Wednesday, August 8, 2012

கிறிஸ்துவ மதத்தின் பிரிவுகளில் சில !




ரோமன் கத்தோலிக்கர்கள்:-


கிறித்துவ பிரிவுகளிலேயே ரோமன் கத்தோலிக்கர்களே அதிக தொகையினராவர். இப்பிரிவினர் கி.பி. 1 லேயே தோன்றியவர்களாவார்கள். அன்று முதல் இன்று வரை இப்பிரிவினரின் கொள்கை கோட்பாடுகளில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.இப்பிரிவின தேவாலயத் தலைமையகம் ரோமில் உள்ள வாடிகன் நகரத்தில் அமைந்துள்ளது. ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவர் "போப்" ஆவார். கி.பி. ஒன்றின் இரண்டாம் பிற்பகுதியில் பல்வேறு தலைநகரங்களில் பல தேவாலயங்களை எழுப்பினர்.
'தாய் தேவாலயம்' என மதிக்கப்பட்ட தேவாலயம் எருசலேமில் இருந்தது. இது கி.பி. எழுபதிற்குப் பின் ரோமாபுரியினர் படையெடுத்து சேதப்படுத்தியதால்,இதன் பிரதிநிதித்துவமும் முடிவுக்கு வந்தது. ரோமிலிருந்த தேவாலயம் தலைநகரிலிருந்த காரணத்தால் பிரசித்தி பெற்றதென்றாலும் கி.பி.313-க்குப் பின் இதன் பிரதிநிதித்துவமும் முடிவு பெற்றது. 3-ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்ப காலத்தின் போது ரோம கத்தோலிக்க மத குருமார்களின் போப் பிற தேவாலயங்களின் மீதும் தங்களது அதிகாரத்தை செலுத்த முற்பட்டனர்.3-ஆம் நூற்றாண்டுகளில் வெறும் நம்பிக்கையின் விஷயங்களிலேயே அதிகாரத்தை செலுத்த முற்பட்ட போப்பர்கள், 5-ஆம் நூற்றாண்டின் போது இதனை முழுமையான ஒரு சட்டமாகவே அறிவித்தனர்.
இந்த சட்டத்தை பிற கிறித்துவ    பாதிரியார்கள் கடுமையாக எதிர்த்தது மட்டுமின்றி , கிழக்கத்திய பகுதிகளில் இதனை சட்டமாக்க முடியாமலும் செய்தனர். போப்பர்களுக்கு எதிராக எதிரணியின் தலைவராக இருந்த அப்போதைய (இஸ்தன்புல்) துருக்கியின் தலைமை பாதிரியார் இச்சட்டத்தை செயல் வடிவம் அற்றதாக்கினார். இவ்விரு பாதிரியார்களின் இடையேயும் பகைமை அதிகரித்துக் கொண்டே செல்ல இறுதியில் 1054,முழுமையான உறவு துண்டிக்கப்பட்டது. (காம்ப்டன் கலை களஞ்சியத்தில் இருந்து எடுக்கப்பட்டது) 
 'புராட்டஸ்டன்ட் கிறித்துவர்கள்' 
ரோமானியர்களில் இருந்து பிரிந்து போன  'புராட்டஸ்டன்ட் கிறித்துவர்கள்' தங்கள் கொள்கை கோட்பாடுகளை மேலும் திருத்திவிட்டனர். இதைப் போன்ற மிகப் பெரிய அளவிலான வேறுபாடுகளின் காரணங்களால் 'ஆர்த்தோடக்ஸ்' பிரிவினர்கள் ரோமன் கத்தோலிக்கர்கள் மற்றும் புராட்டஸ்டன்ட் பிரிவினர்களை கடுமையாக வெறுத்தனர்.( from website of serbian orthdox diocese of raska and prizrer in serbia).
