Wednesday, September 12, 2012

மதுரை ஆதீனம் தாண்டவபுரம் நாவல்குறித்துக் கூறிய நேர்காணலுக்கு சோலை சுந்தர பெருமாள் வசந்த்தொலைக் காட்சியில் வெளிப்படுத்திய செய்திகள் !:-நாள் 02-03-2012


வண்டல் மண்ணில் வாழ்ந்த வாழும் மக்களின் வாழ்வியல் பண்பாட்டு அம்சங்களை, அவர்களின் போராட்ட வாழ்வுகளை புனைவுகளில் மையப் படுத்தும் நோக்கம் கொண்டு சோலை சுந்தர பெருமாள் தொடர்ந்து தமிழுலகத்திற்குப் படைத்தளித்துத்துவருகின்றார். அவ்வரிசையில் படைக்கப்படும் படைப்புக்களில் தாணடவபுரம் என்ற நாவலும் ஒன்று.

ஆனால், இந்த நாவல் குறிப்பிட்ட ஒரு சாரரிடையே பெரும் புயலைக் கிளப்பி விட்டு விட்டது. அவர்களிடையே எழுந்த புயலுக்கான காரணம்தான் புரியாத புதிராக இருக்கின்றது.

மருதா பதிப்பகம் வெளியிட்டுள்ள பரதேசி என்னும் நூலில்
”மூன்று பினார்கள்” என்றொரு கதை. அதில் மூன்று தலை முறைகளாகப் பூஜை அறையில் வைத்துப் பாதுக்காக்கப்பட்டு வரும் வள்ளலாரின் உயிரற்ற உடலை, பேரன், அவரது தந்தையின் நண்பரது உதவியால், பொங்கலின்போது வருகின்ற போகிப் பண்டிகையைச் காரணமாகக் கொண்டு, வீட்டு வாசலில் வைத்துப் பெட்ரோல் விட்டு கொளுத்திவிடுவதாகக்  ரமேஷ்-பிரேம் என்ற இரு இரட்டையர்களால் கற்பனைப் படைப்பாக உருவாக்கப் பட்டிருக்கின்றது. திருவருட் பிரகாச இராமலிங்க அடிகளார் வடலூரில் ஜோதியில் இறைவனுடன் ஐக்கியமானது ஐதீகம். அந்தக் கதை புதுவையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அதற்கு, இராமலிங்க அடிகளாரின் பக்தர்களோ அல்லது தாண்டவபுரத்தை எதிர்த்திடும் அடியார்கள் கூட்டமோ எத்தகைய எதிர்ப்பையும் காட்டவில்லை.

மதுரை ஆதீனம் ”தாண்டவபுரம்” நாவல் குறித்து வெளிப்படுத்திய நேர்காணலுக்கு எதிர் வினையாக வசந்த் தொலைக் காட்சி நேர்காணலில் சோலை சுந்தரபெருமாள் வெளிப்படுத்திய செய்திகள், நாள் :- 02-03-2012 

தமிழ் என்றால் துறைசார்ந்த அகப்பொருள் என்று சிறப்புப் பெயர் பெறும். இதனை மாணிக்கவாசகர் தன் திருக்கோவையார் என்னும் நூலில் இருபதாவது பாடலில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

சேக்கிழார், காரிநாயனார் புராணத்தில், காரிநாயனார், “காரிக் கோலம்” என்ற நூலை அகத்துறை விளக்கம் பெறுமாறு எழுதி மூவேந்தரிடமும் எடுத்துச் சென்று படித்துக் காட்டி பரிசு பெற்று, அப்பொருள் கொண்டு சிவத்தொண்டு ஆற்றினார் என்று கூறுகிறார். இதனால் தமிழும், அகவாழ்வும் சிவனடியார்களோடு பின்னிப் பிணந்துள்ளது.

”தமிழ்நெறி விளக்கம்” என்னும் அகத்துறை இலக்கணம் ஒன்று உள்லது. அது, “அன்பின் ஐந்திணை ஒழுக்கம்” தமிழ் நெறி என்று வலியுறுத்துகின்றது. இவ்வாறு தமிழ் என்றால் அகத்துறை என்ற சிறப்புப் பெயருக்கு உரியதாக அமைவதை உணரலாம்.

இதன் அடிப்படையிலேயே திருஞானசம்பந்தர் தமிழ்நெறியோடு தன்னை இணைத்துக் கொண்டதால்,  தமிழாகரர் என்றும் கலைஞானசம்பந்தர் என்றும் தன்னைக் கூறிக் கொள்ள முடிகிறது.

