999, 9999 -நக்கீரன்.

அண்மையில் ஒரு மேடையில் ஒரு அன்பர் பேசிடக் கேட்டது.

”ஈரோடு  தமிழன்பன் கவிதை:-

தமிழ் செய்த பாவம்

தமிழ்நாட்டு மக்களுக்குத்

தாய்மொழியாய் வந்து வாய்த்தது.” இன்னும் நக்கீரனில் எழுதப்பட்டவற்றைத் தொடர விருப்பமில்லை. ( நக்கீரன் Vol.25 No40 2012 sசெப் 01-04 ரூ.10. தமிழகம், புதுச்சேரி ரூ.11 பிற மாநிலங்களில்.


கோபி சொன்ன உண்மைகள்:-

”சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் 36 ”பப்புகள்” உள்ளன. நிறைய-பார் லைசென்ஸுகளை வைத்துக் கொண்டு நடனம், சூதாட்டம், என அத்தனை அம்சங்களும் உண்டு. சனி, ஞாயிறுகளில், நான் உட்பட 7 மணிக்கு மேல் குறைந்தது 100 பேராவது ஆடுவோம். கேமராவை நுழை வாயிலேயே வாங்கி வைத்துக் கொள்வர். காலேஜ் பசஙக, ஐ.டி. ஜாப்ல இருக்கிறவங்கதான் பெரும்பாலும் வருவர். காலேஜ் சீட்டுக்கு ஆள் பிடிக்கிறது, ஆப்போசிட் டீமை போட்டுத் தள்ல ஸ்கெட்ச் போடுகிறது- என இப்படிப்பட்ட நல்ல காரியங்களுக்கு முடிவெடுக்கிற இடமாக ”பப்ஸ்” திகழ்கின்றது.

தற்பொழுது ஹைஸ்கூல் பசங்களும் வர ஆரம்பித்து விட்டனர். பொண்ணுங்க இல்லாமப் போக முடியாது. ஆனா, ஆம்பிளை இல்லாம பொண்ணுங்க போனா ”பப்”-ல அக்ஸப்ட் பண்ணிப்பாங்க. இப்போ என் லைப் ஸ்மூத்தா போயிட்டிருக்கு. சனி, ஞாஇறு ஆபீஸ் வேலை என்று பொய் சொல்லிட்டு இங்கேயே இருந்த காலம் கொஞ்சம் கொஞசமாக மறந்துட்டு வருது. கல்யாணமாகி, இப்போ 5 மாதத்துல பெண் குழந்தை இருக்கா. ஈ.சி.ஆர். பக்கத்துல சொந்தக்காரன் வீட்டுக் கல்யாணம்னா கூட இப்போ போறதில்லை “ என்றார் வலியுடன்.


”பப்பு” சிண்டிக்கேட்லே இருந்து இவ்விடத்தை விட்டுக் காலி செய்து விட்டுச் சென்ற பரபரப்பு “காக்கி “ சொன்ன உண்மைகள் :-

”இந்த ”பப்புங்க” ஓர் வியாபாரச் சந்தைங்க.மும்பை மார்க்கட்டோட ஒரு பார்ட்தான் இங்க இருக்கு. சிட்டியிலே இருக்குற சின்னச் சின்ன ஸ்டார் ஹோட்டல்ஸிலிருந்து வருபவர்களை ”என்ட்ரியில்” மடக்கினால், கோல்ட் பிஸ்கட்ஸ், அபின், கஞ்சா, சம்டைம்ஸ் ஹெராயின் இப்படி ப்ல விஷ்யம் மாட்டும். இது இல்லாம, இம்போர்ட்டட் ”கன்”னுங்களைக்கூட ”சீஸ்” பண்ணியிருக்கேன்.”

