Wednesday, August 22, 2012

‘பேச்சைப் பற்றிச் சொல்வேன் என்னய்யா, பேசிப் பேசித் தத்துவம் போச்சையா.” - கபீர்



காசிமாநகரில் நீரு-நீமா என்ற நெசவாளிகளால்  லஹாதாரா கண்டெடுக்கப்பட்டவர், பெயரிட அழைத்த குருமார், கபீர், குப்ரா, அக்பர் என்ற பெயர்களையே தேர்ந்த்டுத்தனர். கடைசியில் கபீர் என்றே பெயரிட்டப்பட்டது. 1455ஆம் ஆண்டில் ஆனிப் பெள்ர்ணமியில் ஒரு திங்கள் கிழமையே பிறந்தநாள் ஆனது. கபீரின் பிறப்பும் காலமும் குறித்துப் பல்வேறுவிதமான தகவல்கள்ள் உள்ளன..

கபீர் மார்க்கத்தினர் அவற்றை எல்லாம் நம்புவதில்லை. சத் புருஷன்; பரமாத்மாவின் அம்சம்; பிறப்பு இறப்பு இல்லாதவர். அவசியமேற்படும் பொழுது அவரே தோன்றுவார். முந்தைய மூன்று யுகங்களில் 13 முறை அவதரித்துள்ளார்.  14-வது கலியுக அவதாரம்..சத்திய, திரேத, துவாபர யுகங்களில் முறையே சத்சுத்ருதர், மனீந்திரா, கருணாமயர் என்ற பெயர்களில் கபீர் அவதரித்தார் என்றெல்லாம், கபீர் வழியினர் நம்புகின்றனர்.

இஸ்லாமிய நெசவாளிக் குடும்பத்தில் வளர்ந்தவர் கபீர். இராமன், கோவிந்தன், ஹரி என்னுமிறைவன் நாமங்களைக் கூறுவதில் இன்பம் கண்டார். அவருடைய இராமன் இந்துக்களின் இராமன் அல்லன். ராம நாமத்தைச் ஜெயிப்பதால் முஸ்லீம்கள் வெறுத்தனர். கபீர்-காஃபிர் ( நாத்திகன் ) என்று தூற்றினர். அதற்கு “பிறர் சொத்தை அபகரிப்பவனும், வெளிவேடத்தால் உலகை ஏய்ப்பவனும், வாயில்லச் சீவன்களை வதை செய்பவனுமே”
காஃபீர் என்று பதிலிறுத்தார்.

அறியா இடத்திலிருந்து வந்தேன்
அறிந்தாரில்லை எந்தன் மர்மம்

1)  பிறவியும் கரு வாசமும் இல்லேன். பாலக உருவில் வந்தேன். காசி நகரத்துக் காட்டில் இருந்தேன். சேணியன் என்னைக் கண்டான்.

2)  விண்ணுக்கும் மண்ணுக்கும் அப்பாற்பட்டவன். அதமன், அபாரன், நானே, ஒளியும் உருவாம்; மாசிலா தேவன், அதுவே என்னுடைய நாமம்.

3)  உருவிலி உருவே தரித்தே வந்தேன். இடலைக் கபீன் என்றார். முன்னைப் பிறவியில் கொடுத்தேன் வாக்கு; உன்றன் வீட்டில் வந்தேன்.

4)  ஊன் என்ப, உதிரம் என்பவை அற்றேன். உலகென் பெயரே ஓதும். அபயம் அளித்துக் கரையில் சேர்ப்பேன். அழிவிலி கபீரன் நானே.

