Sunday, August 26, 2012

பத்திரிக்கைச் சுதந்திரம் இணைய தளங்களுக்கும் / வலைப்பூக்களுக்கும் வேண்டும் !


அம்மா-அப்பா-மகன்/ மகள் என குடும்பம் சுருங்கிவிட்டது. அதுவும் பெரும்பாலான வீடுகளில் வேலைக்குச் செல்லும் அம்மாக்களே அதிகம். 


பெற்றோர்கள் யாருமினிறித் தனிமையிலேயே வீட்டுக்குள் இருக்கவேண்டிய கட்டாயத்திற்க்குக் குழந்தைகள் உள்ளாக்கப்படுகின்றனர். 


டெலிவிஷப் பெட்டிகளுடன், கணினியும், அலைபேசியும் சேர்ந்துகொண்டு
இளையோரின் நெஞ்சில் நஞ்சைப் பாய்ச்சுகின்றன.


வீட்டிலிருந்து இணையத்தை அணுகும் குழந்தைகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இணைய திறனுடன் இருப்பது நல்லது தான் என்றாலும், அதிலும் சில வெளிப்படையான விழுகுழிகள் இருக்கத்தான் செய்கின்றன.


இணைய வழி விபத்துகளை தவிர்ப்பதற்கான சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:


உங்கள் பிள்ளைகள் தவறான இணைய பழக்கத்தில் ஈடுபடுவதாக சந்தேகித்தால்,அவர்கள் பதிவேற்றிய தகவல்களை அதற்கான இணையத்தளங்களுக்கு சென்று தேடலாம்


ரகசியம் காப்பு கொள்கையை மதிப்பிடுங்கள். சில இணையத்தளங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரி போன்ற விபரங்களை மற்ற நிறுவனங்களுக்கு பகிர்ந்து கொடுப்பர். அதனால் தேவையற்ற மின்னஞ்சல்களும், வேவு மென்பொருட்களும் உங்களுக்கு வரும்


எப்பொழுதும் கணினியை உணவு அறையிலோ, பிரதான அறையிலோ வையுங்கள், அதன் மூலம் உங்கள் குழந்தைகள் பார்க்கும் தளங்களில் நீங்கள் ஒரு கண் வைத்திருக்க முடியும்


இணையத்தை உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து பயன்படுத்துங்கள்


உங்கள் குழந்தைகளுக்கு கற்பியுங்கள்:


இணையமாக இருந்தாலும் முன்பின் அறியாதோரிடம் பழகுவதால் உண்டாகும் ஆபத்துக்களை உங்கள் குழந்தைகளிடம் தெரிவியுங்கள்

இணைய நண்பர்களை சந்திப்பது பாதுகாப்பல்ல என்பதை எடுத்து கூறி புரிய வையுங்கள்


யாராலேயாவது மிரட்டப்பட்டால் உங்களிடம் தெரிவிக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்துங்கள்


இணைய வழி அரட்டை உரையாடல்கள்

இணையத்தில் உலாவுவோர் புதியவர்களை இணையத்தில் சந்திக்கின்றனர், அவர்களை நேரில் சந்திக்க வேறு சிந்தனை இல்லாமல் உடனே ஒப்புக் கொள்கின்றனர். புதிய யாரையும் உறுதியாக நம்ப முடியாது என்பதால் குழந்தைகள், அதிலும் குறிப்பாக பருவ வயதினர் இது குறித்து எச்சரிக்கப்பட வேண்டும்.


  அரட்டை உரையாடல் சங்கேத சொற்களின் பொருள்

ஜாக்கி Hey there  

ஸ்வீட்டி Hey  

ஜாக்கி ASL? Age, Sex, Location

ஸ்வீட்டி 21, F, Mumbai. ASL? Female, 21 years

ஜாக்கி 22, M, Mumbai  

  You have a ‘sweet name’ :)  

ஸ்வீட்டி Thank you. So do you!  

ஜாக்கி ROFL. Flattered! So you studying? Rolling on the floor laughing

ஸ்வீட்டி Yes. Hinduja College.  

ஜாக்கி Wow! I study at Wilson. So Sweety, why don’t we meet up after our lectures? ;) Or are you scared? LOL  

ஸ்வீட்டி Of course not! What time do you want to meet up?  

