Tuesday, August 7, 2012

சிலுவையில்அறையப்படும்குழந்தைஇயேசுக்கள் - நந்தினி நாராயணன்





july,2012.jpg


ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 18 குழந்தைகள் சட்ட விரோதமாக கன்னியாகுமரிக்கு அருகி லுள்ள ஒரு தேவாலயத்தில் அடைத்து வைக்கப் பட்டிருந்தது தெரியவந்து,  23.6.2012 அன்று சமூக நலத்   துறையினரால் மீட்கப்பட்டனர். 24ம் தேதி நாளிதழ்களில் இது வந்த செய்தி.

இந்த செய்திக்குப் பின்உள்ள விவரங்களை விசாரித்து அறிந்தபோது, அதிர்ச்சி மேலோங்கியது. ஏற்கனவே, சிறார் நீதிச்சட்டத்தை சரி யாக அமல்படுத்தவில்லை எனும் குற்றச்சாட்டை வைத்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநலவழக்கொன்று தொடுக்கப்பட்டுள் ளதைப் பற்றி மே மாத பாடம் இதழில் சிறப்புக் கட்டுரையாகவெளியிட்டிருந்தோம்.

Poor-children-around-the-world-th-CE-B5-CF-81-C3-B8-E1-B9-BF-CE-B5r-CF-84y-28633746-500-333.jpg

இப்பொழுது, இந்த ஒடிசா மாநிலக்குழந்தை கள் தொடர்பாகவும், சென்னை
உயர்நீதி மன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளோம்.
ஒடிசாவைச்சேர்ந்த ஏழ்மையான பழங்குடி இனப்பெற்றோர்களுக்கு, “குழந்தைகளுக்கு நல்ல கல்வியும் பாதுகாப்பும் அளிக்கப்படும்’’ என்று நம்பிக்கை அளிக்கப்பட்டு  இக்குழந்தைகள் கடத்தி வரப்பட்டதாகத் தெரிய வருகிறது.

ஒடிசாவிலிருந்து முதலில் பெங்களூருக்கும், அங்கிருந்து கோயம்புத்தூர் அருகே உள்ள  இக்குழந்தைகளை, கோயமுத்தூருக்கு அரு கில் உள்ள சிறுமுகை எனும் கிராமத்தில் உள்ள “பிளெஸ்ஸிங் வெல்ஃபேர் டிரஸ்ட்’’ எனும் பதிவு பெறாத ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லத்திலும் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். இதன் இயக்குநர் பாதிரியார் ராஜ்குமார்.

பின்னர் மற்றொரு பாதிரியான கிளாரட் என்பவரிடம் கன்னியாகுமரியில் புதியதாக அனாதை விடுதி ஆரம்பிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  கன்னியாகுமரி பாதிரியார், கோயம்புத்தூர் பாதிரியிடமிருந்து, குழந்தைகளை விலைக்கு வாங்கியிருக்கலாம் என்று சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். புதிதாக அனாதை விடுதி துவக்குவதற்கு, தகுந்த வாடகை இடம் கிடைக் காததால், குழந்தைகள் பாதிரியார் கிளாரட்டின் நண்பரான பாதிரியார் லாரன்ஸ் நடத்தும் தேவலாயத்தில் அடைககப்பட்டிருந்தனர்.

தற்போது பாதிரியார் ராஜ்குமாரும், பாதிரியார் கிளாரெட்டும் காவல் 
துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அவர்கள் பெயரில் வழக்கு 
பதிவு செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குழந்தைகள் ஒடிஷா மாநில
அதிகாரிகளிடம் அவர்கள் குடும்பத்தைக் கண்டுபிடித்துப் பெற்றோர்களுடன்
ஒன்றிணைக்கப்படுவதற்காக அளிக்கப்பட்டுள்ளனர்.

18 குழந்தைகளில் 3 பேர் பெண் குழந்தைகள், 15 பேர் ஆண் குழந்தைகள். குறைந்தது 12 குழந்தைகள்  ஆறு வயதிற்கு குறைந்தவர்கள். தங்களுடைய இருப்பிடமான பழங்குடிச் சூழலிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் இக்குழந்தைகள் பறிக்கப்பட்டு, சற்றும் ஒவ்வாத அந்நியச் சூழலில்
இப்பாதகர்களால், சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்தனர்.
இது மிகவும்கடுமையான குற்றம்.