'ஆர்தோடக்ஸ்'
கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய தேவாலயங்களுக்கிடையே ஏற்பட்ட பிரிவினைகளின் காரணமாகவே இவர்களின் பகைமைத்துவம் முதலாம் நூற்றாண்டில் உச்சகட்டத்தை அடைந்து அது இன்று வரை தொடர்கிறது. மொழி, கலாச்சாரம் மற்றும் அரசியல் வேற்றுமைகள் பகைமையை மேலும் அதிகப்படுத்தின .4-ஆம் நூற்றாண்டில் இருந்து 11-ஆம் நூற்றாண்டு வரை துருக்கி கிழக்கத்திய கிறித்துவத்திற்க்கு முக்கிய இடமாக இருந்தது. பிற்காலத்தில் அரசியல் எதிரிகளான மேற்கத்திய புனித(?) ரோமர்கள் அதை கைப்பற்றினர். மேற்கத்திய நாடுகளில் கிறித்துவம் அன்றைய ஹிப்போவின் அகஸ்டின்(354 - 430) என்பவர்க்கு கீழ் இருந்தது.
பிற்காலத்தில் கிழக்கத்திய கிறித்துவத்தின் கோட்பாட்டில் இருந்து முழுமையாக விலகியது. தேவாலயத்தின் அதிகாரத்துவ சித்தாந்தத்தில் இரு வேறு கருத்துகள் இருந்ததே பிரிவினைகளுக்கு முக்கிய காரணமாக இருந்த்து. ரோமானிய கிறித்துவத்திற்கு முக்கிய காரணம் அப்போஸ்தலர்களே தங்களின் தேவாலய மற்றும் கொள்கை கோட்பாடுகளை வகுத்து கொடுத்தனர் என்பது தான். ஆனால் இச்சித்தாந்தம் 'ஆர்தோடக்ஸ்' பிரிவினர்களுக்கு முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத சித்தாந்தமாக இருந்தது.
கிழக்கத்திய கிறித்துவர்கள்
கிழக்கத்திய கிறித்துவர்கள் அனைத்து தேவாலயங்களையும் அங்கீகரித்தாலும் ரோமானிய கிறித்துவர்கள் தலைமை பாதிரியாரை முதன்மை ஸ்தானம் கொண்டவராக கருதவில்லை.கிழக்கத்திய கிறித்தவர்களுக்கு கொள்கை கோட்பாடுகளில் ஏற்படும் முரண்களையும், பிரச்சினைகளையும் தீர்க்க தலைமை பாதிரிக்கோ அல்லது ஒரு தனி தேவாலயத்திற்கோ அதிகாரம் இல்லை என நம்பினர்.மாறாக இப்பிரச்சினைகளை தீர்க்க அதற்கேயான குழுவை நிறுவி வைத்திருந்தினர்.இறுதியில் ரோமானிய தேவாலயத்தினர் முற்றிலும் தவறான கொள்கை கோட்பாடுகளை தத்தெடுத்து வளமை சம்பிரதாயங்களை மாற்றியது. 'போப்பர்கள்' பாவம் செய்யாதவர்கள், தூய்மையானவர்கள் என்ற சித்தாந்தத்தை புகுத்தியது. இச்சித்தாந்தம் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய கிறிஸ்துவர்களிடையே மிகப் பெரும் பகைமையை வித்திட்டது.
மெதடிஸ்தம்
மெதடிஸ்தம் (Methodism) என்பது கிறிஸ்தவ மதப்பிரிவான மறுப்பாளர்களில் (protestant) ஒரு பிரிவினர் ஆவர். 18 ம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் இம்மதப்பிரிவு தோன்றியது. முதன் முதலில் ஆங்கிலத் திருச்சபையைச் சேர்ந்த ஜோன் வெஸ்லி என்ற மதகுருவானவர் மெதடிஸ்த மதக் கொள்கையைப் பரப்பினர்.
