Add caption |
மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ
வருந்தலை என் கேண்மைக்கோவே. -
- மகாகவி சுப்பிரமனிய பாரதியார்
வ.உ.சி.சுயசரிதை :-
முற்றிலும் அகவற்பாவால் அமைந்தது. “காருண்ய அரசாங்கத்தின் கெள்ரவ”சிறையில் ) இருந்தபோது அவ்வப்போது துணுக்குகளாக எழுதியனுப்பியது. பரலி.சு. நெல்லையப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க எழுதப்பட்டது. இவர் பிற்காலத்தில் “லோகோபகாரி” பத்திரிகையின் ஆசிரியராக விளங்கினார். சுய சரிதையின் பிற்பகுதி சிறையிலிருந்து வெளிவந்தபின் எழுதப்பட்டதாகும். முதலில் “காந்தி” பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவரும், பின்னர் தினசரி பத்திரிகையின் ஆசிரியருமாய்த் திகழ்ந்த் திரு.தெ.ச. சொக்கலிங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதியது.
முதற்பதிப்பு 1946-ம் ஆண்டின் இறுதியில் வெளியானது. இரண்டாம் பதிப்பு
18-11-2008-ல் நெல்லை திவான் அவர்களால் வெளியிடப்பட்டது. 0462-2572665
புதுவை அரவிந்தர் ,மாளிகையில் :-
” பாரதி,ஓர் ஊரை ஆள ஒரு பத்திரிகை போதுமானதாயிருக்கலாம். ஆனாக். உலகத்தை ஆள 27மொழிகளில் பத்திரிகைகள் நடத்தினால் மட்டும் போதும்என்று நினைக்கிறீர்களா? “ என்று சுமார் அரைநூற்றாண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழன்,காலஞ்சென்ற கவிச் சக்கரவர்த்தி ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியை அறைகூவிக் கேட்டார்.
எதிர்பாரத இவ்வறை கூவலைக் கேட்டு பாரதி கூட சிறிது நேரம் திக்பிரமை பிடித்தவராகிவிட்டார், ஆச்சரியத்தால்! இவ்விதம் கவிஞரைப் பதறச் செய்து மெள்னியாக்கிவிட்ட தமிழன் யார்?
தென்னாட்டின் சுதேசிக்கப்பல் கம்பெனியை ஏன் சுதேசிய இயக்கத்தையே தோற்றுவித்த ஸ்ரீமான் உ.சிதம்பரம் பிள்ளைதான்.
பாரதி, தன்னருகே அமர்ந்திருந்த”பிள்ளைவாள், நாங்கள் ஒரு பத்திரிகையை நடத்தப்படும் கஷ்டமே சொல்ல முடியாது.நீங்கள் 27-பத்திரிகைகள்- அதுவும் வெவ்வேறு மொழிகளில்நடத்தத் திட்டமிடுகின்றீர்களே! அதற்கு எவ்வளவு பணம் வேண்டும் ? எவ்வளவு ஆள் வேண்டும் ?இடம்தான் எங்கே ? இது எங்காவது நடக்கிற காரியமா? “ என்று சிரித்தவாறே கேட்டார். க்டல் முழுதும் கப்பல் விட நிதி த்ரட்டிய பிள்லைக்கு 27 மொழிப் பத்திரிககள் அற்பமாகத்தோன்றியிருக்கலாம் போலும் !
வ.உ.சி.யின் பாடல் திரட்டு :-
சிறைக்குச் செல்லுமுன் பாடிய தனிப்பாக்களும், கோயமுத்தூர், கண்ணனூர் சிறைகளில் இருந்தபோதும் இயற்றிய தனிப்பாக்களும் அடங்கியவை. பெரும்பாலவை வெண்பாக்கள், மற்றவை ஆசிரியப்பா, கட்டளைக் கலித்துறை முதலியன். இனிய செந்தமிழில் இயற்றப்பட்டவை.
சங்கீதஞானம் தமக்குக் கிடையாது என்று சொல்லிக் கொள்ளும் வ.உ. சி. இப்பாடல்களைப் பாடியது ஓர் வித்தகச் செயல் என்ரே கூறிடல் வேண்டும். நிரதுசய-பாலசுந்தரசுவாமி, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை, ஆனந்த ஸ்ரீ தை மாதம் 15 தேதியில் அறிமுக உரை எழுதியுள்ளார்.முதற் பதிப்பு 1915-ல் வெளியானது.