இக்குழந்தைகள்முதலில்பெங்களூரு, அடுத்தது  சிறுமுகை, பின்னர் கன்னியாகுமரி என்று அழைத்து வரப்பட்டது கல்வியளிக்கும்
நோக்கத்தில் அல்ல. தவறான வேறு நோக்கத்திற்காகவும், இவர்களைக் கண்காட்சிப்  பொருளாக்கி, நன் கொடை வழக்குபவர்களிடமிருந்து பணம் பெறு வதற்காக மட்டும்தான்.!

மறுபடியும் 26.6.2012  அன்று சந்தேகத்தின் பேரில், சிறுமுகை இல்லத்தை காவல்துறை சோதனையிட்டது. மற்றொரு 19 குழந்தைகள் (18 பேர் ஓடிஷாவைச் சேர்ந்த குழந்தைகள், 1 குழந்தை ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தது) அதே ”ப்ளெஸ்ஸிங் வெல்ஃபேர் டிரஸ்ட்’’ லிருந்து அதிகாரிகளால்
மீட்கப்பட்டனர்.

இக்குழந்தைகள் ஒரு ஆண்டாக பள்ளிக்கு அனுப்பப்படாமல், மனிதாபிமானமற்ற சூழலில் அடைத்துவைக்கப்பட்டு இருந்திருக்கின்றனர். 9 மாதங்களுக்கு முன்பே கோவை மாவட்ட காவல் துறையினரால் எச்சரிக்கப்பட்டும், சமூக நலத்துறையினர் செயல்படாமல் இருந்தி ருக்கின்றனர் என்று இப்பொழுது தெரிய வருகிறது.

குழந்தைகள் காக்கப்பட்டாலும், இந்நிகழ்வு பல கவலைக்கிடமான, குழப்பமான
கேள்விகளை எழுப்பியுள்ளது. மேட்டுப் பாளையத்தைச் சேர்ந்த ப்ளெஸ்ஸிங்
டிரஸ்ட் முறையாக பதிவு செய்யப்படாத நிறுவனம்! தொடர்ந்து குழந்தைகள்
கடத்தி வரும் இந்நிறுவனத்தைப் பற்றித் தெரிந்தும் அதிகாரிகள் கண்மூடிகளாக இருந்தது ஏன்? குழந்தைகளுக்கு ”கல்வி மற்றும் மற்ற வசதிகள் அளிக்கப்படும்’’ என்று பொய் வாக்குறுதி போர்வையின் பேரில்  அழைத்துவரப்பட்ட போது, பெற்றோர்களிடமிருந்து செல்லு படியாகாத அஃபிடவிட் உறுதி மொழிப் பத்திரங்கள் பெறப்பட்டிருக்கிறது.

 இதோ ஒரு உதாரணம் :   “என் மகள் பொப்பிஷ் கொமாங்கோ, இயற்கையாகவோ, விபத்தின் காரணமாகவோ இறக்க நேரிட்டால், பிளெஸ்ஸிங் டிரஸ்ட் நிர்வாகமோ, அதன் இயக்குநரோ எந்த விதத்திலும் 
பொறுப்பாளிகள் அல்ல’’ ஆங்கிலத்தில் பெறப்பட்டுள்ள ஆவணத் தின் சாரத்தை, படிப்பறிவில்லாத ஏழைப் பழங்குடிப் பெற்றோர் என்னவென்று புரிந்து கையெழுத்திட்டிருப்பர்? அதுமட்டுமல்ல  ஒவ்வொரு பெற்றோரும், ரூ.5000 வரை ராஜ் குமாருக்கு முன்பணம் அளித்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.

வடகிழக்கு மாநிலங்களிலிருந்து தமிழ்நாட் டிற்கு சட்டவிரோதமாக குழந்தைகள் கடத்தப் படுவதும், இம்மாதிரி அறிக்கைகள் வெளிவ ருவதும் இது முதன்முறை  அல்ல! 21.1.2010 அன்று காவல்துறையினர் ஒரு வீட்டின் அலமாரிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த எலும்பும் தோலுமான 16 குழந்தைகளை ப் பதிவு செய்யப்படாத சென்னையில் உள்ள “ரீச் ஹோம் சில்ரன் ஃபெனண்டேஷன்’’லிருந்து மீட்டனர்.