இதனால் இம்மதக் கொள்கை பொதுவாக வெஸ்லிய மெதடிசம்' எனவும் அழைக்கப்படுகிறது. ஜோன் வெஸ்லி இம்மதத்தை ஆங்கிலத் திருச்சபையின் போட்டிக் குழுவாகவே இதனை உருவாக்கினார். மெதடிஸ்தத்தைப் பின்பற்றும் ஆங்கிலிக்கர்கள் மெதடிஸ்துகள் என அழைக்கப்படுகின்றனர். 18 ம் நூற்றாண்டில் தோன்றிய மெதடிசத்தில் வேல்சிய மெதடிஸ்துகளும் உள்ளனர்.
ஆங்கிலிக்க ஒன்றியம்
ஆங்கிலிக்க ஒன்றியம் அல்லது ஆங்கிலேய ஐக்கியம் (Anglican Communion) என்பது உலகம் முழுவதுமுள்ள ஆங்கிலிக்க திருச்சபைகளின் சேர்க்கையாகும். இது உலகத்தில் மிகபெரிய மதத்தின் இரண்டாம் பெரிய மதபிரிவாகும். இங்கிலாந்து திருச்சபை மற்றும் அதன் தலைவர் கன்டபரி பேராயருடன் முழு ஒற்றுமையோடு இருக்கும் திருச்சபைகளின் ஒன்றியமாகும். ஆங்கிலிக்க திருச்சபைகளிர்க்கு பிராந்திய பேராயிர்கள் தலமையேற்கின்றன. மாறாக நாடு, பிரதேச மட்டத்திலான முழு அதிகாரம் கொண்ட திருச்சபைகளே காணப்படுகின்றன.
77 மில்லியனுக்கும் மேலான பின்பற்றுனர்களைக் கொண்ட அங்கிலிக்க ஒன்றியம் உரோமன் கத்தோலிக்க திருச்சபை , கிழக்கு மரபுவழி திருச்சபைக்கு அடுத்தப்படியாக உலகின் மூன்றாவது பெரிய சமயப் பிரிவாகும்.தமிழ் நாடு உட்பட தென் இந்திய மானிலங்களும் இலங்கையும் ஒரு பிரிவாக தென்-இந்திய திருச்சபையின்கீழ் உள்ளன.
இங்கிலாந்து திருச்சபை, இங்கிலாந்தின் அதிகாரபூர்வமான கிறித்தவத் திருச்சபையாகும். இது உலகெங்கும் உல்ல சர்வதேச ஆங்கிலேய ஐக்கியம் எனப்படும் திருச்சபை குடும்பத்தின் முதல் சபையாகும்.இத்திருச்சபை தன்னை திருத்தப்பட்ட கத்தோலிக்கமாகவும் (உரோமன் கத்தோலிக்க திருச்சபை) என்கிறது.
கத்தோலிக்கம் 
கத்தோலிக்கம் அல்லது உரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) மிகப்பெரிய கிறிஸ்தவ மதப்பிரிவாகும். 2004 ஆம் ஆண்டு கணக்கின் படி1,098,366,000 விசுவாசிகளை கொண்டதாக இப்பிரிவு இருக்கிறது. இவ்வடிப்படையில் கத்தோலிக்கமே உலகில் மிகப்பெரிய சமயபிரிவாகும். மற்றைய கிறிஸ்தவ மத பிரிவுகளைப்போலவே கத்தோலிக்கரும் இயேசுவை தங்களது கடவுளாக ஏற்றுக்கொள்கின்றார்கள்.
பாப்பரசர் கத்தோலிக்கரின் உலகத்தலைவராவார். கத்தோலிக்க தேவாலயத்தின் சுயவரைவிலக்கணத்தின் படி கத்தோலிக்க தேவாலயம் எனப்படுவது, இயேசுவின் தலைமைச்சீடரான இராயப்பரின் வழிவருபரின் தலைமையின் கீழ் ஏனைய ஆயர்களாலும் குருக்களாலும் வழிநடத்தப்படும் சமயமாகும். இங்கு இராயப்பரின் வழிவருபவராக பரிசுத்த பாப்பரசர் கொள்ளப்படுகிறார்.