இதன் இரண்டாவது பதிப்பை வ.உ.சி.பாடல்கள் என்னும் பெயரில் வெளியிட்ட பெரியவர் நெல்லயைச் சேர்ந்த செ.திவான். ( 0462-2572665 )
வி.ஓ.சி. கண்ட பாரதி :-
பாரதியாரைப்பற்றி வ.உ.சி. எழுதிய குறிப்புகள் தான் இவை. 17-11-1946-ல் தினமணியின் உதவி ஆசிரியராக இருந்த வ.உ.சி. சுப்பிரமணியம் முன்னுரை எழுதியுள்ளார்.
மெய்யறிவு:-
கண்ணனூர்ச் சிறையில் இருக்கும்பொழுது ஏனைய குற்றவாளிகளுக்குப் போதனைகள் பல செய்துவந்தார். ”அவர்கள் எங்கள் கேடுகளையும் ,அவற்றை நீக்குவதற்குரிய வழிகளையும் பாக்களாகத் தொகுத்துக் கொடுத்தால் அவற்றை நினைத்துக்கொள்வோம் ” என்று பிள்ளையிடம் வேண்டினர். அன்று இரவு, மறங்களைதல் என்னும் அதிகாரத்தில் உள்ல 10 வெண்பாக்களைப் பாடினார். அவற்ரை மனனம் செயவும் வைத்தார். அறம்புரிதல் அடுத்த பத்து வெண்பாக்களாயின.
முன்னும் பின்னும் சில வெண்பாக்களைச் சேர்த்து, மொத்தம் 100 வெண்பாக்களாக்கி, மெய்யறிவு என்ற நூலை உருவாக்கினார்.உரை கோளர் ஒருவரால் இதற்கு உரை எழுதப்பட்டது. அவர் பெயரை வெளியிட விரும்பாததால் அவர் பெயர் வெளியிடப் படவில்லை. மொத்தத்தில் கன்னனூர் சிறையில் மனம் போல வாழ்வு, மெய்யறிவு, மெய்யறம் நூல்களை எழுது முடித்துள்ளார்ர்.
மெய்யறிவு ராக்ஷஸ வருடம் ஆவணி மாதம் 3 தேதி முதற்பதிபு மயிலையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.இரண்டு ,மூன்றாம் பதிப்புகளும் வ.உ.சி.யால் வெளியிடப்பட்டுள்ளன.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலை இயற்றியவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகிய பொய்கையார். 45 செய்ய்ட்களைக் கொண்டு உருவத்தில் சிறிதாகத் தோன்றினும், அடங்கிக் கிடக்கும் பொருள்களின் அருமையும் பெருமையும் அளவிற்கு அடங்காதவை.
வ.உ.சி.க்குக் கிடைத்த ஏட்டுப்பிரதி, நெல்லை, ஆழ்வார்திருநகரியச் சேர்ந்த, (அவர் வாழ்ந்த காலத்திலிருந்து ) 300 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த,மாறனலங்காரம் முதலிய நூல்களை எழுதிய, ஸ்ரீமான் இரத்தினக் கவிடாயர் அவர்களால் எழுதப்பெற்ரது. தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீமான் த.மு. சொர்ணம் பிள்ளையவர்கள் இந்த ஏட்டுப்பிரதியை , மேலும் பல தொன்மையான ஏட்டுப் பிரதிகளோடு தமக்குத் தந்ததாக வ.உ.சி. கூறுகின்றார்.
அந்தத் தமிழாசிரியருக்கு, திருமேனிக் கவிராயரவர்கள் சந்ததியர்களுக்குத் தலவராகவும், ஜில்லா தாலுகா போர்டு ம்ர்ம்பராகவும் விளங்கிய ஸ்ரீ அ.மீ. மலையாப் பிள்ளை என்றும் குறிப்பிடுகின்றார்.இன்னிலையை முன்னுரையில் பெரும்புலவரைப்போல் விளக்கியுள்ளது படித்து இன்புறத் தக்கது. பிரம்பூர்,சென்னை, பிங்கள வருடம் ஆடிமாதம் 9ஆம் நாள் முகவுரை எழுதப்பட்டுள்ளது. இரண்டு பதிப்புகள் வெளியிட்டுள்ளார்.
