Sunday, August 26, 2012

அனைத்துலக விமானநிலையப் பட்டியல்களில் சேர்ந்துவிட்டது மதுரை மாநகர்!



மதுரை விமான நிலையமானது ரூ130 கோடியில் சர்வதேசத் தரத்துடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுதளமும் 7,500 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரை விமான நிலையம் அனைத்துலக விமான நிலையங்களின் பட்டியலில் சேர்ந்துவிட்டது.

மலேசியாவிலிருந்து 23 பயணிகளுடன் 2சிறிய ரக தனியார் விமானங்கள் நேற்று மதுரை விமான நிலையத்துக்கு வந்திறங்கின. இமிக்ரேஷன் சோதனையை எம்.பி. மாணிக்கம் தாகூர் தொடங்கி வைத்தார்.கோயில் நகரமான மதுரைக்குரிய நேரடியான விமான சேவை தங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று மலேசியப் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரையிலிருந்து கொழும்பு விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தும் விட்டது. இலங்கை அதிபர் ராஜபக்சவின் பெயரிலான மிகின் லங்கா நிறுவனம் செப்டம்பர் 8-ந் தேதி முதல் கொழும்பில் இருந்து மதுரைக்கு விமான சேவையை தொடங்குவதாகவும் இருந்தது. ஆனால் அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சன் குழுமத்தின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் செப்டம்பர் 20-ந் தேதியிலிருந்து இலங்கைக்கு விமான சேவையைத் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூங்கா நகரம்  எனப் பெயர் பெற்ற மதுரையில், இனிமேல்  படிப்படியாக அனைத்துலக விமானங்களும் சர்வசாதாரணமாக வந்து செல்லும். அந்நியச் செலாவணியும் கூடும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.