அது சரி, ”போலோ மெந்த்தால் மவுத் கிளீனர் மிட்டாய்” என்று கேட்டதும், ”அது” ப்யூர் ட்ரக்” ஏர் வழியாவும், கடல் வழியாவும் வருது. கொஞ்சம் காஸ்ட்லி இது. கேர்ள் பிரண்ஸ்களைக் கவிக்கிறதும், அவனுங்க கேமராவுல மாட்டிக்கிட்டுத் தவிக்கிறதுக்கும் இந்தப் போலோதான் ரூட்டே” போதைப் பொருள் தடுப்புப் பிரிவு எண்ட்ரி ஆகாத ஒரே ஏரியா இதுதான் தெரிய்மா “ என்றார்.

”தீன்” என்று முடியும் ஐந்தெழுத்து போதையுலக் கிரிமினல்:-


அண்மையில் புதுவைப் போலீசார், ”தீன்” என்று முடியும் ஐந்தெழுத்து போதையுலக் கிரிமினலைப் பிடித்திருக்கின்றார்கள். புதுவை காக்கிகளுக்குச் சென்னையிலிருந்து ஏக பிரஷ்ஷர். புதுவை ஆரோவில் பகுதியில் இவன் தலைமையில் 13 மீடியேட்டர்கள் பல நாடுகளுடன் தொடர்பல் உள்ளவர்கள்.” என்று தீன் பற்றி பட்டியல் வாசித்து வாதம் செய்தும் பயனின்றி, பாண்டியிலிருந்தே ”அவனை விட்ருங்கப்பா” என்று சொல்லப்பட்டதும் தீனை இறுகிய மனதுடன் இறக்கிவிட்டு வெறும் வண்டியுடன் திரும்பியுள்ளனர்.

இது போன்றவற்றிற்குள்ளே  செல்ல நுழைவுக் கட்டணங்கள் :-

பண்ணை வீடுகள், சிறு சிறு பப்புகளில் என்ட்ரி ஆக, 1999, 2999, முதல் ஸ்டேஜ். இரண்டாவது ஸ்டேஜ், 5999, 9999 ஆகக் கட்டணம் நிர்ணயம் செய்வர். 7 மணிக்குள் வந்தால் கட்டணம் குறைவு. அதற்குப்பின் வந்தால் கட்டணம் அதிகம்.


இக்கட்டுரைக்கு அவர்கள் கொடுத்துள்ள தலைப்பு “ போதை மிட்டாய் ! கேமராவில் சிக்கும் இளம் பெண்கள்!

வினா !. இதுபோன்றவற்றைத் தேடிப்பிடித்து எழுதும் ரிப்போட்டர்கள்

                  காவல்  துறைக்குத் தகவல் தரவேண்டும் என்று சட்டம் கிடையாதா?

வினா 2. இது போன்ற செய்திகளைப் படிக்கும் காவல் துறையினர், நீதித் துறை

                  உயர் அதிகாரிகள் உஷார் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்று

                   சட்டங்கள் உள்ளனவா?

வினா3 : அந்தக்காலத்தில் ”இந்து நேசன்” என்ற பத்திரிக்கையைப்போன்று

                   இன்றையப் பத்திரிக்கை உலகம் சென்று கொண்டிருக்கின்றதே,

                    இதத் தடுக்க வழியே இல்லையா?

”இப்படி எல்லாம் எழுந்த வினாக்களுக்கான விடையை அனுபவம் மிக்க பத்திரிக்கையாளர்  ஒருவரிடம் கேட்டபோது ,. ஒரே வழிதான் இருக்கின்றது. இதுபோன்ற பத்திரிக்கைகள வாங்காமலிருப்ப்பது, படிக்காமலிருப்பது, தெரிந்த நண்பர்களிடம் எல்லாம் இந்தக் கருத்துக்களைச் சொல்வது இவையே சாத்தியம்.

அதற்கும் மேல் இந்தச் செய்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் சட்டப் பாதுக்காப்புக்களைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.”

நன்றி :- நக்கீரன்.0 comments:

Post a Comment

Kindly post a comment.