Wednesday, August 8, 2012

காதல் மணம் செய்தோரே, குடும்பத்தினரின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கினால் உயிரைத்தான் இழக்க வேண்டும்!




தலித் மக்களின் பிரச்சினைகள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின்

பொது விசாரணை சென்னையில் செவ்வாயன்று தொடங்கியது.


சாதியப் பாகுபாடுகள்,  வன்கொடுமைகள், தீண்டாமைக் கொடுமைகள்

உள்ளிட்ட பல பிரச்சினைகள் நீண்டகாலமாகப்பாக்கியுள்ளன. அவற்றில் இந்த

ஆணையம் கவனம் செலுத்தியது.


தஞ்சை மாவட்டத்தில் உள்ளது சீரக்கோட்டை. அப்ப்குதியில் அபிராமி என்ற

பெண், மாரிமுத்து என்ற தலித் இளைஞரைக் காதலித்துத் திருமணம் செய்து

கொண்டார் குடும்பத்தினரின் எதிர்ப்புக் காரணமாக, சென்னை அம்பத்தூரில்

குடியேறி , இருவரும் இரண்டாண்டுகள் குடித்தனம் நடத்தினர். சவுந்தர்யா

என்ற  மகளும் இருக்கின்றாள்.


இந்நிலையில் அபிராமியின் அண்ணன் அருண்குமார் இவர்களை

அணுகினான். அன்பாகப் பேசினான்.ஊருக்கும் அழைத்துச் சென்றுள்ளான்.

கடந்த மே 22 குழந்தை சவுந்தர்யாவுக்குப் பிறந்த நாள். தாய் மாமன் என்ற

முறையில் குழந்தக்கு நகை வாங்கி வைத்திருப்பதாகவும், அதை மாரிமுத்து

வீட்டிற்கு வந்து வாங்கிச் செல்லுமாறும் கூறியுள்ளனர். வீட்டுக்குச் சென்ற

மாரிமுத்துவை வெட்டிக் கொளை செய்துவிட்டனர்.


இந்த வழக்கு ஆணைய உறுப்பினர் பி.சி. பாட்டீல் நீதிமன்றத்தில் 

விசாரணைக்கு வந்தது.


வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் ரூபாய் 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும்,

அபிராமிக்கு அரசு வேலை அளிக்கவும், குடி இருக்க வீடு அளிக்கவும், தமிழக 

அரசுக்கு ஆணையிட்டுத் தீர்ப்பளித்தார்.


மேலும் அபிராமி, சவுந்தர்யா இருவரது உயிருக்குப் பாதுக்காப்பளிக்கவும் 

ஆணையிட்டார். பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த ஆனையிட்டதோடு, 

முதல் மூன்று ஆணைகளை  6 வார காலத்திற்குள் செயல்படுத்த வேண்டும் 

என்றும் அறிவித்தார்

இந்த வழக்கை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி எடுத்த்ச் 

சென்றிருந்தது.


மனித உரிமை ஆனையத்தின்  தீர்ப்பினை  தமிழக அரசு உடனடியாக

நிறைவேற்ற வேண்டும் என்பதே நெஞ்சில் ஈரமுள்ள எல்லோருடைய

எதிர்பார்ப்பாக இருக்க முடியும்?

தகவல் உதவி :- தீக்கதிர், 08-08-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.