இறைவனின் இந்துப் பெயர்களைக் கபீர் நேசித்ததால் முஸ்லீம்கள் வருந்தினர். வெளித் தோற்றத்தில் வைஷ்ணவராக வாழ்ந்ததால், அந்தணர் சினந்தனர். உனது குரு யார் என்று கேட்டுத் தொல்லை தந்தனர். இவருடைய மெய்யான பக்தி ஞானத்தைப் புரிந்து கொண்டதால், காசிவாசி இராமனந்தர் குருவாக்கிக் கொண்டதாகவும் பேசப்படுகின்றது. கால ஆய்வில் ஈடுபடுவோர் இதனை மறுத்தனர். பல்வேறு சாதனைகளைப் புரிந்ததான கதைகளும் ஏராளம் உள. இவ்ரது புகழ் பரவப் பரவ பொறாமை கொண்டனர் பிராமண சாஸ்திரியரும், முஸ்லீம் காஜிகளும். பலவேறு வகையில் அவமானங்களுக்கும் உட்படுத்தினர்.. சிக்கந்தர் என்ற அரசனை வணங்கச் சொன்னபோது, ’ வணங்கான் இறவன் அடியான் ‘ என்றார், கபீர். 

”கங்கைநதி நீரில் கபீரையும்
சங்கிலியால் கட்டிப்பின் போட்டார்கள்
அலைகள் தகர்த்தன பூட்டியதளையை,
அலைமேல் அமர்ந்தான் மாந்தோல் மேல்போல்”

 ”தீயும் அவனே, காற்றும் அவனே,
நாயகன் எரிந்தால் காப்பான் யாரே,
எரிவதும் யாரே நோவதும் யாரே,
சாரங்கபாணியின் லீலை யாவும். 
இரண்டே சொற்கள் கபீரன் சொல்வான்,
இறைவன் இருந்தால் நம்மைக்காப்பான்.”

மிகப் பழைய ஏடுகளில் இந்தப் பாடல்கள் காணப்படுகின்றன. சிக்கந்தர் அரசன்தான் கபீருக்குக் கேடு விளைவித்தான் என்பதற்குச் சான்றுகள் இல்லை. ஷேக் தகி என்பவரையும் , கபீர் பற்றிய தகவல்களையும் இணைத்தும் பல செய்திகள் ”உலாவருகின்றன.

ஆடாடென்று ஆட்டுவிப்பான்
ஆடல்காரன் ஆடுகின்றான்
உள்ளத்துறைவான், காலம் கடந்தான்,
கொல்வாய் மனதில், ஷேக்கு தகி” இருவருமே சேர்ந்து எழுதியதாகக் கருதப்படுகின்றது.

இருந்தாலும் ’நிர்பவஞானம்’ , ‘அனுராகசாகரம்’ப் ந்முதலிய கிரந்தங்களில், இருவரைப் பர்ரியும் நிறையக் கதைகள் உள்ளன. கபீரை 52 சோதனைகளுக்கு உள்ளாக்கியதாக இவை கூறுகின்றன.

கமால் என்பவர் கபீரின் மகனே எனப் பலர் கொள்வர். சீக்கியரின் ‘க்ரந்த் சாஹேப்’பில் உள்ள கபீர் வாக்குகளை மேற்கோள் காட்ட்ப்படுகின்றது.

’மகான் கமால் பிறப்பால் கபீரன் கெட்டான்,
முகுந்தனை மறந்தான், பொருளைச் சேர்த்தான்.’ 

கமால் மகனல்ல சீடன்தான்  என்றும் சிலர் கூறுகின்றனர். ஏனெனில் சீடனையும் மகனாகக் கருதி ஆதரித்த காலமது.

கபீர் பள்ளி சென்றதில்லை. தாளும் மசியும் தொட்டதில்லை. பேனாவையும் தொடவில்லை.” நாலு பக்தன் கபீர் நாவால் நல்லுரை மொழிந்தான்” என்பதாக பீஜக்கில் ஒரு பாடல் உள்ளது. இந்த நூலை எழுதியவர், ’ கபீர் கிரந்தாவளி” என்ற நூலையும் தொகுத்தளித்துள்ளார்..

