Saturday, August 18, 2012

கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது





கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை, ஆண்டுதோறும் உலகளவில் பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிபவருக்கு விருது வழங்கி கெளரவிப்பதுடன், சிறந்த நூல்களுக்கான இலக்கியப் பரிசுகளையும் வழங்கி வருகிறது. 2009ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இவ்விருதுக்கு இந்த ஆண்டு பத்திரிகைத் துறையில் சிறந்த சேவை புரிந்தமைக்காக தினமணி ஆசிரியர் கே.வைத்தியாநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 2ம் தேதி நடக்க உள்ள விழாவில் அவருக்கு முதன்மை பரிசு, கேடயம், சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

சிறந்த நூல்கள் எழுதிய எழுத்தாளர்கள் (அடைப்புக்குறிக்குள் நூல்கள் பெயர்) என சிறுகதை பிரிவில் கனடாவை சேர்ந்த அகில் என்கிற அகிலேஸ்வரன்சாம்பசிவம் (கூடுகள் சிதைந்தபோது), சிங்கப்பூர் மா.அன்பழகன் (என் வானம் நான் மேகம்), கவிதை பிரிவில் நாமக்கல் கா.ஜெய்கணேஷ் (நட்பின் முகவரி), பிரான்ஸ் பத்மாவதிஇளங்கோவன் (சிறுவர் இலக்கியம்), இலங்கை டாக்டர் ஓ.கே.குணநாதன் (பறக்கும் ஆமை), கன்னியாகுமரி மலர்விழி (தூப்புக்காரி), டாக்டர் எஸ்.சிங்காரவடிவேல் (ஆத்தா கல்லறையில் ஒரு ஆவாரஞ்செடி), கட்டுரை பிரிவில் ஈரோடு செ.ராசு (வாழ்நாள் சாதனை விருது), மலேசியா ராஜம்ராஜேந்திரன் (மலேசியப் புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்), லண்டன் சிவ.தியாகராஜா (தமிழ் மக்களும் தழுவிய மதங்களும்), இலங்கை கலாமணிபரணீதரன் (ஜீவநதிசிற்றிதழ்), இணையம் பிரிவில் ஜெ.வீரநாதன் (இணையத்தை அறிவோம்), மொழி பெயர்ப்பு பிரிவில் திருச்சி திருவரங்கங்கம் லக்குவன் (இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு - EMS Namboothiripad), சென்னை ஆர்.செளரிராஜன் (கு.சின்னப்பபாரதி நூல் மொழி பெயர்ப்பு), இலங்கை உபாலி லீலாரத்ன (கு.சி.ப சர்க்கரை நூல் மொழி பெயர்ப்பு), உஸ்பெஸ்கிதான் லோலா.முத்துபா (கு.சி.ப நூல் மொழி பெயர்ப்பு) ஆகிய 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, அறக்கட்டளைத் தலைவர் பி.செல்வராஜ் கூறியது: நாமக்கல் பொன்னேரியில் பிறந்த எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி எழுதிய நூல்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. வாழும்போதே அவருக்கு மரியாதை செய்யும் விதமாக அவரது பெயரில் அறக்கட்டளை அமைத்து கடந்த 2009ம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் சிறந்த சேவையாற்றியவருக்கு விருதும், சிறந்த நூல்களுக்கு இலக்கிய பரிசுகளும் வழங்கப்படுகிறது.

தமிழில் வெளியாகும் பத்திரிகைகளில் தமிழ் வளர்ச்சிக்காக வாரந்தோறும் தமிழ்மணியும், பெருமளவில் பிறமொழி கலப்பின்றி தலையங்கம் மற்றும் செய்திகளை வெளியிடும் நாளிதழாகவும் தினமணி திகழ்கிறது. அதனை கெளரவப்படுத்திடவும், வைத்தியநாதன் எழுதிய தலையங்கங்களின் தொகுப்பான 'உண்மை தெரிந்தது சொல்வேன்' நூலை பாராட்டும் விதமாகவும் இந்த ஆண்டு கு.சி.ப அறக்கட்டளை விருதுக்கு தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தவிர, சிறந்த நூல்கள் எழுதிய வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ள 16 எழுத்தாளர்களுக்கும் ரொக்கப் பரிசுடன், கேடயமும் அளிக்கப்பட உள்ளன என்றார் அவர்.

- நன்றி தினமணிசிறந்த நூல்கள் எழுதிய எழுத்தாளர்கள் (அடைப்புக்குறிக்குள் நூல்கள் பெயர்) என சிறுகதை பிரிவில் கனடாவை சேர்ந்தஅகில்சிறந்த நூல்கள் எழுதிய எழுத்தாளர்கள் (அடைப்புக்குறிக்குள் நூல்கள் பெயர்) என சிறுகதை பிரிவில் கனடாவை சேர்ந்த அகில் 



சிறந்த நூல்கள் எழுதிய எழுத்தாளர்கள் (அடைப்புக்குறிக்குள் நூல்கள் பெயர்) என சிறுகதை பிரிவில் கனடாவை சேர்ந்த அகில்



0 comments:

Post a Comment

Kindly post a comment.