Saturday, September 1, 2012

2002 கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் தீர்ப்பு !


2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி குஜராத் மாநிலம், கோத்ரா அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

இதில் எஸ்-6 பெட்டியில் பயணம் செய்த 59 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 28-ம் தேதி, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் "பந்த்'துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நரோடா பாட்டியாவில் ஒரு கும்பல் வன்முறையில் இறங்கியதில் சிறுபான்மை இனத்தவர் 97 பேர் கொல்லப்பட்டனர்.

இக்கலவரம் தொடர்பாக, பாஜக முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங் தளம் அமைப்பின் முக்கியப் பிரமுகர் பாபு பஜ்ரங்கி உள்பட 62 பேர் மீது ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் 2009-ம் ஆண்டு முதல் வழக்கு விசாரணை நடைபெற்றது.

கடந்த புதன்கிழமை பாஜக முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங் தளம் அமைப்பின் முக்கியப் பிரமுகர் பாபு பஜ்ரங்கி உள்பட 32 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 29 பேர் விடுவிக்கப்பட்டனர்
.
இதில் 31 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை கூடுதல் முதன்மை நீதிபதி ஜோத்ஸ்னா யாக்னிக் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
தண்டனை விவரம்:

நரோடா பாட்டியா கலவரத்தின் போது, பாஜக எம்எல்ஏ-வாகவும், பின்னர் 2009-ம் ஆண்டு மோடியின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்த மாயா கோட்னானி (57), இவ்வன்முறையின் சூத்ரதாரி என நீதிபதி ஜோத்ஸ்னா யாக்னிக் குறிப்பிட்டார்.

அவருக்கு மொத்தம் 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.

பஜ்ரங் தளம் அமைப்பின் முக்கியப் பிரமுகர் பாபு பஜ்ரங்கி( 55) தன் வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 7 குற்றவாளிகளுக்கு தலா 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.

இதர 22 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ஒரு குற்றவாளிக்கான தண்டனை விவரம் தெரிவிக்கப்படவில்லை.

பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: இவ்வழக்கில் சாட்சியமாக விசாரிக்கப்பட்ட ஒரு பெண், வன்முறைக் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

ஆனால், போதுமான சாட்சியம் இல்லாததால், அக்குற்றம் தொடர்பாக யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை.

அதே சமயம் அப்பெண்ணுக்கு ரூ.5லட்சம் இழப்பீடு வழங்குமாறு குஜராத் அரசுக்கு நீதிபதி ஜோத்ஸ்னா யாக்னிக் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி :-தினமணி 01-09-2012 சனிக்கிழமை

0 comments:

Post a Comment

Kindly post a comment.