Saturday, August 25, 2012

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்; கவலை உனக்கிலை ஒத்துக்கொள்! -கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.-. மனித தெய்வங்கள் !

http://www.cedtn.org/trustboard1.html


                                                                   
Dr.R.JAYARAMAN  M.Sc. (Chemistry), MBA, Ph.D in Marketing
   
Secretary ,
center for  Entrepreneurship Development 
Tamilnadu





உமாராணியின் கணவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளர். வருவாய் குடும்பம்நடத்தப் போதவில்லை. யோசிக்கின்றார், மனைவி, உமாராணி.10ஆண்டுகளுக்கு முன் CED -யில் கேடரிங் பயிற்சியில் சேர்ந்தார். மாற்றங்கள் பல கண்டார். முதலில் 20 விதவைப் பெண்களைச் சேர்த்துக் கொண்டு கல்யாண வீடுகளில் சமையல் செய்து கொடுத்தார். இதுவே ஓர் சாதனை. மாநாடுகளுக்கும் சமையல் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமளவிற்கு வளர்ச்சி. திருநங்கைகள், எயிட்ஸ் நோயாளிகளுக்கும் வாய்ப்பளித்து வருகின்றார். தொடர்பிற்கு:-98436 87181

CED-யில் கேடரிங் படித்து தொழில் தொடங்க பல்வேறு உத்திகளைக் கற்றுக் கொண்டார். CED-யில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பாடமும் நடத்துகின்றார். CED- யில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் சமையல் பொறுப்பு இவருடையதே. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த இவரை நம்பி, 15 குடும்பங்கள் பிழைக்கின்றன.

பட்டப் படிப்பை முடித்தவர், அனிதா. ச்ய தொழில் துவங்கும் எண்ணம் தோன்றியது CED-யில் சேர்ந்தார்.முறையான பயிற்சி பெற்றார். தற்பொழுது சொந்தமாக பியூட்டி பார்லர் நடத்துகின்றார். இருவ்ருக்கு வேலையும் அளித்துள்ளார்.

மதுரையில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையம் ( Center For Entreprencurship Development ( Tamilnadu )  22 வருடங்களாக பல்லாயிரக்கணக்கான தொழில் முனைவோரை உருவாக்கிவருகின்றது. தமிழக அரசின் தொழில்துறை மற்றும் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான உதவிகளைப் பெற்றுள்ளது. மாநிலம் தழுவிய அறக்கட்டளையாச் செயல்படுகின்றது.

CED-யில் கேடரிங் பயிற்சி, அழகுக் கலை, கணினிப் பயிற்சி,ஆடைகள் வடிவமைத்தல், DTP போன்ற பல்வேறு பயிற்சிகளும் கற்றுத் தரப்படுகின்றன. அனைத்துமே இலவசம் என்பதுதான் இதன் சிறப்பு.  அனைத்து நவீன உபகரணங்களுடனும், அனுபவமுள்ள ஆசிரியர்களாலும் கற்றுத் தரப்படுகின்றது. ம்ற்லும் வருகின்ற பயிற்சியாளர்கள் மனதில் இலவசம் என்பதால் ஏற்படும் தாழ்வு மனப்போக்கு எள்ளவும் ஏற்படுவதில்லை.

கடந்த22 ஆண்டுகளில் 22000 பேருக்குப் பயிற்சி அளித்துள்ளனர். பயிற்சி பெற்றவர்களில் 60 சதவிகிதம் பேர் சுயதொழில் தொடங்கியதுடன், பலருக்கு வேலை வாய்ப்பும் அளித்து வருகின்றனர்.

இத்தனை பெருமைகளுக்கும் அடிநாதமாகத் திகழ்பவர்,  முனைவர், ஜெயராமன். இவர் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், மேலாண்மைத் துறையில் துறைத் தலைவராகவும் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவர்

இந்தியாவிலேயே தொழில் முனைவு மேம்பாட்டிற்கென சிறப்புத் துறை, மதுரைகாமராஜர் பல்கலைக் கழகத்தில் இவர் காலத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றிற்கும் மேலாக  தொழில் முனைவு  இரு நாள் விழிப்புணர்ச்சி முகாம்கள கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு  நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொருவருடமும் இதன் மூலம் 2000 மாணாக்கர்கள் பயனைந்து வருகின்றனர். ஒவ்வொரு கல்லூரியிலும் தொழில் முனைவு மேம்பாட்டுப் பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக,கல்லூரி ஆசிரியர்களுக்கும் இரு வாரப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இன்றளவும்600 ஆசிரியர்கள் பயிற்சிபெற்றுள்ளனர்.

திருநங்கைகள், பாலியல் தொழில் ஈடுபட்டோர் CED-யில் பயிற்சி பெற்றோரில் அடக்கம். அவர்களும் திருந்தி உழைத்துப் பிழக்கின்றனர்.பயன் பெற்றோர் பட்டியலைச் சொல்லப்போனால் விரியும் என்பதால், மாதிரிக்கு மூவர் பேட்டிகள் கட்டுரையின் துவக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கித் திருப்பித் தராதோர் ஏராளம் உண்டு. தவணை முறையைச் செலுத்தாத நடுத்தர மக்களின் வீடுகள் மட்டும் ஏலத்திற்கு வந்தவண்ணமுள்ளன. நாளிதழ்களைப் படிப்போருக்கு நன்கு தெரியும்..

 இத்தகைய ச்ய தொழில் முனைவோருக்குத் தாரளாமாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கடன் கொடுத்தால் பலர் பயன்பெற்றுக் கம்பீரமாக வாழ முடியும்.

வங்கிகளுக்குள் சென்றால்  எந்தெந்தத் தொழில் தொடங்க எவ்வளவு கடன் கிடக்கும், வட்டி எவ்வளவு, என்ற விளம்பரப் பலகைகள் வண்ண மயத்தில் காட்சி அளிக்கும். ஆனால்,  சுய வணிகத்தில் ஈடுபட்டு முன்னேறத் துடிக்கும் இத்தகைய இளையோர் எத்தனை பேருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விபரப் பட்டியலைக் காணோமே. ஏன்?

கடன் பெற்றோர் எல்லோருமே பணம் படைத்தவர்கள் என்பதாலா?

நன்றி-புதிய தலைமுறை, 30,அக்டோபர்,2012


Centre for Entrepreneurship Development (Tamil Nadu)

No.54, Visuvasapuri 1st Street, Gnanaolipuram,
Madurai – 625 016. Tamil Nadu. India
Phone Nos  : 0452 – 2603562 / 2603563
Fax No        : 0452 – 2603574
Email          : info@cedtn.org 
 

                                                
          



     
             Dr.R.JAYARAMAN,     

Mobile : 094430 69056


Phone No.: 0452 2603861
 (O) 0452 4355343 (R)



 “ஊருக்கு உழைத்திடல் யோகம் “ மகாகவி சுப்பிரமணிய பாரதியார்







0 comments:

Post a Comment

Kindly post a comment.