தற்போது 16 ஆம் ஆசீவாதப்பர் பாப்பரசராக கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்துகிறார். இவர் 265 ஆவது புனித பாப்பரசராவார். இத்திருச்சபை ஒரு, புனித, கத்தோலிக்க,அப்போஸ்தலிக திருச்சபையை (திருச்சபையின் நான்கு அடையாளங்கள்) போதித்து வலியுறுத்துகிறது.
கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்
கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் (Protestant Reformation) 1517 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ சமய சீர்த்திருத்த இயக்கமாகும். இதற்கான ஏதுநிலை 1517 ஆண்டுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தன. இது மார்டின் லூதருடன் தொடங்கி 1648 ஆம் ஆண்டின் மேற்குபாலிய சமதான ஒப்பந்தத்துடன் முடிவுற்றதாகக் கொள்ளப்படுகிறது[1]. இவ்வியக்கம், கத்தோலிக்கத் திருச்சபையை சீர்த்திருத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது.
மேற்குலக கத்தோலிக்கர்கள், சிலவேளைகளில் பாப்பரசர் வரை சென்ற, கத்தோலிக்க மேலிடத்தில் நிழவிவநத ஒழுக்கக் கேடுகளாலும் சமயக் கோட்பாடுகளில் செய்யப்பட்ட திரிபுகள், திணிப்புகள் என்பவற்றாலும் விரக்தியிற்றிருநதனர். முக்கியமாக பாவமன்னிப்பு விற்பனை, சபையின் முக்கிய பதவிகளை வணிகப் பொருட்கள் போல வாங்கி விற்றல் (சீமோனி) போன்றவை கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் தொடங்கப்பட்டதற்கான உடனடிக் காரணங்களாக அமைந்தன.
கிழக்கு மரபுவழித் திருச்சபை
கிழக்கு மரபுவழித் திருச்சபை (Eastern Orthodox Church) உலகில் இரண்டாவது பெரிய கிறிஸ்தவ சபையாகும். இச்சபையினர் இயேசுவாலும் அப்போஸ்தலர்களாலும் நிறுவப்பட்ட திருச்சபையின் உண்மையான தொடர்ச்சியாகத் தம்மைக் கருதுகின்றனர். இச்சபையில் ஆரம்பத்தில் இயற்றப்பட்ட சமயக் கோட்பாடுகளில் மாற்றங்கள் ஏற்கப்படுவதில்லை.
இச்சமயக்கோட்பாடுகள் கி.பி. 4 தொடக்கம் 8 வரையான காலப்பகுதியில் நடைப்பெற்ற 7 புனித சங்கங்களில் இயற்றப்பட்டவையாகும். கத்தோலிக்க, ஒரியண்டல் திருச்சபைகள் இச்சபையிலிருந்து வெளியேறிய பகுதிகளாக கொள்ளப்படுகிறன. நாட்டுக்கு நாடு பிரிந்து காணப்பட்டாலும் (இரசிய கிழக்கு மரபுவழி திருச்சபை, சேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபை...) அதிகாரபூர்வமாக நைசின் விசுவாச அறிக்கையின் படி தம்மை "ஒரே கத்தோலிக்க அப்போஸ்தலிக திருச்சபை" என அழைத்துக் கொள்கிறது.
