Wednesday, September 12, 2012

சிறந்த ஆங்கில நாவல்! இறுதிப் பட்டியலில் இந்தியர் !


லண்டன், செப். 11: 2012-ம் ஆண்டுக்கான சிறந்த ஆங்கில நாவலுக்காக அளிக்கப்படும் "மேன் புக்கர்' பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இந்திய எழுத்தாளரான ஜீத் தய்யில் எழுதிய நாவல் இடம்பெற்றுள்ளது.

ஆங்கில நாவல்களுக்கான பரிசுகளில் உலகிலேயே மிக முக்கியமானது எனக் கருதப்படுவது "மேன் புக்கர்' பரிசு.

2012-ம் ஆண்டுக்கான பரிசுக்காக 6 ஆங்கில நாவல்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

இதில் இந்தியரான ஜீத் தய்யில் எழுதிய "நார்கோபோலிஸ்' என்ற நாவல் இடம்பெற்றுள்ளது.

இந்த 6 நாவல்களும் தலா சுமார் ரூ.2.25 லட்சம் பெறும். "மேன் புக்கர்' பரிசு பெறும் நாவல் எதுவென அக்டோபர் 16-ம் தேதி லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.

இறுதியில் தேர்ந்தெடுக்கப்படும் நாவல் மேலும் சுமார் ரூ. 45 லட்சம் பெறும்.


கவிஞரான ஜீத் தய்யில் எழுதிய முதல் நாவல் இது. இவர் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழின் ஆசிரியர் குழு ஆலோசகர் டி.ஜே.எஸ்.ஜார்ஜின் மகன்

நன்றி :- தினமணி, புதன்கிழமை, 12, செப்டம்பர், 2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.