Saturday, August 11, 2012

போக்குவரத்து, தொழில்துறை, வேளாண்துறை ஜெயலலிதாவின் திட்டங்கள் !


 போக்குவரத்துத் துறை :- 

தமிழகத்தில் எரிசக்திக்கு அடுத்தபடியாகப் போக்குவரத்திற்கு அதிக 

முக்கியத்துவம் அளித்துள்ளார், தமிழக முதல்வர். சாலை, ரெயில், கப்பல், 

மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைக்கு ரூ.3,70,000 கோடி முதலீடு 

நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே 20 ஆயிரம் கோடி ரூபாயில் அதி நவீன கிரீன்பீல்டு 

விமான நிலையம் உருவாக்கப்படும். பிற மாநில நெடுஞ்சாலைகள் ரூ.50,000

கோடியில் தரம் உயர்த்தப்படும். உட்புறச் சாலைகள் 40,000 கோடிரூபாயில் 

சீரமைக்கப்படும்.

மூன்று முக்கிய துறைமுகங்கள் 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தரம்

மேம்படுத்தப்படும். கோவை, திருச்சி, மதுரை விமான நிலையங்கள் 

ஒவ்வொன்றிற்கும் 5000 கோடிவீதம்  செலவிடப்படும். இதன் மூலம் 

ஓராண்டில் ஒரு கோடிப் பயணிகள் பயன்படுத்தும் வண்ணம் உலகத் 

தரத்திற்கு உயர்த்தப்படும். சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய 

நகரங்களுக்கு 40,000 கோடி ரூபாய் செலவில் 8 வழித்தடங்கள் கொண்ட

அதிவேக சாலைகள் அமைக்கப்படும்.


சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களை இணைக்கும் 

வகையில்  1,20,000 கோடி செலவில் அதிவேக ரெயில் பாதைகள் போடப்படும். 

சென்னை, தூத்துக்குடி நகரங்கள் சரக்குப் போக்குவரத்திற்காக 15,000  கோடி 

ரூபாய் செலவில் இணைக்கப்படும். சென்னை தவிர மேலும் இரண்டு 

நகரங்களில் மெட்ரோ மற்றும் மோனோ ரெயில்கள் 65 ஆயிரம் கோடி ரூபாய் 

செலவில் அமைக்கப்படும்.

தொழில்துறை:-

தொழிற் பேட்டைகள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு ரூ.1.50 

லட்சம் கோடியும், சர்வதேசத் தரத்தில் ஓட்டல் வளாகங்கள் கொண்ட 

சுற்றுலாத் திட்டத்திற்கு ரூ.10ஆயிரம் கோடியும் முதலீடு செய்யப்படும்.


ஏற்கனவே உள்ள தொழிற்பேட்டைகளை விரிவாக்கவும், புதிய 

தொழிற்பேட்டைகளை  உருவாக்கவும், சிப்காட்டுக்கு 6826 ஏக்கர் நிலம் தேவை. 

அதுபோன்று சிப்கோ தொழிற்பேட்டைகளை 25 இடங்களில் நிறுவிடவும் இடம் 

தேவை.

ஸ்ரீபெரும்பகுதியை மேம்படுத்தவும், சென்னை-ராணிப்பேட்டை, 

ராணிப்பேட்டை-ஓசூர், மதுரை-தூத்துக்குடி, கோவை-சேலம் ஆகிய 

இடங்களில் தொழில் முனையங்கள் அமைத்திடவும் 87 கோடி ரூபாய் 

ஒதுக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியம் கெமிக்கல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் 8000 

கோடிரூபாய் முதலீடு செய்யப்படும்.

3 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்திட, ஸ்ரீபெரும்புதூரில் உதிரிப் 

பாகங்கள் தொழில் பூங்கா அமைத்திட, 2023க்குள் 15 மில்லியன் வெளிநாட்டுச் 

சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வண்ணம் சுற்றுலாத் திட்டங்களுக்கும், 

தொல் பொருள் நினைவகங்களுக்குமாக மொத்தம் 25,000 கோடி ஒதுக்கப்படும்


.வேளாண் துறை

கால்வாய்கள், ஏரிகள், அணக்கட்டுகள், மற்றும் ம்கிணறு ஆகியவற்றை 

ஒன்றிணைத்து மேம்படுத்த 16,000  கோடி ரூபாயும் ஒதுக்கப்படும். பழ 

வகைகள், காய்கறிகள், தோட்டப்பயிர்கள்ளின் சிறுபாசனத் திட்டங்களை 100% 

மேம்படுத்த 6400கோடியும்., வேளாண் உற்பத்திப் பொருட்களை குளிர்பதன 

வசதியுடன் சேமித்து வைக்க கிட்டங்கிகள் கட்ட 2700 கோடி ரூபாயும், உணவுப் 

பதப்படுத்தும் மையங்கள் அமைத்திட ரூ.1,500 கோடியும், ஒவ்வொரு 

மாவட்டத்திலும் விவசாயப் பொருட்கள் பேக்கிங் இல்லங்கள் கட்ட ரூ.1,800 

கோடியும், மூன்று இடங்களில் பெரிய சந்தை வளாகங்கள் உருவாக்கவும், 

விவசாய ஆராய்ச்சிக்கு ரூபாய் 2000 கோடியும், ஆக மொத்தம்  40,000 கோடி 

முதலீடு செய்யப்படும்.   



நகர்ப்புற வளர்ச்சி

சென்னை மாநகரை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்த 50 ஆயிரம் கோடி ரூபாயும்,

பிற பகுதிகளின் மேம்பாட்டிற்கு 50 ஆயிரம் கோடி ரூபாயும், உலகத்தரம் 

வாய்ந்த 10 நகரங்களை உருவாக்க ஒரு லட்சம் கோடி ரூபாயும், 25 லட்சம் 

ஏழைகளுக்கு வீடு கட்டித்தர 75 ஆயிரம் கோடி ரூபாயும், தமிழகமெங்கும் 

பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் ஆக மொத்தம் ரூபாய் 2, 75,000 கோடியும் 

முதலீடு செய்யப்படும். 

தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டம் 2023

தகவல் தந்தவர் ,    இல.சு. ஜெகநாதன்

                                     ஆசிரியர், மக்கள் நினைத்தால்,

                                     தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்க மாத இதழ்,

                                      எண் 53, 2-வது குறுக்குத் தெரு, பாரதி நகர்,
                     
                                      அம்பத்தூர், சென்னை-600 053     

இன்னொரு பதிவினையும் அவசியம் தொடர்ந்து படியுங்கள்!




0 comments:

Post a Comment

Kindly post a comment.