அகமே புறம் :-
1914-ஆம் ஆண்டு முதற்பதிப்பு வெளிவந்துள்ளது. ஸ்ரீ ஜேம்ஸ் ஆலன் எழுதியுள்ள, அகத்திலிருந்து புறம் என்ற நூலைத்தான், வ.உ.சி. அகமே புறம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார் இம்மை மறுமைப் பயன்களை அடைய விரும்புவோரே இதனைக் கற்ரற்கும் கேட்டற்கும் உரியர். இதன் பொருளைக் கசடறக் கற்றுக் கைக்கொண்டு ஒழுகுதலே இதனைக் கற்கும் முறை என்றும் வலியுறுத்துகின்றார். இந்நூலினைப் பலரும் விரும்பியதால், ஜேம்ஸ் ஆலனின் சரித்திரச் சுருக்கத்தையும் சேர்த்து இரண்டாம் பதிப்பினை வெளியிடுகின்றார்.
மனம் போல வாழ்வு :-
இந்நூல் ஸ்ரீ ஜேம்ஸ் ஆலன் எழுதிய அரிய நூல்களில் ”எளிமையிலிருந்து வலிமைக்கு “ என்ற நூலின் முதற்பாகத்தின் மொழிபெயர்ப்பாகும். இதுவே ”மனம் போல வாழ்வு” என்று வ.உ.சி.யால் தமிழர்களுக்கு ஏற்றவாறு சிற்சில மாற்றங்களுடன் வெளியிடுவதாகக் கூறுகின்றார். 25-07-1930-ல் வெளியானது. வ.உ.சி. மொழியாககம் செய்த ஜேம்ஸ் ஆலன் நூல்கலே தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் ஆளுமைத்ய் திறன் வளர்க்கும் நூல்களுக்கெல்லாம் முன்னோடி என்று கூறலாம்.
சாந்திக்கு மார்க்கம்.:-
பெற்றோர்களுக்கும், கல்வி கற்பித்த ஆசிரியர்கட்கும் நன்றி கூறுகின்றார்.
1908 ஆம் ஆண்டு ஜூலை முதல், 1912 ஆம் ஆண்டு டிசம்பர் மாத முடிய, மாதந்தோறும் 50 ரூபாய்க்கு மேலாகவும், , தந்தி மணியார்டர் மூலமாக முதன் முறை ரூபாய் 500/-ம், இரண்டாம் முறை 2000/- தங்கக் கடிகாரம் முதலியவற்றை நேரிலும் கொண்டு வந்து சேர்த்த தஞ்சை ஜில்லா தில்லையாடி திரு. த. வேதியப்பபிள்ளை அவர்களுக்கும் நன்றி கூறுகின்றார்.
1924 ஆம் ஆண்டு வக்கீல் உத்தியோகத்தை மீண்டும் பெறுவதற்கு உதவி செய்த ஸ்ரீ.இ.எச். வாலேஸ் அவர்களுக்கு நன்றி கூறி, தன் கடைசி மகனுக்கு வாலேஸ்வரன் என்றே பெயர் சூட்டுகின்றார்.
1932 முதல் கோவில்பட்டியை விட்டு வந்தது முதல் குடும்பச் செலவுகளுக்கும், அவ்வப்போதைய தேவைகளுக்கும் உதவி தன்னைப் பேணிக்காத்துவரும் தூத்துக்குடி திரு.அ.செ.சு.கந்தசாமி ரெட்டியார் அவர்களுக்கும், திரு. அ.செ.சு.முத்தைய ரெட்டி அவர்களுக்கும் நன்றி கூறுகின்றார்.
தமது சஷ்டியப்பூர்திக்கு ரூபாய் 1000/- தந்துதவிய “தமிழ்நாடு” ஆசிரியர் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களுக்கும் , அவர் விருப்பப்படி அந்நிதிக்குப் பொருல் கொடுத்து உதவிய ஏனைய தேசாபிமானிகளுக்கும் நன்றி கூறுகின்றார்.
