Tuesday, September 11, 2012

காசி-கங்கையில் உள்ள சரஸ்வதி நதியும் உண்மையாய் இருக்குமோ ?




கோழிக்கோடு டாக்டர் வலியா எம். ஹம்ஸ- சரஸ்வதிக்கொப்பான நதியை

பிரேஸிலில் கண்டுபிடித்த கேரள அறிவியல் அன்பர்.

40 ஆண்டுகளுக்குப்பின் நமது உறவினை ஒருவர் நமது குடும்பத்தினருடன் இணைந்து கொள்ள  வருகின்றார் என்றால் என்ன எதிர்பார்ப்போம் ? எவ்வளவு வெளிநாட்டில் சம்பாத்தியம் செய்து கொண்டு வந்திருப்பார் ? அவருக்குத் திருமணம் ஆகிவிட்டதா? அப்படித் திருமணம் ஆகியிருந்தால் வாரிசுகள் இருக்கின்றனவா? இருந்தால் அதன் எண்ணிக்கை எவ்வளவு? உண்மையிலேயே வாரிசுகள் தானா? இல்லை தத்தெடுக்கப்பட்டு வளர்க்கைப் பட்டவறா? நமக்கு ஏதாவது தேறுமா? என்பதுதான் பலரது எண்ணமாக இருக்கும் !

ஆனால் அவ்வாறு வருகை தந்த உறவினர், உலகிலேயே பெரும் புகழை ர்ஹம் குடும்பத்தினருக்கு ஈட்டி வந்தவரென்றால், அதன் புகழில் நாம் எந்த வகையில் பங்கு பெற இயலும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாக இருக்கும் !  உண்மைதனே ?

1974 ஆம் ஆண்டில் நண்பரது அழைப்பின் பேரில் பிரேசிலுக்குச் சுற்றுலாப் பயணியாகச் சென்றவர், டாக்டர், வவிலியா, எம். ஹம்சாவி !.  ஆனால்,  ஆரு மாதச் சுற்றுலாப் பயணியாகச் சென்றவர் ,  அவரது ஆய்விற்காக நாற்பது ஆண்டுகள் அங்கு தங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.


பிரேசியல் அமேசாம் பிராந்தியத்தில் மிக நீளமான பாதாள நதி ஒன்று உள்ளதைக் கண்டு பிடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. 4 கி.மீட்டர் ஆழத்தில், 6000 கி. மீட்டர் தூரம் ஓடும் நதி ஒன்றினை டாக்டர் வலியா ஹம்சா கண்டு பிடித்ததால், அவரது பெயரே, அந்த நதிக்கு சூட்டப் பட்டது.

அண்டீயன் மலையடிவாரத்தில் இருந்து அட்லாண்டிக் கடல் பகுதி வரை இந்த நீண்ட நதி ஓடுகின்றது. மேற்கு திசையில் இருந்து கிழக்குத் திசையாக சக்திவாய்ந்ந்த அமேசான் நதி போன்று உள்ளது. பிரேசிலின் போமி ஓட்டில் இரு மாறு பட்ட திசைகளில் இரண்டு நதிகள் ஓடும் புனித நிகழ்வு மிக அபூர்வமானதாகும்.

தென் அமெரில்லப் புவி அறிவியல் இதழ் அவரது அபூர்வ அம்சா நதி கண்டு பிடிஉப்பை 2012 ஆம் ஆண்டில் வெளியிட்டு அவரைப் புகழின் உச்ச நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

கோழிக் கோட்டில் பெரோல் லல்லூரியில் இயற்பியல் விரிவுரையாளராக இருந்தவர், ஐதராபாத்  தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்தில் அறிவியல் உதவியாளய்டாக ப் பணியைத் துவக்கினார்.  1973 ஆம் ஆண்டில் கனட்ஃபா தேசிய ஆய்வு கவுண்சிலின் கல்வித் தொகையுடன் டாக்டர் பட்டம் பெற்றார்.

கனடாவில் வேலை வாட்ப்புக்கு எதிர் நோக்கியபோது நண்பரின் அழைப்பின் பேரில் பிரேசில் சென்றார். அங்கு புவியின் வெப்ப நிலையை ஆராய்ச்சி செய்தபோது,  2000 / 3000 மீட்டர் ஆழத்தில் கற்கள் குளிர்ச்சியாக இருப்பது தெரிய வந்தது. பூனிக்கு அடியில் ஆறு ஓடுவதால் இந்தக் குளிர்ச்சி என்று ஏற்படுகிறது என்று கண்டு பிடிக்க உறுதுணையாய் இருந்தது.

என்கிறாற் நமது கோழிக்கோடு  நண்பர், டாக்டர், வலியா எம்.ஹ்ம்சா !

அது சரி ! வேப்பங்க்குச்சியை வைத்து நீர் ஊற்று இங்கே உள்ளது,

தோண்டுங்கள், கிணற்றினை, என்று சொல்வோரைக் கொண்ட தமிழகத்து

இயற்கை விஞ்ஞானிகள் இதற்கு 40 ஆண்டுகளா ? என்று முணுமுணுப்பதும்

கேட்கிறது ?



0 comments:

Post a Comment

Kindly post a comment.