Thursday, August 9, 2012

அவுட் லுக் என்று மாறிய ஹாட்மெயில் !

Hotmail.com will be no more as Microsoft will be switching all of its clients to Outlook.com
Microsoft drops Metro name for crucial new products


OUTLOOK  என்று பெயர் மாறிய HOTMAIL

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவை தளமான ஹொட்மெயில்

தற்போது அவுட்லுக்.காம் என பெயர்மாற்றம் பெற்றுள்ளது.


1996-ஆம் ஆண்டில் சபீர்பாட்யா  மற்றும் ஜேக் ஸ்மித் ஆகியோரால் 


தொடங்கப்பட்ட  ஹாட்  மெயில் தளத்தை 1997-ஆம் ஆண்டு 40 கோடி 


அமெரிக்க டாலர்களுக்கு  மைக்ரோசாப்ட் வாங்கியது. தற்போது 32 கோடிக்கும் 


 அதிகமானோர் ஹாட்மெயில்  சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.



ஹாட் மெயில் சேவையுடன் தான் முன்பு வைத்திருந்த எம் எஸ் என் 


மின்னஞ்சல் சேவையையும் இடையில் உருவாக்கி ஹாட் மெயிலுடன் 


சேர்த்தே  வழங்கி வருகின்றது.


தற்போது, மைக்ரோசாப்ட் நிறுவனம்  ஹாட்மெயில் என்ற பெயரை அவுட்லுக் 


என்று மாற்ற முடிவெடுத்துள்ளது.


அத்துடகூடுதல் வசதிகளையும் புதிதாக இணைத்திருக்கின்றது. சமூக 


வலைத்தளங்களை  அணுகவும், டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் போன்களில் 


பயன்படுத்த எளிதாகவும் வடிவமைப்பு மாற்றம்  பெற்றுள்ளது.


மேலும் தனது அலுவலகப் பயன்பாட்டு மென்பொருள்களான வேர்ட், எக்செல், 


பவர்பாய்ண்ட் ஆகியவற்றை எளிதாக எடிட் செய்யவும், அனுப்பவும் கூடுதல் 


வசதிகளைத் தந்திருக்கின்றது.


மேலும் ஸ்கைப் வீடியோ போன் வசதியையும் இ-மெயிலுடன் 


இணைத்திருக்கின்றது. இதன் மூலம் மற்றொரு ஸ்கைப் நண்பருடன் 


எளிதாகத் தொடர்பு கொள்ள முடியும்.


மைக்ரோசாப்டின் ஆன்லைன் சேமிப்புத் தளமான ஸ்கைடிரைவும் விரைவில் 


மேம்படுத்தப்பட்டு இத்துடன் இணைக்கப்பட உள்ளது.



நன்றி :- தீக்கதிர்  08-08-2012


0 comments:

Post a Comment

Kindly post a comment.