இதுவும் இங்கிலாந்து தேசம், இல்பிராக் கோம்பி நகர்,திரு. ஜேம்ஸ் ஆலனின் ( From Poverty to Power ) "எளிமையிலிருந்து வலிமைக்கு “ ர்ன்னும் ஆங்கில நூலின் இரண்டாம் பாகமாகிய The Way Of Peace என்பதன் மொழிபெயர்ப்பாகும், 17-07-1934- ஆம் ஆண்டு தூத்துக்குடியிலிருந்து வெளியிடுகின்றார்.
சிவஞானபோத உரை :-
தூத்துக்குடியில் 25-08-1883-ல் சைவ சித்தாந்தசபை துவங்கப்ப்ட்டது. 1904 ஜூன் முதல் 1905 ஆகஸ்டு வரை இச்சபையில் எட்டு சொற்பொழிவுகளை வ.உ.சி.நிகழ்த்தியுள்ளார். மெய் கண்டார் அருளிச்செய்த சிவஞான போதத்திற்கு உரை எழுதியுள்ளார்.1934-1935 -ஆம் ஆண்டுகளில் உரையின் முன்வடிவை தினமணியில் எழுதியுள்ளார். தூத்துக்குடி-எட்டையபுரம் நெடுஞ்சாலையில் உள்ள் குறுக்குச் சாலையில், அ.செ.சு.தர்மச் சத்திரத்தில் வ.உ.சி.யின் ”சிவஞான போத உரை” அரங்கேற்றம் செய்யப்பட்டது. பின்னர் அவ்வுரையினைச் செப்பனிட்டு 1935-ல் வெளியிட்டு மகிழ்ந்தார்
திருக்குள் - அறத்துப்பால்:-
( காகிதம், மை, கட்டுநூல் முதலியவை எல்லாம் சுதேசியம்)
இந்நூலை வெளியிடப் பொருள் உதவி புரிந்தோர்;- புதுக்கோட்டை மிட்டாதாரரும் பெரிய நிலச்சுவான்தாரும் அதிதனவந்தரும், திருநெல்வேலி டிஸ்டிரிக்ட் போர்டு அங்கத்தினரும், திருச்செந்தூர் திரு.சுப்பிரமணியசுவாமி தேவஸ்தான கெள்ரவ தருமகர்த்தாருமாகிய திரு. அ.செ.சு. கந்தசாமி ரெட்டியாரவர்களும், அவர்களது அவிபக்த மைத்துனரும் தூத்துக்குடி சர்க்கிள் தேவஸ்தானக் கமிட்டி வைஸ்பிரசிடண்டுமாகிய திரு. ஆ.செ.சு. முத்தைய ரெட்டியாரவர்களுமே என்று குறிப்பிடுகின்றார். 09-02-1935-ல் வெளிவந்துள்ளது.
திருவள்ளூவர் திருக்குறள் ( வ.உ.சிதம்பரம் பிள்ளை உரையுடன் உரைப்பாயிரம் ):
”தமிழ் மக்களெல்லாம் திருவள்லுவர் திருக்குறளைக் கற்றும் கேட்டும் உணர்ந்து,அது கூறும் நெறியில் ஒழுகி மேம்படவேண்டுமென்றும் யான் கோருகின்றேன். எல்லாம் வல்ல இறைவன் துணை.” -உரையாசிரியன்
என்று முகமன் கூறி முடிக்கின்றார் வ,உ.சி. 09-01-1935. வெளிவருகின்றது.
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் :- தொல்காப்பியம்- இளம்பூரணம் :-
இந்நூலின் எழுத்ததிகாரத்தையும், பொருளதிகாரத்தையும் 1920-ஆம் ஆண்டில் அச்சிடத் துவங்கினேன். பொருளதிகாரம் அகத்திணையியலர் புரத்திணையியல்கல் முன்னரே அச்சாகி வெலிவந்துள்லன. இஃது இப்பொழுது வெளிவருகின்றது.பொருளதிகார ஏனைய இயல்கலும் சொல்லதிகாரமும் விரைவில் வெளிவரும். என்ற முத்தாய்ப்புடன் முன்னுரையை, கோவில்பட்டியில். 01-06-1928.