இவ்விடத்தில் ஐந்திணக்கும் உரிய கடவுளரின் இணைப்பாகவே சிவபெருமான் வடிவம் பெற்றிருக்கின்றார் என்ற செய்தியைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். எனவே, சிவனும் தமிழோடு பொருந்திய கடவுள் ஆவார்.

பரத்தையர் பிரிவை அனுமதிக்கும் தொல்காப்பியம் “காமப்பகுதி கடவுளும் வரையார்” என்ரு கூறுவதன் மூலம் ர்ஹேவதாசியர் அப்போதே தமிழ்ச் சமூகத்தில் இடம்பெற்றுள்ளதையும் அவர்கள் கடவுலோடும் மனிதர்களோடும் உறவு கொண்டு இருந்தமையும் இலக்கணப்படுத்தி உள்ளது.

ஆகையால் ப்ரவையாரிடம் சுந்தரர் பொருட்டு சிவபெருமான் தூது போனது தமிழின் மீது கொண்ட காதலாலேயே எனலாம். இவ்விடம் ப்ரவையர் தேவதாசி என்பதை மறந்து விடக் கூடாது. இது சிவ பெருமானுக்குத் தெரியாத செய்திகள் அல்ல.

சுந்தரர் தேவதாசியோடு உறவு வைத்துக் கொள்வதை சிவபெருமான் விரும்புவார் என்றால் அது தமிழ் நெறிக்கும் சிவநெறிக்கும் முரண்பட்டது அல்ல என்றால் என்னுடைய ( தாண்டவபுரத்தில் ) கற்பனைப் பாத்திரமான தேவதாசி மனோன்மணியோடு, திருஞான சம்பந்தருக்குக் காட்டப்பட்டுள்ள உறவு  எப்படி இழிவானதாகக் கருத முடியும்? 

நாவல் என்பது புராணத்திலிருந்து மாறுபட்டது. இராமாயண சீதையை மலையாள காவியமாகிய “ சிந்தா விஷ்டியாய சீதா” வில் இராமன் உத்தரவுக்கு இணங்கித் தீயில் இறங்க மறுத்துள்ளதை முற்போக்கான செய்தியாக இன்றைய இலக்கிய உலகம் அங்கீகரித்துள்ளது.

இதை யாரும் மத விரோதமாகப் பார்க்கவில்லை. அது போலவே ர்ஹேவதாசி மனோண்மணியை மாதவி நிலக்கு, மாண்புடையவளாக உயர்த்திக் காட்டியிருப்பது மகளிர் உரிமையை உயர்த்திப் பிடிக்கவே ஆகும்.

இறுஇதியாக ஜோதியில் கலத்தல் என்றால் தீயிலிட்டு எரித்துக் கொலை செய்தல் என்ரே பொருள்படும். நந்தனார் விசயத்தில் நடந்தது இதுதான் என்று பெரிய புராணமே கூறுகிறது. இது அப்பட்டமான வடமொழியாளரின்  சதி என்றே கூற வேண்டும்.

நல்லூர்பெருமணத்தில் இன்று வாழும் மக்கள் திருஞானசம்பந்தர் எரிக்கப்பட்ட அன்று அவரோடு எரிந்து போனவர்களையும் ஒரே இடத்தில் புதைத்து விட்டதாகக் கூறுகிறார்கள். இது எங்கள் கள ஆய்வில் வெளிப்பட்டது. இதனை ஆய்வாளர்கள் அனைவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்குமேல் கூறுவதற்கு எதுவுமில்லை. மற்றப்படி தமிழ்ச் சைவம் சாதிக்கு எதிடாகவும், வர்ணத்துக்கு எதிராகவும் போராடியது என்பதை என்னுடைய ”தாண்டவபுரம்” நாவலில் பாத்திரப் படைப்புகள் மூலம் வார்த்துள்ளேன்..

சோலை சுந்தர பெருமாளின்  மேலும் சில படைப்புக்கள் :-

( சுந்தர பெருமாளின் பெயரில் ” ப்”  இல்லாமல் பள்ளிக்கூடத்திலிருந்தே தொடர்கிறது ) 

1.தமிழ் மண்ணில் திருமணங்கள்  - ஆலயா வெளியீடு, -98847 14603

2.மருதநிலமும் பட்டம்பூச்சிகளும்-முற்றம் வெளியீடு-98847 14603

3. மடையான்காளும் காடைகளும்-நிவேதிதா புத்தகப் பூங்கா- 98847 14603

4. நஞ்சை மனிதர்கள் -நிவேதிதா புத்தகப் பூங்கா 98847 14603

0 comments:

Post a Comment

Kindly post a comment.