இச்சபைக்கு தனித் தலைவர் கிடையாது, மாறாக இது இன மற்றும் நாட்டு எல்லைகளை கருத்திற் கொண்டு அதிகார அலகுகளாகப் பிரிக்கப்பட்டுக் காணப்படுகிறது. ஒவ்வெரு அலகும் சினோட் எனப்படும் ஆயர்கள் சபையால் நிர்வகிக்கப்படுகிறது. சினோட்டில் எல்லா ஆயர்களும் சம அதிகாரம் கொண்டவர்களாகக் காணப்படுவதோடு மற்றைய ஆயரது அதிகாரங்களில் தலையிடுவதில்லை. மேலும் எப்போதாவது புனித சங்கமொன்றை கூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால் கொன்சாந்தினோபிலின் ஆயர் "சமமானவரிடையே முதலாமவர்" என்ற பதவியை கொண்டிருப்பார்.(அதாவது புனித சங்கத்தில் தலைமைப் பதவியைக் கொண்டிருப்பார்).
மொர்மனிசம்
மொர்மனிசம் ஒரு கிறிஸ்தவ சமயப் பிரிவு. மொர்மனிசம் Latter Day Saint movement மற்றும் The Church of Jesus Christ of Latter-day Saints ஆகியவறின் சமய, பண்பாட்டு, கருத்து போக்குளைக் குறித்து நிற்கின்றது. Book of Mormon இந்த சமயப் பிரிவின் மறைநூலாகும். இது பைபிளையும் தனது சமய நூற்களில் ஒன்றாக கருதுகிறது.
மொர்மனிசமும் மையநீரோட்ட கிறீஸ்துவ சமயப்பிருவுகளுடன் ஒரு சுமூகமான உறுவு இல்லை.பல விசித்திரமான சமயக் கொள்கைகள் மொர்மனிசத்திடம் உண்டு. சில வழிமுறைகளைப் பின்வற்றுவதன் மூலம் மனிதர்கள் கடவுளாக வரலாம் என்பது, பல மனைவிகளை மணப்பது, சமய குற்றம் (sin) இழைத்தோரைக் கொல்வது போன்றவை இவற்றுள் அடங்கும்.
லூதரனியம்
லூதரனியம் என்பது "நம்பிக்கையால் மட்டுமே மீட்பு உண்டு" என்னும் கொள்கையை கொண்டுள்ள இறையியல் இயக்கத்தைக் குறிக்கும். இது தன் பெரும்பாண்மையான கொட்பாடுகளை மார்ட்டின் லூதர் என்னும் ஜெர்மனிய சீர்திருத்தவாதியிடமிருந்து பெருகின்றது.
லூதர் காலத்திலேயே அவர் தொடங்கிய சீர்திருத்தம் மாற்று கருத்துக்களால் பலவாறாகப் பிரிந்தது. ஆங்கிலியன், கால்வினியம், பிரெஸ்பைடேரியன், அனபாப்டிஸ்ட் என்றெல்லாம் பிரிவுகள் தோன்றி எல்லாவற்றுக்கும் மொத்த அடையாளமாகக் கத்தோலிக்கத்திலிருந்து விலகி வந்த கூறுகள் புராட்டஸ்டன்ட் என்று பொதுப் பெயரிட்டு அழைக்கப் படலாயின.
மார்டின் லூதர் தொடக்கத்தில் கத்தோலிக்க சபைக்கு மாற்றாக நிறுவிய சீர்திருத்தக் கிறிஸ்தவ சபை இன்றளவும் லூதரன் ஆலயம், லூதரன் சபை (லூதரன் சர்ச்)என்றெல்லாந்தான் அழைக்கப் படுகிறது. அவர்களின் சீர்திருத்தக் கோட்பாடு லூதரனியம் என்று அடையாளப் படுத்தப் படுகிறது.

நன்றி :-http://www.jesusinvites.com


Nineteenth century out-of scale map of Judaism's four holy cities, with Jerusalem occupying the upper right quadrant, Hebron beneath it, the Jordan River running top to bottom, Safed in the top left quadrant, and Tiberias beneath it. Each of the four cities includes representations of the sacred shrines, as well as the graves of sainted rabbis and holy men.

0 comments:

Post a Comment

Kindly post a comment.