Sunday, August 12, 2012

மது அரக்கனை வதம் செய்யப்போகும் தமிழக முதல்வர் ?

மது அரக்கனை வதம் செய்யப்போகும் தமிழக முதல்வர் ?

தலைப்பைக் கண்டவுடன் யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம்.


” தமிழ் நாட்டை இந்தியாவின் முதல் மாநிலம் ஆக்குவேன், அதற்கான

முதற்படி  தொலை நோக்கு 2013 ஆகும் “  என மாண்புமிகு தமிழக 

முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்.


அதற்கான அறிவிப்பையும் ”தமிழ்நாடு தொலைநோக்கு-2023 திட்டம் 

மார்ச் 2012-ல்” தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


அந்தத் திட்டத்தை எத்தனைபேர் முழுமையாகப் படித்திருப்பார்கள் 

என்பதை அவரவர் மனச்சாட்சிக்கே விட்டு விடுகின்றேன்.


மக்கள் நினைத்தால் ஆசிரியர் இல.சு. ஜெகநாதன் ( தமிழ்நாடு லஞ்சம்

கொடாதோர் இயக்க மாத இதழ் ) ஜுன் 2012-ல் முழுமையாக வெளியிட்ட

கட்டுரையைப்  படித்தபின்னரே அதன் அருமை தெரிந்தது.

 வெளிச்சமும்  பிறந்தது.


அவரது ஒவ்வொரு செயலையும் உற்று நோக்கித் தவறை மட்டும் சுட்டிக்

காட்டும் வலைப்பதிவு அன்பர்கள் விருப்பு வெறுப்பு இன்றி அவரது 

கொள்கைப் பிரகடனத்தைப் பற்றி ஏன் விவாதம் செய்யக்கூடாது?


முதல் மாநிலம் ஆக்குவேன் என்ற வார்த்தைகளுக்குள் மது விலக்கை

முழுமையாக அமுல்படுத்துவேன் என்ற கருத்தும் பொதிந்திருப்பதாகவே

எனதுளம் கருதுகின்றது.


15,02,129/- கோடி ரூபாய் திட்டத்தை மூலதனப்டுத்தப் போகும் 

துறைகளைப்பற்றியும் விரிவாக- விளக்கமாக-தெளிவாக சாமான்யரும் 

புரிந்து கொள்ளும் வண்ணம் அறிவித்திருப்பதே நெஞ்சை மகிழ்விக்கச் 

செய்கின்றது.


ஒரு இளங்கோ என்ற மனிதன் பூவிருந்தவல்லிக்கு அருகில் உள்ள

குத்தம்பாக்கம் கிராமத்தில் ஏற்படுத்திய மாறுதல்களால், உலகமே அந்தச்

சிற்றூரைத் திரும்பிப்  பார்த்தது. அதே நடைமுறையை எல்லா 

இடத்திலும் பின்பற்றினால் இலஞ்சம் ஏது ? ஏற்றத் தாழ்வுகள் ஏது?


 2005-ல்  ஏற்ற ஈரான் அதிபர்,  பதவி ஏற்றவுடன் அரண்மனையில்

இருந்த  விலை உயர்ந்த கம்பளங்களை எல்லாம் மசூதிகளுக்கு 

வழங்கினார். சம்பளமே  தேவை இல்லை என்றார். அவரது பெயரில் 

வங்கியிலும் பணமில்லை என்பதை உறுதிப்படுத்தினார். அவரால் 

நியமிக்கப்படும் அமைச்சர்களிடமும் எப்பொழுதும்  எளிமையாகவே 

வாழ்வேன் என்ற உறுதிமொழியையும் வாங்கிக் கொண்டார். அவர் 

நிர்வாகத்தில் அணுகுண்டு தயாரிக்கப்படுகின்றது என்று அமெரிக்கா  

அந்த நாட்டின் மீது பொருளாதாரத்தடை விதித்ததையும், அதை இந்தியா 

உட்பட உலக நாடுகள் பலவும் பின்பற்றும்  நிகழ்வுக்குள் செல்லவில்லை. 

