மும்பை தாக்குதலில் தொடர்புடைய அஜ்மல் கசாப்பின் தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த வழக்கில் அஜ்மல் கசாப்பின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2008 நவம்பர் 26ல் நடந்த மும்பை தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலின் போது அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டார். இது தொடர்பான வழக்கில் மும்பை சிறப்பு நீதிமன்றம் கசாப்பிற்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கசாப் மேல்முறையீடு செய்திருந்தார். அதில் நியாயமான விசாரணை நடக்கவில்லை என்று கசாப் தெரிவித்திருந்தார்.
இதனை நிராகரித்த நீதிமன்றம் தேசத்துக்கு எதிராக போர் தொடுப்பது
என்பது மிகக் கடுமையான குற்றம் என்றும், தூக்குத் தண்டனையை உறுதி செய்வதைத் தவிர வேறுவழியில்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
உதவி- புதிய தலைமுறை
0 comments:
Post a Comment
Kindly post a comment.