இதில் ஈடுபட்ட பாதிரிமார்களான ஆல்பர்ட் கருணாகரன் மற்றும் இம்மானுவேல் கைது செய்யப்பட்டனர். இக்குழந்தைகளைப் பல்வேறு விதங்களில் வேலை வாங்கியும்,  பாலியல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த பாதிரிகள் தினமும்
தங்களுக்கு மசாஜ் செய்யச் சொல்லி குழந்தைகளை வற்புறுத்தியுள்ளனர்.  விடுவிக்கப்பட்ட குழந்தைகள்  நலத்துறையினர்மூலமாக குழந்தைகள்மணிப்பூரிலிலுள்ள தத்தம்குடும்பங்களுக்கு
அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னையில் கிடைத்த தகவலின் அடிப் படையில், 24.1.2010 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தின் காரக்கோணம் கிராமத்தில் உள்ள “பெடெஸ்டா ப்ளெஸ்ஸிங் ஹோம்’’ லிருந்து வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமைச் சேர்ந்த 22 குழந்தைகளும்,மணிப்பூரைச் சேர்ந்த 54 குழந்தைகளும் மீட்டெடுக்கப்பட்டனர்.இங்கும், பரிதாபத்துக்குரிய குழந்தைகள், மனிதத்தன்மையற்ற சூழலில், போதிய உணவு அளிக்கப்படாமல் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர்.

தகவலறிந்து, தீடீர் சோதனை யின் மூலம் குழந்தைகள் மீட்கப்பட்டு அஸ் ஸாம் மற்றும் மணிப்பூர் குழந்தை நலவாரி யத்தின் மூலமாக, தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பட்டனர்.இந்நிகழ்வு நடந்து 2  மாதங்களில், 5 முதல் 12 வயதிற்குஉட்பட்ட மணிப்பூரைச் சேர்ந்த 27 குழந்தைகள் மயிலாடுதுறையில் ஒரு வாடகை வீட்டில், பாதிரி ஒருவர் நடத்திவந்த தற்காலிக ஆதவற்ற குழந்தைகள் இல்லத்திலிருந்து மீட் கப்பட்டனர். பின்னர் சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


செப்டம்பர் 2011லிருந்து நவம்பர் 2011க்குள் நேபாளத்தைச் சேர்ந்த 23  குழந்தைகள், அஸ்ஸாம் மற்றும் பீகாரைச் சேர்ந்த 46 குழந்தைகள் என்று என்று மொத்தம் 69 குழந்தைகள், கோயமுத்தூரைச் சேர்ந்த “மைக்கேல் ஜாப் சென்டர்’’ என்ற கிருத்துவ ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர். தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்று நடத்திய
புலனாய்வின் மூலம் அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு இது கொண்டு வரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிறுவனத்தில், நேபாள நாட்டை சேர்ந்த புத்தமதத்தைச் சார்ந்த குழந்தைகளின் பெயர்கள் மாற்றப்பட்டு, மேற்கத்திய கிருத்துவப்பெயர் கள் கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வலைத்தளத்தில் இந்நிறுவனத்தின் விளம்பரத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு எண் கொடுக்கப்பட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்களுக்குப் புரியும் வண்ணம் விவரங்கள் தரப்பட்டிருந்தன.

இவ்விபரத்தில் ஏழை கிருத்துவப் பெற்றோர் களால் கைவிடப்பட்ட குழந்தை என்றோ, மாவோயிஸ்ட் கலவரத்தில் கிருத்துவப்பெற் றோர்களை இழந்த குழந்தை என்றோ குறிப் பிடப்பட்டிருந்தது. ஆனால், புலனாய்வின் போது அனைத்துக் குழந்தைகளுக்கும் நோபாளம் மற்றும் அஸ்ஸாமில் பெற்றோர்கள் இருப் பது தெரிய வந்தது. காட்மண்டுவில் உள்ள தொண்டு நிறுவனத்தில் தங்கி கல்வி கற்பதற்காக அங்குள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஒப்படைத்திருந்தனர்.

மைக்கேல் ஜாப் சென்டர் நடத்தும் மதபோதகர் எல்லா வசதிகளையும் கொண்ட  இல்லத்தையும், பெரிய பள்ளி ஒன்றை யும் நடத்தி வருகிறார். 
குழந்தைகளுக்கு பெற்றோர் இருப்பதும் அவர்கள்   கடத்தி வரப்பட்டதும்
தனக்குத் தெரியாது என்கிறார்.  இங்கு சிறு குழந்தை களாக அழைத்து வரப்பட்டு,  பல ஆண்டுகள் தங்கிப் படித்த இக்குழந்தைகள் வளர்ந்து விட்டிருந்தனர். 