தொல்காப்பியம் பொருளதிகாரம் 15-01-1936-ல் கோவில்பட்டியிலிருக்கும்பொழுது பதிப்புரையில் இட்ட தேதி.
வள்ளியம்மை சரித்திரம் :-
என் தலைவியே இச்சரித்திரத்தின் தலைமையாய் அமைந்ததைப்பற்றிப் பேருவகை எய்துவதாகத் துவக்குகின்றார், பதிப்புரையை அவளை யான் பெற்றதும், அவளோடு யான் வாழ்ந்ததும், அவளைப்பற்றிய பிரிவும் இச்சரித்திரத்தில் ஒருவாறு கூறப்பட்டுள்ளன.
இதனை இயற்றியவர், என் தந்தையின், தங்கையின், குமாரர்,ஸ்ரீ.முத்து. இச்சரித்திரத்தை இயற்றி என்னிடங்கொண்டு வந்து கொடுத்தார். அவரது மற்றைய பாடல்களை வெளியிடுங்கால் அவ்ரது சரித்திரத்தை வெளியிடக் கருதியுள்ளேன்.
இச்சரித்திரத்தின் முடிவிற் சேர்க்கப்பட்டுள்ள “நூற்புற’த்திற்கு காணப்படும் கடிதங்கள் என் மனைவியின் மரணத்திற்குப் பின்னர் எனக்கு வந்த் என் நண்பர்களின் ஆங்கிலக் கடிதங்கள் சிலவற்றின் மொழிபெயர்ப்பு. இதனை மொழி பெயர்ப்புச் செய்து தந்தவர்கள் எனது அந்தண நண்பர்களில் ஒருவர். அவரும், எனது இரண்டாம் மனைவியுமே இந்நூலை அச்சிடுமாறு என்னைத் தூண்டியவர். அதற்காக அவ்விருவருக்கும் யான் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளேன்.
திருமயிலை ,சென்னை, இராட்சஸ வருஷம் ஆடிமாதம் 19 வது நாள்.
அழகும் ஆரோக்கியமும் :-
அழகின் பயன், அழகின் பாகுபாடு, பெண்மகல் அழகின் மூன்று பருவங்கள் என்று முதல்பாகத்திலும்,
நமது முகங்களை அழகு செய்யும் விதம், முகத்திருத்த மருமங்கள்,( II )
முகத்திருத்த மருமங்கள் ( III )
ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் உள்ள சம்பந்தம், அழகின் மாற்ரமும் அதன் காரணங்களும், உணவு முகத்தில் செய்யும் வேலை,( IV )
என்று நான்கு பிரிவுகளில் 13 பக்கங்களில் எடுத்துக் கூறியுள்ளார்.
இந்நூலை முதன்முதலில் வெளியிட்ட பெருமை திருநெல்வேலி முஸ்லீம் பெரியவர் செ.திவான் அவர்களையே சாரும். ( 1999) தொடர்பு எண் 0462-2572665
அரசியல் பெருஞ்ச்சொல் :-
எனது அரசியல் பெருஞ்சொல் என்று 1927-ல் வ.உ.சி.வெளியிட்ட நூல். 1922-ல் காங்கிரசை விட்டு விலகியிருந்வரை, 1927-ல் சேலம் கூட்டத்திற்கு தலைமை ஏற்க அழைக்கின்றது காங்கிரஸ் இவர்கள் பெரும்பாலும் பிராமணர் அல்லாதவர்கள் அந்தக் கூட்டத்திற்குத் தலைமை ஏற்று வ.உ.சி.ஆற்றிய உரை இப்பெயரில் வெளியாகியுள்ளது.
