Wednesday, September 5, 2012

5 ,300 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி ! -பெரியார் பிஞ்சு- சிறுவர் இதழ் !




விடுதலைக் குழுமத்திலிருந்து ஜுலை 2010 முதல் சிறுவர்களுக்கான இதழாக,

பெரியார் பிஞ்சு  இணைய உலகில் வலம் வந்து கொண்டிருக்கின்றது .

பெயரிலே பிஞ்சாக இருந்தாலும் பெரியவர்களுக்கான தகவல்களும்

இருக்கின்றன. எனவே இந்த அறிமுகம். ஆர்வலர் சென்று பார்க்கலாம்.

சிறுவர்களிடம் உள்ள திறமைகளை வளர்ப்பதற்கும், இல்லாதவற்றை

உருவாக்குவதற்கும் பல்வேறு பயிற்சிகளும் உள்ளன. அனைவரும் பார்த்துப்

பயன்படுத்திக் கொள்ள வேண்டிய இணையதளம்.

http://www.periyarpinju.com/new/


பிஞ்சுகளே...மம்மின்னா யாருன்னு உங்களுக்குத் தெரியுமல்லவா?
என்னங்க...
இது கூடவா தெரியாது.
எங்க அம்மாதான் மம்மி... அப்பிடீங்கிறீங்களா?
அதுதான் இல்லை.
உங்க அம்மா மம்மி இல்லை.
உங்க இங்கிலீஷ் மீடியம் பள்ளிக்கூடங்கள்  அம்மாவை மம்மின்னு தப்பா சொல்லிக் கொடுத்துருச்சு. நீங்களும் அந்த வார்த்தைக்கு என்ன பொருள்னே தெரியாம மம்மி... மம்மின்னு தப்பாவே கூப்புடுறீங்க.
அதுமட்டுமா.. நீங்க மம்மின்னு அழைப்பதைப் பார்த்து உங்க பெற்றோரும்  மகிழ்ச்சி அடையுறாங்க. ஏன்னா அவங்களுக்கும் இந்தச் சொல்லுக்குப் பொருள் தெரியாது. தெரிஞ்சா மகிழ்வாங்களா?

oxford dictionary எடுத்துப் பாருங்க.
mummy ‘mAmi’ - a body of a human being or animal that has been ceremonially preserved by removal of the internal organs, treatment with natron and resin, and wrapping in bandages என்று oxford dictionary கூறுகிறது.

அதாவது மம்மி என்றால் உயிரற்ற மனிதன் அல்லது விலங்கின் பதப்படுத்தப்பட்ட உடல்;

உடலின் உள்ளுறுப்புகள் நீக்கப்பட்டு, நேட்ரன் மற்றும் ரெசின் என்ற வேதிப் பொருள்களைத் தடவி துணிகளால் கட்டப்பட்டது என்று இதற்குப் பொருள்.
மம்மி-ன்னா பிணம் அப்படின்னு ஆக்ஸ்போர்டு இங்கிலீஷ் அகராதி சொல்கிறது.

இப்போது சொல்லுங்கள்.
நம்ம அம்மாவை மம்மின்னு சொல்லலாமா?
நம்ம தமிழ்ப் பிள்ளைகளெல்லாம் இப்படி அழைப்பதை எண்ணி வருந்தித்தான்,

கடந்த மாதம் காலமான பாவலர் பல்லவன்,
அம்மா என்றது மாடு; மம்மி என்றது குழந்தை என ஒரு புதுக்கவிதையே எழுதினார்.

சரி இப்ப மம்மி பற்றிய செய்திக்கு வருவோம்.


இந்த மம்மிதான் உலகத்திலேயே மிகப் பழைய மம்மியாம். எவ்வளவு பழசு தெரியுமா?

5,300 ஆண்டுகள் பழையது. ஓட்சி (otzi) என்னும் இந்தப் பனி மனிதனின் உடல், 1991 ஆம் ஆண்டு இரண்டு சுற்றுலாப் பயணிகளின் கண்ணில் பட்டது. ஹெல்மட், எரிக்கா சைமன் என்ற இரு ஜெர்மன் பயணிகள் ஆஸ்திரியா -இத்தாலி எல்லையோரம் உள்ள ஆல்ப்ஸ் மலையின் ஓட்சால் பனிமலைக்கு சுற்றுலா சென்றனர். அப்போதுதான் இந்த மம்மியைக் கண்டனர். கண்டெடுக்கும் போது இதன் எடை 13 கிலோ 750 கிராம் இருந்தது. அறிவியல் ஆய்வாளர்கள் மரபணு உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.


அப்போதுதான் இந்த மம்மி 5,300 ஆண்டுகளுக்கு முந்தைய பனிமனிதன் என்பது கண்டறியப்பட்டது. 5 அடி 5 அங்குலம் உயரமும், 50 கிலோ எடையும் கொண்ட இந்தப் பனி மனிதன் 45 வயதை உடையவனாக இருந்தபோது வேட்டையாடியபோது நேர்ந்த விபத்தில் இறந்திருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஏனென்றால் இதன் வலது தோளில் அம்பு பாய்ந்த தடம் இருக்கிறது.
ஓட்சால் மலைப்பகுதியில் இருந்து இந்த மம்மி கண்டெடுக்கப்பட்டதால் இதற்கு ஓட்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இறந்த உடலை பதப்படுத்துவதுதான் மம்மி என்றழைக் கப்படுகிறது. பனி படர்ந்த மலைப்பகுதியில் உறைபனிக்குக் கீழே இருந்ததால் இந்தப் பனி மனிதனின் உடல் இயற்கையாகவே பதப்படுத்தப்பட்டுவிட்டது. இன்னொரு வியப்பான செய்தி என்ன தெரியுமா? இந்த மம்மியின் உடலில் ரத்த சிவப்பணுக்களைக் கண்டறிந்துள்ளார்கள்.
நாங்கள் சில ரத்த எச்சங்கள் அல்லது குன்றிய ரத்த அணுக்களே இருக்கலாம் என்று நினைத்தோம். இதில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் பண்டைய மனிதனின் ரத்த மாதிரிகள்  போல இல்லாமல், தற்போதைய மனிதனின் ரத்த சிவப்பணுக்களின் மாதிரிகள் போல உள்ளன. இது ஆச்சரியமான செய்தி என்கிறார் மரபணு ஆய்வாளர் ஆல்பர்ட் சிங்க்.இந்த ரத்த சிவப்பணுக்களை ஆராய்ந்தபோதுதான் இது 5,300 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது உறுதிசெய்யப்பட்டது.
தற்போது இந்த மம்மி, இத்தாலி நாட்டில் உள்ள தெற்கு டைரோல் மாநிலத்தின் தலைநகரமான போல்சானோவில் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
2011























































































































0 comments:

Post a Comment

Kindly post a comment.