பெற்றோர்களுக்கே அவர்களை அடையாளம் காணச் சிரமப்பட்டனர். குழந்தைகள் தாம் தத்தம் பெற்றோரை அடையாளம் கண்டு, கண்ணீர் மலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.வெளியே தெரிய வந்துள்ள மேற்கூறிய நிகழ்வுகள் கடலுக்குள்ளே இருக்கும் பனிப்பாறையில் ஒரு நுனி மட்டுமே!  பழி பாவங் களுக்கு அஞ்சாத, தன்னலத்திற்காக ஏழ்மையை பயன்படுத்தி மற்றவர்களைச் சுரண்டும், தனிநபர்களும் பசுத்தோல் போர்த்திய புலியான போலி தொண்டு நிறுவனங்களும், பணத்திற் காகவும், மத மாற்றத்திற்காகவும் செய்து வரும் ஒரு கடத்தல் வியாபாரமே இது!

இத்தகைய குழந்தைகள் அவலமான சூழலில் வசிப்பது மட்டுமல்ல, மனரீதி
யாகவும், உடல் ரீதியாகவும்  தவறாகப் பயன் படுத்தப்படுகிறார்கள்!
இக்குழந்தைகள் மனித உறுப்பு வர்த்தகத் திற்கும் யன்படுத்தப்படுகிறார்களோ
என்ற உறுதிப்படுத்த முடியாத ஐயமும் எழுகிறது.

இதில் சமூக விரோதப் போலித் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், இடைத்தரகர்கள், ஏஜெண்டுகள் ஆகியோரின் நெட்வார்க் தமிழ்நாட்டிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் கட்டாயம் இருக்கக்கூடும். இல்லையென்றால் இந்த அளவிற்கு, குழந்தைக் கடத்தல் நிகழ்வு பலமாக வளர்ந் திருக்க முடியாது!

இதுபோன்ற வடகிழக்கு மாநிலக் குழந்தை களின் கடத்தல் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, மற்ற தெற்கு மாநிலங்களான ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் நடந்து வருகிறது. அதிக அளவில் குழந்தைகள் கடத்தப்படுவது வெறும் பாலியல் வியாபாரத்திற்காக மட்டும் அல்ல, மற்ற அடிமை வேலைகளான, வீட்டு வேலை, தொழிலக வேலை, விவசாய வேலை, பிச்சையெடுத்தல், மனித உறுப்பு வர்த்தகம் மற்றும் கட்டாய போலித் திருமணம். இவற் றிற்காகவும்தான்” என்று அமெரிக்காவில் வெளியிடப்பட்ட மனிதக்கடத்தல் ஆய்வு 2012 கூறுகிறது.

சமீபத்தில் “இந்தியா இதுபோன்ற மனிதக்கடத்தல் வியாபாரத்தைத் தடுத்து
நிறுத்த குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுத்திருந்தாலும், குற்றவாளி என்று
நிரூபித்து தண்டனை வழங்கும் சதவீதம் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பது கவலைக்குரியது’’ என்கிறது இந்த ஆய்வு.

ஐக்கிய நாடுகள் சபை உரிமை ஒப்பந்தத்தில் (UNITED NATIONS CONVENTIONS ON THE RIGHT OF A CHILD ) இந்தியா கையொப்பமிட்டுள்ளது. இதன் மூலம், தன்னால் முடிந்த வரைஒவ்வொரு குழந்தையையும் பாதுகாக்க நடவடிக் கை எடுக்கப்படும் என்று இந்தியா உறுதியளித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் நிறைய வழக்குகளில் தீர்ப் பளிக்கும் போது, இவ்வாறு 
குறிப்பிட்டுள்ளது. “விசாரணை அதிகாரிகளும், நீதிமன்றங்களும் சாதாரணமாக ஒருபுறம் காப்பாற்றப்பட்ட குழந் தைகள் மற்றும் பெண்களுக்கும், மறுபுறம்  இருக்கும் தார்மீகமற்ற முறையில் தொடர்ந்து குழந்தைக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருப்போர் இடையிலும் உள்ள வித்தியாசத்தை மனதில் கொண்டு செயல்படுவதில்லை என்பது மிகவும் துரதிஷ்டவசமானது. காப்பாற்றப்பட்ட குழந்தை களுக்கு சமூகத்தில் மறுவாழ்வு அளிப்பதற்கான திட்டங்களும் வழிமுறைகளும் கொண்டு வரத் தவறி விட்டோம்’’