”பாணிகள்” என்னும் அவர் பாடல்களில் கருத்துக்கள்  உள்ளன..பின்னர் “பீஜக்” என்ற திரட்டும்  தொகுக்கப் பட்டிருக்கின்றது. கபீர் மார்க்கத்தார் இதனையே ஆதார நூலாகக் கருதுகின்றனர். 

சீக்கியர்களின் 5-வது குரு அர்ஜுனன் தேவர்.. 1661-ல் அவரது ஆணைப்படி கபீரின் சுமார் 225 பதங்களும், 252 ஈரடிச் சுலோகங்களும், சீக்கிய மத நூலான. ’கிரந் சாஹப்” பில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

சில நூல்களில் நம்ப முடியாத செய்திகள் பல உள்ளன. உதாரணமாக ”கோரக் கோஷ்டி” என்னும் நூலில், கோரக் நாதருடன் தர்க்கம் புரிகின்றார். தரையில் தம் திரிசூலத்தை ஊன்றி அதன் ஒரு முனையில் அவர் அமர்ந்து கொண்டு, இன்னொரு முனையில் அமர்ந்து வாதம் புரியுமாறு கபீரை அவர் அழைக்கின்றார். உடனே கபீர், தறியை ஒரு தட்டுத் தட்டி, நூல் ஒன்றை வானில் ஏற்றி அதன்மேல் அமர்ந்து கொண்டு “நாதர் அவர்களே, திரிசூலம் தரையில்தானே உள்ளது. வாரும் வானத்து நூலில் அமர்ந்து வாதம் புரிவோம் ‘ என்று அழைத்தாராம்.

எல்லா மதத்தினரும் கபீரை நேசித்தனர். இராஜஸ்தானில் தாதூ மார்க்கம் இன்றுகூட உள்ளது. அவர்களது பிரபஞ்சத்திற்குப் ‘பஞசவர்ணி’ என்று பெயர். தாதூ, கபீர், நாம தேவர், ரைதாஸர், ஹரதாஸர் என்ற வரிசைக் கிரமத்தில் பெரியோர்களின் மொழிகள் உள்ளன. கபீர் பகுதியில், சுமார் 400 பதங்களும், ஸாகி எனப்படும் 800 ஈரடிகளும் ரமைனி எனப்படும் சிலசெயுட்களும் உள்ளன. ‘சப்தாவனி’ என்னும் பெயரிலும் கபீரின் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சாந்தி நிகேதனைச் சேர்ந்த க்‌ஷிதி மோகன்சென் அரிதின் முயன்று நான்குக்கும் அதிகமான கபீரின் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். தாகூருக்கும் கபீரின் மீது பிரியம் அதிகம்.

கோரக்நாத்:-

தண்டம் கமண்டலம் தந்தவன் யார் ?
மான் தோலும்தான் தந்தவன் யார் ?
அரிநாமம் தந்தவன் யார் ?
செபமாலை தந்தவன் யார்?

கபீரின் மறுமொழி:-

தண்டும் கமண்டும் பிரமன் தந்தான்,
சிவனே தந்தான் மான் தோலும்
குரவன் தந்தான் அரி நாமம்
விட்டுணு தந்தான் செபமாலை

 கோரக்நாத்:-

மேலே, கீழே, நாலே கால்கள்,
இரண்டே காது அறிந்தால் சொல்வாய்,
இன்றேல் துறப்பாய் மாலையும் பையும்

கபீர்;-

கீழே பூமி, மேலே வானம்
நாலு திசை குளம்பே, கதிரும் மதியும் காதுகளே
பையும் மாலையும் துறக்கேன் நான்,
இராமனந்த குருவே சரணம்.
கொம்பும் பையும் தண்டமும் என்றே
மேலே பேசில் உனக்கொன்று தருவேன்.

இது போன்ற தொடர்புகள் கபீருக்குச் சற்றும் தொடர்புடையதாகத் தெரியவில்லை. இறுதி நாட்களில் காசியை விட்டு வெளியேறி விடுகின்றார், கபீர்...

