Wednesday, September 5, 2012

டெஸ்ஸ்ஸ்ஸ்ஸோ! (12/08/2012) இந்த மாநாட்டுக்குப் பேர் என்னங்க!த்ஸோ... த்ஸோ!...-ஃபோட்டூன் நன்றி-தினமணி !இலங்கைத்தீவில் 

தமிழ்பேசும்மக்களின் 

தாயகப்பகுதியாகிய 

வடக்கு-கிழக்குமாகாணங்கள் 

இணைந்த நிலப்பகுதி தமிழீழம் 

எனப்படுகிறது. இல்லை  இல்லை என அழைக்கப்பட்டது.


சிங்களப் பெரும்பான்மைஇனம் இலங்கை விடுதலை பெற்றதிலிருந்தே
தமிழர்களை ஒடுக்கிவருகிறது. இலங்கைச்சட்டப்படி, பவுத்தம்தான் இலங்கைமதம்,  சிங்களம்தான் இலங்கை மொழி..


எனவே தந்தை செல்வா  உள்ளிட்ட தமிழர்கள் அறவழியில் சிங்கள ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடத் தொடங்கினர்

காந்திய வழியிலான அறப்போராட்டங்கள் பலனடையாமல் போகவே இலங்கை இராணுவத்துக்கு எதிரான ஆயுதவழிப் போராட்டங்கள் வலுத்தன.இவ்வகைப் போராட்டத்தை நடத்தியதில் மிகவும் முக்கியமானவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்

அவர் 26.11.1954 அன்று வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளை, பார்வதி அம்மாள் ஆகியோருக்கு மகனாய் பிறந்தார், பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது  1958இல் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின.  

பாணந்துறையில் இந்து குரு ஒருவர் உயிரோடு தீமூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது

சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ்மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர்மனதில் உருவாகின

ஆயுதமற்ற அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பயன்படுத்தும் சிங்களராணுவத்தை ஆயுதம் கொண்டுதான் எதிர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தார்

10ஆம்வகுப்புபடிக்கும்போதேவிடுதலைப்போராளிஆனார்,

ஒருநாள் காவல்துறையினர் பிரபாகரனைத் தேடி முதன் முதலில் அதிகாலை 3 மணிக்கு பிரபாகரன் வீட்டிற்கு வந்தனர்.

காவல்துறையினரிடம் இருந்து தப்பிச்சென்ற பிரபாகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன்வீட்டிற்கு நிரந்தரமாகத் திரும்பவேஇல்லை

பிறகு துப்பாக்கிச் சுடுவதில் பயிற்சி எடுத்துககொண்டார்,
 1972ல் 25 பேருடன் புதிய தமிழ்ப்புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவதுவயதில்பிரபாகரன்தொடங்கினார்

பிறகுஇந்தப்பெயரை 05,05,1976  என்ற தமிழீழ விடுதலைப்புலிகள் என்று மாற்றினார், அன்று முதல் தமிழீழத் தேசியத்தலைவர் என்று மதிக்கப்படுகிறார்

பிறகுபலமுறைசிங்களராணுவத்தைஎதிர்த்துப்பேர்ர்நடத்தினார், 1987 இல் நடந்த ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனா ஒப்பந்தப்படி இந்தியராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்குச் சென்று தமிழர்களைக் கொன்று குவித்தது, விடுதலைப்புலிகளையும் அழிக்க முயன்றது, ஆனால் பிரபாகரன் இந்திய ராணுவத்தைத் துணிவுடன் எதிர்த்துநின்றார், பெரும்போராட்டத்துக்குப்பிறகு கிட்டத்தட்ட முழுதமிழீழம் பகுதியைம் தன்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார், வான்படை, கப்பல்  படை கூடவைத்திருந்தார்

பலமுறைஅமைதிக்குமுயன்றும்சிங்களம்அதனைமதிக்கவில்லை, பிறகுகடந்த 2009 இல் இலங்கை உலகின் பல நாடுகளின் ராணுவ பலத்துடன் விடுதலைப்புலிகளுடன் மோதியது, இதில் இந்தியா இலங்கையின் முக்கியப்பங்காகளியாக விளங்கியது,  இறுதியில்  2009 மேமாதம் 15 முதல் 19 வரை சிங்கள ராணுவம் கடும்தாக்குதலை நடத்தி, உலகில் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை எல்லாம் பயன்படுத்தியது, கொத்துக்குண்டுகளைவீசி மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்தது, மருத்துவமனைகள்,  பள்ளிகள்மீதுகூட குண்டுகளைவீசியது,  இறுதியில் 17ஆம்தேதி பிரபாகரனையும் அவரது இரண்டு மகன்களையும் கொன்றது, இதில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் உயிரிழந்தனர், இது சரித்திரத்தில் முள்ளி வாய்க்கால்  இனப் படுகொலை நிகழ்ச்சியாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு விட்டது. . தனது தாய்த் திருநாட்டிற்காகத்  தன்னையும் தன்குடும்பத்தையும் தியாகம் செய்து உலக வரலாற்றின் மாபெரும் வீரரானார் பிரபாகரன்,

பிரபாகரனின் பொன்மொழிகள்

"இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனக்குத் தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." 

'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல்மூலம் வளர்ந்து வந்தபின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.

ஒரு தவறு நடந்தால் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்."

"உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காகச் செத்திருக்கவேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்கவேண்டும்.

அருகில் உல்ல பள்ளி மாணாக்கர் சிலரிடம் அவர்களின் ஆசிரியர் 

வன்கொடுமை குறித்து ஒரு நாடகம் போடவேண்டும், நாளைக்கே என்று 

சொல்லியிருக்கின்றார். இலங்கை விஷயமே அவர்களுக்கு வன் 

கொடுமையாகப்பட்டிருக்கின்றது. அதனையே தேர்ந்தும் எடுத்துள்ளனர். 

அந்த மாணாக்கர்களுக்கு உள்ள தமிழினப்ப் பற்று கூட பெரியவர்களிடம் 

இல்லையே என்பதே எனது கவலையும், துக்கமும்.அவர்களில் ஒருவர் 

என்னை அணுக, நான் என் நண்பர் நலங்கிள்ளியை அணுக அவர் எழுதித் 

தந்ததை அப்படியே அந்தச் சிறுவர்களிடம் கொடுத்துவிட்டு வலைபூவிலும் 

பதிந்து விட்டேன்.

அவர்களுக்குத் தகுந்தாற்போன்று வசனங்களை எழுதிக்கொள்ளட்டும் என்று 

விட்டு விட்டேன். அவர்களைப் படைப்பாளிகளாக்குவதுதானே நல்ல செயல் ?    சொர்க்கத்தில் எம்.ஜி.ஆருடன் பிரபாகரன்

0 comments:

Post a Comment

Kindly post a comment.