Thursday, August 23, 2012

இச்சகத்தில் ஒன்றுமில்லை. இனிப்பாகும், பின் புளிப்பாகும் , நேற்று நாட்டை ஆண்டவர், இன்றோ காட்டை ஆள்வாரே! - கபீர் !





பாரத நாடு. கலை,  அறிவியல்.  அரசியல் ,ஆராய்ச்சி, ஆன்மீகம் என் எண்ண துறைகளிலும் சிறந்து விளங்கும் பெருமையுடையது. அதிலும் ஆன்மீகத்தில் உலக நாடுகளில் ஈடு இணையற்றுத் திகழ்கின்றது. ஆன்பீகத் துறையில் தோன்றியவற் கபீர் என்னும் மகான் ஆவார்.சடங்கு, சழக்குகளை உறுதியாக எதிர்த்தார். அவற்றில் உள்ள பாசாங்குகளையும் பகட்டுகளையும் அம்பலப் படுத்தினார்.இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பாலமாய்த் திகழ்ந்தார். அந்தப் புரட்சிச் சகாப்தத்தின் புகழ் மிஃகு பக்தர்களில் ஒருவர், அவரது சிந்தனைகளும்,வாக்குகளும் நாடெங்கும் ஊடுருவி சமயச் சீர்திருத்தங்களுக்கு 
உதவின.
.

பாரதியார், திருமூலர், பதினெண் சித்தர்கள், பட்டினத்தார், இராமலிங்க சுவாமிகள் , திருவள்ளுவர்,பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் உண்மைகள்,பன்னிரு திருமுறையைச் சுட்டும் பொதுமைகள்,கந்தசஷ்டி, பாம்பன் சுவாமிகள் படைப்புக்கள்

முதலிய எல்லாமே நினைவுக்கு வருவர்..




பதங்கள்:-

1. ( 1)

என்றன் குருவே குளவிக் கிணையே
புழுவைக் கொணர்ந்து தன்னிற மளிப்பான்.

காலும் வேறே சிறகும் வேறே.

 சாதுயுமேது; பேதமுமேது,                               

தோட்டியும் ஆவான் தொண்டன்,


2.( 3 )

தன்னையும் பிறரையும்  சமமாய் நோக்கின்
எல்லாம் தெரியும் சமமாகத்தான்
நாகரி அடைய துவே நிலையே,
கபடம், கருவம் இரண்டும் விடுவாய்.

4. (1)

இகழும் புகழும் மதியாதவனும்,
மானாபிமானம் விட்டு நிற்பவனும்,
இரும்பும் பொன்னும் ஒன்றென்பானும்
இறைவன் உருவாய் நிற்பவன் ஆமே.



4  (2)

ரஜகுண தமகுண சத்வகுணம் என்பர், யாவும்

உன்றன் மாயையாமே, நாலாம் நிலையைக்

கண்டான் எவனோ, அவனே பரம பதமடைவானே.
 ( நாலாம் நிலை: துரிய நிலை )

5.(1)

உடலே ஊராம், தலைவன் சீவன்,
உழவர் ஐவர், மெய்கண் செவிநா
மூக்கின்றிவையே அடங்காப் பொறிகள்.

7. 
 ஆட்டம் இனியே ஆடேனே,
 பாட்டும் விட்டதென் மனமே.
(1)
  வெறுமை நிறந்தது,
  வேட்கைப் பாண்டம் உடைந்தது,
  பிரமை மறைந்தது, காமச்சட்டை கிழிந்தது.
(2)
    வேடம் பலவும் போட்டேன்,
    வேண்டேன் இனியும் வேடம்,
    விட்டுச் சென்றார் உற்றாரும்,
    எஞ்சிய திராமன் நாமம். 

( இவர் குறிப்பிடும் இராமன் இந்துக்களின் தெய்வமல்ல )

 (3)
     சஞ்சலம் நிச்சலமாகி, சர்ச்சைகள் யாவும் தீர,
     பெற்றேன் முழுவதும் கூலி,
     கபீரவன் திருவருளாலே.  

8 (1)
    ஐயத் தூண்கள் தகர்ந்தன,
    மோகச் சுவர்கள் விழுந்தன,
    இச்சைக் கூரை இடிந்தது,
    கெடுமதிப் பாண்டம் உடைந்தது


 12 .
       பேச்சைப் பற்றிச் சொல்வேன் என்னய்யா
       பேசிப் பேசித் தத்துவம் போச்சையா

 (1)    பேசிப் பேசி பெருகின விகாரம்
         பேச்சின் றேலோ ஆய்தல் எப்படி?

