Wednesday, August 29, 2012

குஜராத் : ஆன்மிகக் குரு அஸ்ராம் பாபுவின் ஹெலிஹாப்டர் விபத்துக்குள்ளானது !



ஆன்மிகக் குரு  அஸ்ராம் பாபு, தன் சீடர்கள் நால்வருடன், இரு நாட்கள்

நிகழப்போகும் சத் சங்க் விழாவில் பங்கேற்க ஹெலிஹாப்டரில் பயணம்

செய்தனர்.. கோத்ராவில் உள்ள ஓர் அறிவியல் கல்லூரித் திடலில்

 இறங்க முற்பட்டபோது விபத்து நேரிட்டது.


கணிசமான உயரத்திலிருந்தே  ஹெலிஹாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே

விழத் துவங்கியது. தரையைத் தொடும்பொழுது முற்றிலுமாக விமானியின்

கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. இருப்பினும் அனைவரும் அதிசயிக்கத் தக்க

வகையில் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர் என்று உள்ளூர்

காவல்துறை தகவல் தந்துள்ளது.

அதிசயங்கள் ஆங்காங்கே நாள்தோறும்

 நடந்துகொண்டுதான் இருக்கின்றன.


 உதவி :-     http://www.ndtv.com/article/india/asaram-bapu-s-helicopter-crash-lands-in-gujarat-260668


0 comments:

Post a Comment

Kindly post a comment.