Saturday, August 11, 2012

தமிழ்நாட்டை இந்தியாவில் முதல் மாநிலம் ஆக்குவேன் ஜெயலலிதா சூளுரை!





தமிழக அரசு தமிழ்நாடு “தொலை நோக்கு - 2023 திட்டம்” என்ற ஒரு 

தொலைநோக்குத் திட்டத்தை மார்ச் 2012-ல் வெளியிட்டுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில்,

1.  தமிழ்நாட்டில் 25 லட்சம் வீடுகள் கட்டப்படும். எனவே, குடிசைகளே

    இருக்காது.

2.  மாணாக்கர்களின் கல்வித் தரம் உயரும்; கல்லூரிகளில் சேர்க்கை 50%

     உயரும்.

3.  10 நகரங்கள் உலகத் தரத்திற்குரிய வசதிகளைப் பெறும்.

4.  சாலைப் போக்குவரத்து சர்வதேசத் தரத்திற்கு மேம்படுத்தப்படும்.

5.  இரண்டு கோடிப் பேருக்கு மனித வளப் பயிற்சி கிடைக்கும்.

6.  மின் உற்பத்தி கூடுதலாக 20 ஆயிரம் மெகாவாட்டாக உயரும்.

7.  தனிநபர் வருமானம் வளர்ந்த நாடுகளில் உள்ள உயர் வருவாய்ப்

     பிரிவினருக்குச்  சமமாக 6 மடங்கு உயரும்.

8.  வறுமையை நீக்குவதால் ஏற்றத்தாழ்வுகள் விலகும்.

9.  தமிழ்நாட்டின் வளர்ச்சி ( GDP ) 11% ஆக இருக்கும். இந்தியாவின்

    வளர்ச்சியைவிட  இது பல மடங்கு அதிகமாகும்.

10. அனைவருக்கும் சுகாதார வசதிகள் மற்றும் திறந்தவெளி மலக் கழிப்பு

     ஒழிப்பு  திறந்தவெளி சாக்கடை என்பதே இருக்காது.

11. உள்கட்டமைப்பு வசதிகள் சர்வதேசத் தரத்திற்கு ஏற்படுத்தப்படும்.


இந்தத் தொலைநோக்குத் திட்டத்தைச் செயல்படுத்திடத் தேவையான 

மொத்த  முதலீடு பின்வருமாறு:-

2011-2012          25,393   கோடி

2012-2013          41,670   கோடி

2013-2014          61,394   கோடி

2014-2015          84,801   கோடி

2015-2016          93,705   கோடி

2016-2017        1,14,403  கோடி

2017-2018        1,26,999  கோடி

2018-2019        1,47,376  கோடி

2019-2020        1,64,325  கோடி

2020-2021        1,91,188  கோடி

2021-2022        2,13, 175  கோடி

2022-2023        2, 37, 690 கோடி  ஆக, மொத்தம், 15, 02, 129 கோடி.  



இத் தொலைநோக்குத் திட்டம், தமிழக அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் 

நிபுணர்களை நியமித்து தமிழகமெங்கும் நுட்பமான மற்றும் விரிவான 

ஆய்வுகளை மேற்கொண்டு தயாரிக்கப்பட்வையாகும். பல்வேறு 

துறையினருடன் விவாதங்கள் நடத்தப்பட்டபின் இறுதியாக்கப்பட்டது.

இதற்குத் தேவையான நிதி தமிழக அரசு மட்டுமன்றி, சேவைத்துறை மற்றும் 

உள்கட்டமைப்பு  போன்றவைகளில், தனியார் துறை, வங்கிகள் மற்றும் 

வெளிநாட்டு  நிறுவனங்கள் ஆகியவை  முதலீடு செய்யும்.

மொத்த முதலீடு 15 லட்சம் கோடியில், 13, 25, 00 கோடி ரூபாய் 

உள்கட்டமைப்பிற்காகச்  செலவிடப்படும்.

1,00,000 கோடி ரூபாய் சமூக நலன்களுக்காகச் செலவிடப்படும்.

75,000 கோடி ரூபாய் வழக்கமான முதலீட்டுச் செலவுகளுக்காக ஒதுக்கப்படும். 




உணவுப் பாதுகாப்பு மற்றும் இரண்டாவது பசுமைப் புரட்சி ஆகியவற்றுக்கு 

முக்கியத்துவம் அளிக்கப்படும்.

தற்போது ஆசியாவில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளான, தென் 

கொரியா, தாய்லாந்து, மலேசியா, சீனா போன்ற நாடுகள், கடந்த  20 

ஆண்டுகளில் 7 முதல் 10% வரை வளர்ச்சி பெற்றுள்ளன.

இந்தியாவில் மராட்டியம், குஜாராத் மாநிலங்கள் இரட்டை இலக்கச் சதவிகித 

வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இத்துடன் ஒப்பிடுகையில் தமிழகம் அடுத்த 10 

ஆண்டுகளில் 11% வளர்ச்சி பெறும்.

இது சர்வதேச அளவில் வளர்ந்த நாடுகளின் உயர் நடுத்தர ( HIGHER MIDDLE

INCOME GROUP ) மக்களின் வருமானத்திற்கு இணையாகும் 


.உள் கட்டமைப்பு, அறிவுசார் தலைநகரமாக்குதல், பாரம்பரிய சிறப்பைப் 

பேணுதல், இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுக்காப்பளித்தல், 

வெளிப்படையான நிர்வாகமுறை கடைப்பிடிக்கப்படும்.

எரிசக்தித் துறையில் 4, 50, 000 கோடி ரூபாய் முதலீடு செய்து 20,000 மெகாவாட்

மின்சாரம் 2017க்கு முன்பே கிடைத்துவிடும். இதற்காக ஒவ்வொன்றும் 4000 

மெகாவாட்  மின்உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் 

50,000 கோடி  ரூபாய் துறைமுகப் பகுதிகளில் நிறுவப்படும். காற்றாலை மூலம் 

5000 மெகாவாட்  தயாரிக்க ரூ.25,000 கோடி செலவிடப்படும். சூரிய சக்தி மூலம் 

மின்சார உற்பத்தி செய்திட ரூ.55,000 கோடி ஒதுக்கப்படும் 10 நகரங்களில் 

குழாய்கள் மூலம் எரிவாயு  விநியோகிக்கப்படும். மின்பகிர்மானத்திற்கும், மின் 

கடத்தலைத் தடுக்கவும் 2 லட்சம்  கோடி  ஒதுக்கப்படும்.

போக்குவரத்துத்துறை, தொழில்துறை, தொழில் திட்டம், வேளாண் துறை

தனியாகக் காண்போம்.
   

0 comments:

Post a Comment

Kindly post a comment.