(2)     நல்லோரிடையே நன்றே சொல்லல் கேட்டேல்,
         அல்லாரிடையே மெள்னம் நலமே.

(3)    ஞானிகளோடு பேசில் நன்மை
         அறியாரோடு பேசல் வீணே.

 (4)   அரைகுடம் தளும்பும் அன்றே,
         நிறைகுடம் தளும்பாத்ர்ன்றும்


13.
       மெய்யிது பொய்யே செருக்கும் ஏனோ
       மரித்தால் மற்றவர் கணமும் வையார்,

(3)      எலும்பும் எலியும் கட்டை போலே,
          மயிரும் எரியும் சருகைப் போலே,

(4)      அறிந்தும் மனிதன் விழித்திட மாட்டான்,
           யமனின் பாசம் விழுகின்ற வரையில்.

15. (1) கோட்டையில் கள்ளர் ஐவர் உள்ளார்,
           கொள்ளை யடிப்பார் அல்லும் பகலும்,
           கோட்டைக்காரன் விழித்திருந்தாலே,
           கொள்ளையடிக்கத் துணிவாரில்லை.

16. (1)   பன்னிரு வருடம் பாலனாய் ஒழிந்தன,
             இருபது வருடம் தவமோ இல்லை,
            முப்பது வருடம், உத்தமன் நினைவிலை,
            மூப்பது வந்ததேன ஏங்கிடுவோரே


(4)       கபீரன் சொல்வான் நல்லீர் கேளீர்,
           கட்டி வைத்த செல்வம் கடைவழி வராது,
           கோவல ராயன் அழைத்து விட்டாலே,
           சொத்து சுகம் விட்டே ஓடுதல் வேண்டும்.


8. (2)
           அறிவென் பயிர், குரு பயிர்க் கொல்லை
           பொம்மை, ஈரட்சரமே காப்பான்,
           கபீரன் சொல்லுவான், பயிர் மேய ஒட்டேன்.
           சமயத் தினிலே விழித்தேன்.


 20.
           நானே சாகேன், சாவதே உலகம்
           கண்டே கொண்டேன் வாழவைப்பவனை.
 (3)     கபீர் சொல்வான் மனம் மனத்தோடு கலந்தே,
          ஆனந்தக் கடலில் அமர வாழ்வுற்றதே.
24.
          நாலு நாள் தன்னுடைய தமுக்கையடித்துச்
          செல்வானே, கவிழ்த்திட்ட கட்டிலில்
          மண்ணுக்குச் செல்வான்,
          ஒன்றும் கூடச் செல்லாதே.

(1)       படியினிலமர்ந்து பத்தினி அழுவாள்,
           பெற்றவள் வருவாள் வாசல் வரை
           காடுவரை சுற்றம் கூட வருமே
           அதன் பின் அன்னம் தனிச் செல்லும்.

(2)       இந்தச் சொத்தும் பிள்ளையும் ஊரும்,
            இனி பின் திரும்பக் காண்பதில்லை,
            கபீரன் சொல்வான் தொழுதல் இன்றி,
            மனிதன் வாழ்க்கை வீண்தானே. 

27 (1)   எண்பத்து நான்குலட்சம் யோனியில்
             பிறந்து பிறந்து நந்தன் நொந்தான்,
             பக்திக்குப் பரிந்து பிறந்தான் கண்ணன்,
             துர்ப்பாகியனும் பெற்றான் பேறு.
     (2)
            பிறப்பும் இல்லான், இரப்பும் இல்லான்.
           துன்பம் இல்லான், மாசும் இல்லான்,
           தாயும் மில்லான், தந்தையும் இல்லான்,
           தாசன் கபீரன் நாதன் அவனே.

39.      அய்யன் நினைவின்றியே கெட்டனர் புல்லர்,
           உய்ய நான் நாடுவோர், வலையில் பட்டவர்.



  (1)      இனிதே போகம் பிறிதே இல்லை என்பான் யோகி.
            பெற்றோம் சித்தி என்பர் மொட்டைத் தலையர், சடையர்.

   (2)      புலவர், வீரர், கவிஞர், வள்ளல், தாமே பெரியார் என்பர். அரியின் சரணம்            
              துறக்கும்   மக்கள், தோன்றியவாறே மறைவர்.
       