ஜாக்கி Tomorrow, 3 pm outside Hinduja? My number is: ____  

ஸ்வீட்டி Done! TTFN TaTa for now

ஜாக்கி BBL Sweety ;) Be back later

பாதுகாப்பு குறிப்புகள் வயது வாரியாக

நீங்கள் உங்கள் குழந்தை பின்பற்ற வேண்டிய 'செய்ய வேண்டியது' மற்றும் 'செய்யக் கூடாதது' பட்டியலை தயாரிக்கலாம். நீங்கள் பின்பற்ற வேண்டிய குறிப்புகள் குழந்தையின் வயதை பொறுத்தும் மாறுபடும்:


வயது வருடங்களில் பாதுகாப்பு குறிப்புகள்

3-6

உங்களது குழந்தைகளுடன் இணைந்து இணையத்தில் உலாவுங்கள்

குழந்தைகளுக்கு உகந்ததான இணையத்தளங்கள் மற்றும் தேடுதல் பொறிகளை உபயோகியுங்கள்

நல்ல இணையத்தளங்களை 'Favorites' பட்டியலில் சேருங்கள், இதன் மூலம் இருவருமே அந்த தளத்தினை உடனே சென்று சேர முடியும்


6-10 

உங்களது குழந்தை பார்வையிடும் இணையத்தளங்கள் குறித்து அறிய எப்போதும் கணினித்திரை மீது ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள்

மேலெழு சாளரங்களை தடுக்கும் மேலெழு சாளர தடுப்பு மென்பொருளை பயன்படுத்துங்கள்

உங்களது குழந்தை வீட்டில் இணைய உலாவலுக்கு பின்பற்ற வேண்டிய விதிகளை உருவாக்குங்கள்


10-13

உங்களது குழந்தையின் தனி மின்னஞ்சல் முகவரிக்கு பதிலாக ஒரு பொதுவான குடும்ப மின்னஞ்சல் முகவரியினை உருவாக்குங்கள்

உங்களது அனுமதியின்றி எந்த ஒரு பதிவிறக்கமும் மேற்கொள்ளாமல் இருக்குமாறு உங்களது குழந்தையிடம் அறிவுறுத்துங்கள்


தொல்லை மின்னஞ்சல்களை தடுக்க மின்னஞ்சல் வடிகட்டிகளை உபயோகியுங்கள்

உங்களது அரட்டை உரையாடலை சேமிக்க அனுமதிக்கும் உடனடி தூதுவன் பயன்பாட்டினை மட்டுமே உபயோகியுங்கள். உரையாடல்களை கண்காணிக்கும் வண்ணம் இந்த தேர்வினையும் செயலாக்கம் செய்து வையுங்கள்.


13 க்கு மேல்

உங்களது குழந்தையின் இணைய பழக்கவழக்கங்களை கண்காணிக்கும் வண்ணம் கணினியை ஒரு வெளிப்படையான அனைவரும் புழங்கும் பகுதியில் வையுங்கள்

குழந்தையிடம் பேசி அவன்/அவள் வழக்கமாக பார்வையிடும் மன்றங்கள் மற்றும் அரட்டை அறைகளை கண்டறியுங்கள்


இணைய நாகரீகத்தின் முக்கியத்துவம் குறித்து உங்களது குழந்தையுடன் விவாதியுங்கள்

இணைய வழி பழக்கமானவர் அல்லது நண்பரை நேரில் சந்திப்பதின் அபாயங்கள் குறித்து குழந்தைக்கு தெரிவியுங்கள். இணைய நண்பர்களை சந்திப்பதை தவிர்க்க கூறுங்கள்செக்யூர்ஃபர்ஸ்ட் 
   யாருக்கு ?

பெற்றோர் , குழந்தைகள் , பெண்கள் , நிறுவனங்கள் ,தனிநபர்கள்
உதவி வேண்டுமா?

துஷ்பிரயோகமா, இணைய சட்டங்கள மென்பொருள் கருவிகள் :: ஆதாரங்கள
அறிய வேண்டியவை அபாயங்கள் என்னென்ன?

வினாக்களும் விளக்கங்களும் போன்ற பல்லோரின் பாதுகாப்புக்களுக்கும் சென்று பார்த்திட வேண்டிய  அரசின் இணைய தளம் 

வடகிழக்கு மக்களுக்கு எதிராக வதந்தீ -இணைய தளங்கள் 

முடக்கம் தொடர்கிறது- :- பத்திரிக்கைத் தகவல்கள் :

அவற்றைப் பத்திரிக்கைகள் மட்டும் பிரசுரிக்க அனுமதிக்கலாமா?

அவற்றிற்குத் தடை இல்லையா? ஒவ்வொரு இணையதளமும்/ 

வலைப்பூவும்  தனித்தனி  பத்திரிக்கைகளே. பத்திரிக்கைகளுக்கு உள்ள 

சுதந்திரம்  இணைய தளத்திற்கும் வேண்டும்!

0 comments:

Post a Comment

Kindly post a comment.