சென்றும் பயனில்லை.


அந்த ஈரான் அதிபர் போன்று இல்லாவிட்டாலும், சந்தேகப்படும்

அமைச்சர்களின் பதவிகளை உடனடியாகப் பறித்துவிடும் தமிழக 

முதல்வரை, தமிழ்நாட்டில் யாராவது பாராட்டியதுண்டா?


மீண்டும் கூறுகின்றேன். குத்தம்பாக்கம் கிராம நிர்வாகம் அன்பர் இளங்கோ

தலைமையில், வரவு செலவுக் கணக்குகள் உட்பட அனைத்தும் பகிரங்கமாகக்

கிராம சபையில் காட்டப்பட்டபோது கொஞ்சநஞ்ச எதிர்ப்புகளும்

காணாமற்போயின. ஆனால், ஒரு கட்டத்தில், அது பெண்களுக்கான தலைவர்

கிராமமாக மாற்றப்பட்டது. அப்பொழுதும், குத்தம்பாக்கம் கிராம மக்கள்

இளங்கோவனை விட்டு விடவில்லை. அவருக்கு ஒத்துழைப்புத்தரக்கூடிய

சூழ்நிலையை உருவாக்கித் தந்தனர். 


இளங்கோவின் சிறப்பிற்கு ஒரே ஒரு உதாரணம். குத்தம்பாக்கத்தில்

சமத்துவபுரத்தின் வீடுகள் இரண்டிரண்டாகக் கட்டப்பட்டுள்ளது. அவற்றில்

ஒன்று தலித் இனத்தவருக்கு. மற்றொன்று மற்றொருவருக்கு. இதுதானே,

மெய்யான சமத்துவபுரம். இவரது சாதனகளை எல்லாம் விவிவரிக்கப் 

புகுந்தால் கட்டுர்டை குத்தம்பாக்கம் இளங்கோவைப் பற்றியதாகவே

அமந்துவிடும். எனவே அவரைப்பற்றி அறிய பிவரும் வலைப்பக்கத்தினச்

சொடுக்கவும். தமிழகத்தின் மெட்டான வழிகாட்டி எனும் கட்டுரை மூலம் 

அறியலாம்.   http://rssairam.blogspot.in/2012/07/blog-post_24.htm


இரண்டு பகுதிகளாகத் தமிழகத்தின் தொலை நோக்குத் 

திட்டத்தினைப்பற்றிக் கண்டோம். இம்மாதிரி மாபெரும் வளர்ச்சியைக் 

குறிக்கோளாகக் கொண்டு  தொலைநோக்குத் திட்டம் தயாரித்துச் 

செயல்படும் முதல் மாநிலம்  தமிழகமாகும். அது தவிரவும் எந்த ஒரு 

வளர்ச்சித் திட்டமும் வெற்றி அடைய  முதற்கண் அதுபற்றிய 

தொடர்புடைய  மக்கள் அவற்றை நன்கு தெர்ந்து கொண்டு  அதனை 

எவ்வித ஊழலுமின்றி, முழுப்பலனும் அம்மக்களைச் 

சென்றடைய  அவர்கள் அதன் செயல்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பு நல்க 

வேண்டும். 


PEOPLES PARTICIPATION மிகமிகத் தேவை. குத்தம்பாக்கம் அதற்கு 

வழிகாட்டுகின்றது.


மேலும் போக்குவரத்துதுத் துறையில் டிரைவர்கள். கண்டக்டர்கள்

போன்றோருக்கும், காவல் துறையினருக்கும் இன்னும் வாய்ப்புள்ள

இடங்களிலும் ஆறுமணி நேர வேலைத் திட்டத்தினை அறிமுகப்

படுத்தலாம். 

அதற்கேற்ப சம்பள விகிதத்தினை மாற்றி அமைத்திடலாம்.