   (3)        இடத்தே வலத்தே விகாரம் விட்டே,
                பிடிப்பீர் அரியின் பதமே,
                கபீரன் கேட்பான், இனிப்பை உண்ட ஊமை
                இயம்புவன் யாதே!


இதுவரை நாம் பார்த்தது, பதங்கள் என்னும் பிரிவில் உள்ள 39 பாக்களின்

சிலவரிகள்.

ரைமனிகள் என்னும் தலைப்பில் 5 பாக்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 14

வரிகளைக் கொண்டவை.


ஈரடிப் பாக்களாக 67 மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

 (2 )  அனந்தம் குருவின் மகிமை, அனந்தம் அவர் செய் நன்மை,
     அனந்தக் கண்கள் தந்தார், அனந்தப் பொருளைக் காண.


(10)  ஞானிப் பத்தன் நித்தியம் சாவான், அர்யணை அமர்வான் அறிவிலி,
         நன்றும் தீதும் அறியான், வயிற்றை நிரப்புவதொன்றே அறிவான்.


(29)    முத்தும் மணியும் இழைத்துக் கட்டிய அரக்குக் கோயில்,
           பத்துநாள் கூத்துப்போல் நாளையே அழிந்தே போகும்.


(30)    பாழாம் ஊரில் ஓட்டைப் பானைகள், போயினர் எங்கோ குயவர்,
          இலங்கை வேந்தன் இராவணப் பெயரான், போயினன் எல்லாம் விட்டு.


 (44)   இச்சகத்தில் ஒன்றுமில்லை. இனிப்பாகும், பின் புளிப்பாகும்
          நேற்று நாட்டை ஆண்டவர், இன்றோ காட்டை ஆள்வாரே!


 (45)    மகன் பிறந்தாலென், முரசம் கொட்டுவதென்?
           வர்டவும் போக்கும் எறும்பின் வரிசைபோல்.



(54)    காபா காசி ஆயிற்று, ராமன் ரகீம் ஆகிவிட்டான்,
          குருணை மெல்லிய மாவாகி, கபீர் விருந்து துய்க்கின்றான்.


(55)     இதயத்தில் அமைதி இல்லாமல், கஜ் ஏன் செல்வீர் ஷேக்காரே,
           இதயத்தில் நிறைவு மிக்காமல், குதாவைக் காண்பது எப்படியோ!


(56)      அய்யன்பால் மெய்மையும், அண்டையர்பால் தூய்மையும் உண்டேல்
            பின் மொட்டையும் நீள் சடையும் ஒன்றாகும்.


(61)      நீரிலும் மென்மையன்,புகையின் புகைமை மிஞ்சியவன்,
             காற்றிலும் வேகத்தன், அவனே கபிலன் உறுதுணைவன்.


கபீரைப் படிக்கப் படிக்க எளிமையும் இனிமையும் வாழ்வினில் பெருகும்.


சடங்கு சம்பிரதாயங்களையும், மூடப்பழக்க வழக்கங்களையும் சாடுகின்றார், தம் பாடல்களிலே.



கபீரின் கவிதைகள் பல முக்கிய இந்தியத் திரைப்படங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுபி இணைவு என்னும் இசைக்குழு இந்தியப் பெருங்கடல் ஆல்பத்தில் jhini தலைப்புப் பாடல்கள், இந்திய நாட்டுப்புற சுபி மரபுகள், மற்ரும் முற்போக்கு ராக் இசைகளிலும் இணக்கப்பட்டுள்ளன. பல ஆவணப் படங்களும், இந்தியாவிலும், பாக்கிஸ்தானிலும் தயாரிக்கப்பட்டுள்ளன.



மொத்தத்தில், முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் பாலமாக அமந்து செயல்பட்ட, ஆன்மீகச் சித்தர், கபீர்!


நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா வெளியிட்டுள்ள, தேசீய வாழ்க்கை வரலாற்று நூல்களைத் தேடிப்பிடித்து வாங்குவதே  நமது கடமையாக இருத்தல் வேண்டும்.


திருவல்லிக்கேணி கடைவீதிகளில், பிளார்ட்பார்ம் கடைகளில் வாங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.




 
       

.
      
  

     
       

             






   
      
       








0 comments:

Post a Comment

Kindly post a comment.