காசியை விட்டு மக்ஹருக்கேகி
கபீர் பயணம் செய்தார்
மலரும் துணியும் விட்டுச் சென்றார்
மொழியும் விட்டுச் சென்றார்.

காசி விட்டு குரு மக்ஹர் சென்றார். இரு மத ஆசான்
புதைப்போம் என்றும் எரிப்போம் என்றும்
கூறினர் மக்கள்.
பூதம் நாடும் கடந்தவர் சற்குரு
மூப்பும் சாவும் அற்றவர்,
தாசன் மலூகன் நல்லுரை கேளாய்.
கபீராம் இறைவனைத் தேடு.

மண், நீர், தீ, வாயு ஆகியவை நான்கு பூதங்கள். இவை நான்கிற்கும் அப்பாற்பட்டவர் கபீர் என அவருடைய பக்தர்கள் நம்புகின்றனர். இவ்வாறாக அவர் இறந்தது காசியில் அல்ல என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. ஆனால், இறந்த ஆண்டுகளில் வேறுபாடு உண்டு. எல்லா ஆண்டுகளுமே விக்கிரம ஆண்டுகள் என்பதுதான் சிறப்பு.

அவர் தன்னை அமரராகக் கருதினார்.

நானே சாகேன், சாவதே உலகம்,
கண்டே கொண்டேன் வாழவைப்பவனை;
அரி மரித்தால்தான் அடியேன் மரிப்பேன்

அரி சாகாவிடில் நான் ஏன் சாவேன் ?
கபீர் சொல்வான் மனம் மனத்தோடு கலந்தே,
ஆனந்தக் கடலில் அமர வாழ்வுற்றதே!

கபீரின் பாடல்களில் உள்ள கருத்துக்கள்,  திருமூலர், சித்தர் பாடல்கள், பாரதியார் பாடல்கள், பட்டினத்தார் பாடல்கள் போன்ற பலவற்றுடனும் ஒத்துப் போகின்றன.

கபீர் பிரானின் பூதவுடல் மறந்திருக்கலாம்; புகழ் என்றும் மறையாது.

 நன்றிக்குரியோர் :-

பாரச்நாத் திவாரி எழுதியது. தமிழாக்கம் டி.ஆர்.பஞ்சாபகேசன்.
தேசிய வாழ்க்கை வரலாற்று வரிசையில், நேஷனல் புக் டிரச்ட் இந்தியா, 1967-ல் எழுதப்பட்ட நூலினை, 1972-லும், 1999-லும் இரு பதிப்புக்களாக வெளியிட்ப்பட்டுள்ளன.. 

 இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் பாலமாகத் திகழ்ந்த கபீரின் சில படைப்புக்கள் அடுத்த வலைப்பூவிலும் தொடரும்.










2 comments:


  1. N. Kannan
    13:48 (7 hours ago)

    to mintamil
    நல்ல பங்களிப்பு நண்பரே!

    க.>


    DEV RAJ rdev97@gmail.com
    14:09 (6 hours ago)

    to mintamil
    நல்ல பதிவு.

    உமேஷ் எனும் அன்பர்
    கபீரின் தோஹாவை
    அழகாக மொழிபெயர்த்துள்ளார் -

    http://kabeeran.blogspot.in

    வரலாற்று உண்மை எதுவாயினும்
    கபீர் தாஸரைப் பெருவாரியான
    மக்களுக்கு அறிமுகப் படுத்தி வருவது
    ராமாநந்த மரபைச் சேர்ந்த ஒருவர்
    இயற்றிய ‘பக்தமால்’ நூல் மட்டுமே
    என்பதை மறுக்க இயலாது;
    ஆய்வுக் கட்டுரைகள் அல்ல



    தேவ்

    ReplyDelete

  2. Innamburan Innamburan
    16:09 (4 hours ago)

    to mintamil
    நல்வரவு மட்டுமல்ல. நன்நிமித்தமும் ஆகும்.
    இன்னம்பூரான்

    ReplyDelete

Kindly post a comment.