நேற்றைய மாலை மற்றும் இன்று காலை செய்தித் தாள்களில் ஒரு திடுக்கிடும் செய்தி..
”தபால் நிலையத்தில் ரூ.7 லட்சம் மோசடி: பெண் கைது.”
ஓய்வு பெற்ற ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன் அஞ்சல் நிலைய ஏஜென்ட், 55 வயதுடைய ஓர் பெண் மூலம், 7 லட்சம் ரூபாயை, திருவொற்றியூர் அஞ்சல் நிலையத்தில் சேமிப்புத் திட்டத்தில் செலுத்தியுள்ளார். சேமிப்புக் கணக்குப் புத்தகம் ஏஜெண்ட் வசமே இருந்து வந்தது. இங்கேதான் வந்தது இரண்டாவது தவறு. பணம் செலுத்தியவருக்குப் பணம் தேவைப்பட்டிருக்கின்றது. ஏஜென்டிடம் பணம் தேவைப்படுகின்றது என்று சொல்லி, பணம் எடுப்பதற்காகக் கையெழுத்தும் போட்டுக் கொடுத்திருக்கின்றார்.
எடுத்த பணத்தை ஏஜென்ட் கொண்டு வந்து தரவில்லை. திருப்பிக்கேட்ட போது, பணம் செலவாகிவிட்டது விரைவில் தந்துவிடுகின்றேன் என்று நாட்களைக் கடத்திக் கொண்டே சென்றிருக்கின்றார். எனவே, பணம் சேமித்தவர், போலீசாரிடம் புகார் கொடுக்க, ஏமாற்றிய ஏஜென்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணையில், வேறுசில சேமிக்குக் கணக்குப் புத்தகங்களையும் வைத்துக்கொண்டு 1.50 கோடிக்கு மேல் ஏமாற்றியுள்ளார் என்றூ தெரிய வந்துள்ளது.
பணத்தச் சேமித்தவர் பெயர், சுப்பிரமணி. திருவொற்றியூர் வாசி. ஒரு தனியார் இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
ஏமாற்றிய ஏஜென்ட், 55 வயதுப் பெண்மணியின் பெயர், அமிர்தாம்மாள்.
அஞ்சல் நிலைய உயர் அதிகாரிகளும், எஜெண்டுகளிடம் பணப்பரிவர்த்தனை செய்யும்பொழுது சிறிது எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். 1.50 கோடி வரை ஏமாற்றியுள்ளார் என்றால் ஒவ்வொரு முறையும் அதிகமான தொகைகளையே எடுத்திருக்கவேண்டும். உரிமையாளரை அழைத்துவரச் சொல்லியிருந்தால் இந்தத் தொல்லையே ஏற்பட்டிருக்காது.
கற்றுக்கொள்ளவேண்டிய நீதி அவரவர் வேலையை, அவரவர்தான் செய்திடல் வேண்டும். செய்ய முடியாத அளவிற்கு முதுமை அடைந்துவிட்டால்தான், குடும்பத்தினர் அல்லது நல்ல நண்பர்கள் அல்லது நல்ல ஏஜெண்டுகளை நாடவேண்டும்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.