Friday, September 7, 2012

பட்டுக்கோட்டையில் சுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும் பாபு இராஜேந்திரபிரசாத்தைப் படுத்தியபாடு! (1934 )


ஜீவானந்தம், அய்யாமுத்து போன்ற சிந்தனைச் சிற்பிகள் வெளியேறிவிட்டபிறகு, ஈ.வே.ரா.வின் சுய மரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும் விடுதலைப் போர் வீரர்களுக்கு எதிராக வன்முறை வழிகளை ஆவேசத்துடன் பின்பற்றின.

கூட்டங்களில் கலகம் செய்வது, கற்களை வீசுவது, பாம்புகளை விடுவது, கருப்புக் கொடிகளைக் காட்டுவது, தடி கொண்டு தாக்குவது, ஆபாசச் சொற்களில் ஏசுவது..போன்ற வன்முறைக் காரியங்களைச் செய்ய ஆரம்பித்தனர்.

 நூறு வன்முறை நிகழ்ச்சிகளை ம.பொ.சி. தாம் எழுதியுள்ள ”விடுதலைப்போரில் தமிழகம் “ என்ற ஆய்வு நூலில் பட்டியலிட்டுள்ளார்.

இந்திய சுதந்த்திற்காகப் போராடிய காங்கிரஸ் தலைவர்கள், இயக்கப் பணிகளை ஒட்டி அவ்வப்பொழுது தமிழகத்திற்கு வந்தார்கள். அவ்வாறு வந்த காந்திஜி, நேருஜி, பாபுஜி, அப்துல் கலாம் ஆசாத் போன்ற தலைவர்களை எதிர்த்து, ஜஸ்டிஸ் கட்சியினரும், சுய மரியாதை இயக்கத்தினரும் வன்முறை ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தினர். தேசியத் தலைவர்கள் அவற்றைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டார்கள்.


பாபு இராஜேந்திரப் பிரசாத் விடுதலைப் போரில் பலமுறை சிறை சென்றவர். காந்தியடிகளின் பரிபூரண விசுவாசி. அஹிம்சையின் வடிவம்.  தமக்குரிய பெரும் செல்வத்தையும் விடுதலை இயக்கத்திற்காகவே செலவிட்டவர்.

காங்கிரஸ் மகாசபையின் பொன் விழா நிகழ்ச்சி 1934-ஆம் ஆண்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

அதுசமயம் பாபு இராஜேந்திரப் பிரசாத் காங்கிரசின் தலைவராக இருந்தார்.

நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்த அவர், தமிழகத்திற்கும் வருகை தந்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்திற்குச் சென்றிருந்தபோது அவருசைய சுற்றுப் பயண ஏற்பாடுகளை சர்தார் வேதரத்தினம்பிள்ளை செய்திருந்தார்

.இராஜாஜியின் வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகத்தின்போது, சர்தார் இராஜரத்தினம்பிள்ளை ஆற்றிய  பணிகள் அளப்பரியவை. வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. நடைப்பயணத்தில் வந்தவர்களுக்கு ஆங்காங்குள்ள மரங்களில் உணவுப் பொட்டலங்களைக்
கட்டித் தொங்கவிட்ட உண்மை நிகழ்வுகள் இன்றும் யாராவது ஒருசிலரால் எங்கேனும் பெருமையாகப் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்.


பாபு இராஜேந்திரப் பிரசாத்தும், சர்தார் இராஜரத்தினம்பிள்ளையும் பட்டுக் கோட்டையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்நாட்களில் பட்டுக் கோட்டை நகரில் சுய மரியாதை இயக்கத்தினரும், ஜஸ்டிஸ் கட்சியினரும் வலுவான நிலையில் இருந்தனர்.

இச்சூழலில் இருவரும் கண்னியமற்ற ஒரு கூட்டத்தினரிடம் சிக்கிக் கொண்டனர்.

” பாபு இராஜேந்திரப் பிரசாத்துக்கு

எதிராகப் பெரிய கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சாந்தசொரூபியான அவருடைய சட்டையைப் பிடித்து இழுத்துக் கிழித்தனர்.

கருப்புக் கொடி ஏந்தியவர்கள் அவரை குச்சியால் குத்தினர்.” என்று

சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்று நூல் வேதனையுடன்

தெரிவிக்கின்றது. இராஜிஜியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்குப் பின்னரே,

வேதரத்தினம் பிள்ளைக்கு “சர்தார்” பட்டம் அளிக்கப்பட்டது என்பதையும்

இங்கே குறிப்பிடலாம்.

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார் என்று கேட்டால்

பாபு இராஜேந்திரப் பிரசாத் என்று தயக்கமின்றிச் சொல்லுவோம். மேலும் சிலர்

இரண்டாவது குடியரசுத் தலைவரும் அவரே என்றும் அழுத்தமாகச் சொல்லி

விடுவோம். ஆனால், அவர்கள்  ஆங்கிலேயர்களால் அனுபவித்த அல்லல்கள்

ஒருபுறம்: நம்மவர்களால் பட்ட அவஸ்தைகள் மறுபுறம்-அவற்றை விடவும்

அதிகம்!

நன்றி :- மூத்த பத்திரிக்கையாளர் , கே.சி. லட்சுமிநாராயணன்., எழுதியுள்ள,

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான “ வரலாறு ”  Feb. 2012

எல்கேஎம் பப்ளிகேஷன், 15/4 (33/4 ) இராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17

தொலைபேசி :- 2436 1141 / 2434 05990 comments:

Post a Comment

Kindly post a comment.