1996-ல் இதனை வெளியிட்ட பெருமையும் நெல்லைப் பெரியவர் செ,திவானையே சேரும். ( 0462-2572665 )
lஇந்திய வரலாற்றில் வ.உ.சி.:-
1) வாழ்வியல் 2) நிகழ்வுகள் 3) நினைவுகளின் பதிவுகள் 4) படைப்புலகப்
பதிவுகள்
5) அரசியல் அறிஞர்கள் பார்வையில் 6) தமிழறிஞர்கள் பார்வையில்
7) நேர்காணல்-வ.உ.சி.குமாரரிடம் ஓர் நேர்காணல்
8) எடுத்தாளப்பட்ட நூற்பட்டியல் ஆசிரியர்:-
-ப.முத்துக்குமாரசாமி, 5-பி,விஸ்வாஸ் குடியிருப்பு,
நெசப்பாக்கம், சென்னை-600 078 தொலைபேசி 044 23714637
நோபல் பப்ளிகேஷ்ன்ஸ், 10-B, முனுசாமி தெரு,
சாலிகிராமம், சென்னை-600 093
அச்சில் வராத நூல்கள்:-
01. ஆண்டுளை நீடிக்கும் ஆறு
02. ஊழை வெல்ல உபாயம்
03. சிவமதம்
04. விஷ்ணுமதம்
05, புத்தமதம்
06. இஸ்லாம் மதம்
07. கிறிஸ்து மதம்
08. மனித மதம்
09. முக்திநெறி
10. The Universal scripture
11. திருக்குறள் - மணக்குடவர் உரை-இன்பம்.
12. திருக்குறள் -மணக்குடவர் உரை -பொருள்
13. திலக மகரிஷி ( இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி
நாளிதழின் ஞாயிறு மலரில்18 மாதங்கள்
வ.உ.சி. எழுதிய அச்சில் வராத நூல்களைப்ப்பற்றி 16-11-1980 தமிழரசு இதழும் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.இதில் முதலாவதாக குறிப்பிட்டிருந்த அழகும் ஆரோக்கியமும் என்ற நூலை, செ.திவான் அவர்கள் வெளியிட்டு விட்டதால் அதனை இங்கு குறிப்பிடவில்ல.
இத்தகவல்களைத் தருபவர் நெல்லைசெ.திவான். மேலும் அவர் வ..உ.சி.யின் உயில் 2003-லும், வ.உ/சி.செல்லம்மாள் உயில் 2009 மார்ச்சிலும் வெளியிட்டுள்ளார்.
ராக்ஷஸ வருடம் ஆவணி மாதம் 3 தேதி முதற்பதிபு மயிலையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.இரண்டு ,மூன்றாம் பதிப்புகளும் வ.உ.சி.யால் வெளியிடப்பட்டுள்ளன.
அச்சில் வராத நூல்கள்:-
01. ஆண்டுளை நீடிக்கும் ஆறு
02. ஊழை வெல்ல உபாயம்
03. சிவமதம்
04. விஷ்ணுமதம்
05, புத்தமதம்
06. இஸ்லாம் மதம்
07. கிறிஸ்து மதம்
08. மனித மதம்
09. முக்திநெறி
10. The Universal scripture
11. திருக்குறள் - மணக்குடவர் உரை-இன்பம்.
12. திருக்குறள் -மணக்குடவர் உரை -பொருள்
13. திலக மகரிஷி ( இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி
நாளிதழின் ஞாயிறு மலரில்18 மாதங்கள்
எழுதிய தொடர் கட்டுரை )
வ.உ.சி. எழுதிய அச்சில் வராத நூல்களைப்ப்பற்றி 16-11-1980 தமிழரசு இதழும் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.இதில் முதலாவதாக குறிப்பிட்டிருந்த அழகும் ஆரோக்கியமும் என்ற நூலை, செ.திவான் அவர்கள் வெளியிட்டு விட்டதால் அதனை இங்கு குறிப்பிடவில்ல.
இத்தகவல்களைத் தருபவர் நெல்லைசெ.திவான். மேலும் அவர் வ..உ.சி.யின் உயில் 2003-லும், வ.உ/சி.செல்லம்மாள் உயில் 2009 மார்ச்சிலும் வெளியிட்டுள்ளார்.
ராக்ஷஸ வருடம் ஆவணி மாதம் 3 தேதி முதற்பதிபு மயிலையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.இரண்டு ,மூன்றாம் பதிப்புகளும் வ.உ.சி.யால் வெளியிடப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment
Kindly post a comment.