இப்படிப்பட்ட முக்கியமான நீதிமன்ற வழக் குகள், தீர்ப்புகள் வந்த பிறகும் கூட,  குழந்தைக் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது என்றால், அதற்கு, மாவட்ட அளவில் சமூக நலத் துறை அளவில் மற்ற துறைகள் அளவில், மறைமுக ஆதரவு உள்ளதால்தான் என்று நிரூபணம் ஆகின்றது. ப்ளெஸ்ஸிங் டிரஸ்ட் கண்டிப்பாக, மாவட்ட அளவில் உள்ள சமூக நலத் துறையினர் மற்றும் காவல் துறையினரின் ஆசியுடன் தான் தொடர்ந்து அந்நிறுவனத்தை நடத்தி வந்திருப்பர்.

பாதிரிமார்கள்மற்றும்தொண்டு நிறுவனங்கள்என்ற போர்வையில்கண்டிப்பாக சமூக விரோத வலை படர்ந்து இன்னும் எத்தனையோ குழந்தைகள் இவர்கள் பிடியில் இந்தநிமிடமும் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கலாம் என்ற ஐயம் எழுகிறது.தமிழ்நாடு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இடைத் தரகர்களின் பிடி வலுவாக  இருந்தால்தான் இந்நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நடக்கிறது.

 ஜனவரி 2010  இல் பதிவு செய்யப்படாத கன்னியாகுமரியைச் சேர்ந்த அனாதை இல்லத் திலிருந்து அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் குழந் தைகள் மீட்டெடுக்கப்பட்டதையடுத்து, தில்லி யிலும் வடகிழக்கு 
மாநிலத்திலும் உள்ள சில குழந்தைப் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் அமைப்புகள் இதை மத்திய  புலனாய்வுத்துறை (இஆஐ) கையில் எடுத்து புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று அரசிடம்  கோரிக்கை வைத்தனர். அதன்படி, அப்பொழுதே மத்திய உள்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் சமீபத்திய குழந்தைக் கடத்தலைத் தவிர்த்திருக்கலாம்.

சிபிஐ இவ்வாண்டு ஜனவரியில்   மனிதக் கடத்தல் புலனாய்வுத் துறையை
தில்லியில் ஆரம் பித்துள்ளனர்.  இத்துறை, குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தல்  முறைகேடுகள் பற்றிய புலன் விசாரணைகளுக்கு பொறுப்பேற்று செயல் படுகிறது.தமிழ்நாடு மற்றும்வடகிழக்கு மாநிலங்களில்உள்ள சமூக நலத்துறை மற்றும் காவல் துறையினரின் துணையோடு, விரிவான புலன் விசா ரரணை செய்ய வேண்டிய பொறுப்பு, சிபிஐக்கும்  உள்ளது.

சிபிஐ, ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் சமீபத்தில் நடந்த ஒடிஷா குழந்தைகள் கடத்தல் குறித்து ஆய்வு செய்து இடைத் தரகர்களை பற்றியும் இதில் ஈடுபட்டிருந்த மற்றவர்கள் குறித்தும் கண்டுபிடிக்க வேண்டும்.
மத்திய உள்துறை, மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கும், குழந்தைகளைக்
காப்பாற்றுவ தற்கும், இதில் ஈடுபட்டிருப்போரை தண்டிக் கவும் ஏதுவாக விரிவான திட்டங்கள் தீட்டி, அமல்படுத்தி அவற்றை வலுப்படுத்த வேண்டும்.

தமிழக அரசும், தன் சார்பில் இம்மாதிரியான குழந்தைகள் கடத்தலை 
தவிர்ப்பதற்கான துறையை மத்திய அரசின் உதவியுடன் எல்லா மாவட்டங்களிலும் உருவாக்கி, பதிவு செய்யப்படாத இல்லங்களைக் கண்காணிக்க வேண்டும

மேற்கூறிய வாதங்கள்சென்னை உயர்நீதி மன்றத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

 இக்கட்டுரையை, வாசகர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதோ அல்லது அதற்குப் பின்னரோ, இவ்விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறோம

poverty_children_pictures-640x425.png



மெய்யான சமூக நீதிக்குப் பாடுபடும் பாடம் மாத இதழை வலைத்தளத்திலும்

காணலாம். கருத்துக்களையும் கூறலாம்.

WWW.PAADAM.IN     ஆசிரியர் தொடர்பிற்கு ;- editor@paadam.in

நன்றி :- ஆசிரியர், பாடம்,

0 comments:

Post a Comment

Kindly post a comment.