நான்கு ஷிஃப்டுகளாகும்பொழுது கவனக் குறைவால் ஏற்படும் 

விபத்துக்கள்  போக்குவரத்துத் துறையில் குறையும். காவல் துறையின்

செயலும் மேம்படும். இவற்றால் வேலை வாய்ப்பும் பெருகும்


எந்த மதத்தினரையும் விட்டு விடாமல்அனைத்து மதங்களையும் சார்ந்த 

மதத் தலைவர்களைக் கொண்ட குழு ஒன்றை உருவாக்கி, தமிழக 

மாணாக்கர்களுக்குரிய மதிய உணவுத் திட்டத்தச் செயற்படுத்திடும்

பொறுப்பினை அவர்கள்பால் விட்டு விடவேண்டும். 
.
 அரசாங்கத்தின் பட்ஜெட்டும் துண்டு விழாது.


பூரண மது விலக்கினை அமுல்படுத்துவதால் குடும்பங்களின் வாழ்க்கை 

வளம்பெறும் காவல்துறை நினைத்தால் கள்ளச் சாராயமோ / கடத்தலோ

நிச்சயமாக நடக்காது.

 அதையும் மீறி அண்டை மாநிலங்களுக்குச் சென்று

அவர்களாகவே உடல்நலத்தை கெடுத்துக் கொண்டால் அது அவர்கள்

தலை எழுத்து. 

ஆனால், குடித்துவிட்டு மதுபோதையில் தமிழக 

எல்லக்குள்  நுழைவோரது பட்டியலைப் படத்துடன் தினசரிகளிலும்,

அவரவர் பணியாற்றும் இடங்களிலும் விளம்பரப் படுத்தினால் போதும்,


அதுவே அவர்களுக்கு அரசு கொடுக்கும் தண்டனையாகும். 

திருந்துவதொன்றுதான் ஒரே வழி


 மக்கள் ஒத்துழைப்புடன்,   திட்டமிட்டபடி 15 கோடி ஊழலற்ற முறையில் 

செலவிடப்பட்டால்  தமிழகம் சொர்க்கபுரியாகிவிடும்.

சொர்க்கபுரி என்றால் போதப் பொருட்கள், மது அரக்கன்கள் இருக்க

வேண்டுமா என்ன ?

வெளிநாட்டினரது உபயோகத்தினற்கானது அந்தந்த விடுதிகளை விட்டு

வெளியே வராமல் பார்த்துக் கொள்வது காவல்துறைக்குச் சிரமமா 

என்ன?.

எல்லாவற்றிற்கும் மேலாக, எங்களுக்கு இலவசமே வேண்டாம், மதுக் 

கடைகளை மூடிவிட்டால் போதும், எங்கள் வீட்டில் உள்ள ஆடவர்கள்

(கணவன், குழந்தைகள், சில பெண்க்ள் உட்பட ) குடிபோதையின்றி

வீட்டிற்குத் திரும்பி வந்தால்போதும் என்று சிந்திக்கத் துவங்கிவிட்ட

பொது மக்களின் குரல் கோட்டைக்குக் கேட்காமலா இருக்கும் ?


இதனால் எவரது கூட்டணியின் ஆதரவுமின்றி பாராளுமன்றத் தேர்தலில்

பெண்களின் பரிபூரண ஆதரவோடு 40 தொகுதிகளையும் தமிழக

முதல்வர் கைப்பற்றலாம் தாராளமாய்!


அப்படி நடந்துவிட்டால் நமது தமிழக முதல்வர் சுட்டிக் காட்டுபவரே 

அடுத்த  இந்தியப் பிரதமர் ! 

அவர்  விரும்பினால் அவரே இந்தியப் பிரதமர்.

ஆந்திராவிலிருந்து ஒருவர் பிரதராகிவிட்டார். 

தமிழகத்திலிருந்து ஒருவர் ஏன் பிரதமராகக் கூடாது?

அந்தப்பிரதமரும் நமது தமிழக முதவர் 

செல்வி ஜெயலலிதாவாக இருக்கட்டுமே,

அதில் என்ன தவறு?

0 comments:

Post a Comment

Kindly post a comment.