Friday, August 17, 2012

இந்திய சாலைக் குழுமத்துக்குத் தனி இணையதளம் தொடக்கம்





இந்தக் கூட்டம் குறித்த தகவல்களை வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்ட இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சென்னை, ஆக. 16: இந்திய சாலைக் குழுமத்தின் 73-வது ஆண்டுக் கூட்டம் நடைபெறுவதை ஒட்டி, அது குறித்த தகவல்களை அறிந்து கொள்ள வசதியாக தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த இணையதளத்தை (www.73irccoimbatore.in) மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
நெடுஞ்சாலைத் துறையின் பொறியியல் வல்லுநர்கள் அடங்கிய இந்திய சாலை குழுமம் 1937-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் உள்ள நெடுஞ்சாலைத் துறை வல்லுநர்கள் தங்களின் தொழில்நுட்ப அனுபவங்களையும், புதிய கண்டுபிடிப்புகளையும் பற்றி விவாதிக்கவும், புதிய தொழில் நுட்பங்களை நெடுஞ்சாலைத் துறையின் சாலை மற்றும் பாலங்களின் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டுக்கு அறிமுகம் செய்யவும் இந்தக் குழுமம் பெரிதும் உதவுகிறது.

இந்தக் குழுமம், இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு மாநிலத்தில் கூடி விவாதிப்பது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு 73-வது கூட்டம் கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடை பெறுகிறது.

நன்றி :- தினமணி:-

0 comments:

Post a Comment

Kindly post a comment.