திருமுருக. குக. கிருபானந்த வாரியார் சுவாமிகள்
தோற்றம் 25-08-1906 மறைவு 07-11-1993
இந்திரன் மழையைப் பெய்விப்பதுபோல், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.
சூரியன் கோடைக் காலத்தில் தண்ணீரைக் கிரகிப்பது போல், வரியை வசூலிக்க வேண்டும்.
காற்று எங்கும் செல்வதுபோல், அரசன் தன் பணிக் காவலர்களைக் கொண்டு உலகம் முழுவதுமே சென்று பார்வையிடவேண்டும்.
எமன் எப்படி வேண்டியவன், வேண்டாதவன் என்று பாராமல் குற்றத்துக்குத் தக்கவாறு தண்டிப்பதுபோல், குற்றம் உண்டாயின் தவறாது தண்டிக்க வேண்டும்.
வருணன் பாசக் கயிற்றால் கட்டுவதுபோல், பாவம் செய்பவரைத் தண்டித்தல் வேண்டும்.
சந்திரனைக் கண்டு மக்கள் சந்தோஷம் அடைவது போல், மக்கள் மன்னனைக் கண்டு மகிழ வேண்டும்.
நெருப்பின் சூட்டினைக் கண்டு அஞ்சுவது போல், குற்றம் செய்பவர்கள் அரசனைக் கண்டு அஞ்ச வேண்டும்.
நிலம் அனைத்தையும் தாங்குவதைப் போல், அரசன் அனைவரையும் பொறுமையாய்க் காத்திடல் வேண்டும்.
நன்றி :- தினமணி, வெள்ளி கொண்டாட்டம், 24, ஆகஸ்டு, 2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.