Saturday, August 25, 2012

மதராஸ் ஓர் குட்டி நகரமல்ல - கிளின் பார்லோ ( 1921 )

மதராஸின் புகழ் நம்பமுடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது.மதராஸின் கதை, மனதை லயிக்கவைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில் அமைந்துள்ளது.

 - கிளின் பார்லோ


                                       விமர்சனமா? புத்தகச் சுருக்கமா? புத்தகத்தின் பெயர் :  “சென்னையின் கதை “ 
முகப்போவியமாகக் காட்டப்பட்டுள்ள டிராம் வண்டிப் ப்யணம்.                
சந்தியா பதிப்பகம் தேர்ந்தெடுத்து முதற் பதிப்பாக 2010-ல்.வெளியிட்டுள்ளது.  
கிளின் பார்லோ 1921-ல் ஆங்கிலத்தில் எழுதிய நூலை, ப்ரியாராஜ் தமிழாக்கம் 
77, 53வது தெரு, 9-வது அவென்யூ, அசோக் நகர், சென்னை, 600 083
அச்சு அளவு :11 புள்ளி. பக்.148. விலை ரூ.80/-
044: 24906079

வங்கக் கடலின் கொரமண்டல் கடற்கரை ( 1921 )

”கொரமண்டலக் கடற்கரை” என்று பெயர்பெற்ற வங்கக் கடலின் கடற்கரையோரம் இருந்த சிறு கிராமமே மதராஸ் பட்டணம் என்று அழைக்கப்பட்டது. வேப்பேரி, எழும்பூர், திருவல்லிக்கேணி ஆகிய சிறு கிராமங்களும் இருந்தன. பார்த்தசாரதி கோவிலும் இருந்தது.

மீன்பிடி தொழிliல் ஈடுபட்டிருந்த மீனவக் குடும்பங்கள் மயிலாப்பூரச் சுற்றிலும் வசித்தனர். தேவாலயங்கள் நிறைந்த மயிலைப் பகுதியின் ஆதிக்கம்  போர்ச்சுக்கீசியர்கள் வசம் இருந்தது. மதராஸ் பட்டணத்தின் கதை கிட்டத்தட்ட 1639-ல் துவங்குகின்றது. அதற்குச் சுமார் 50 வருடங்களுக்கு முன்ன்ரே, போர்ச்சுக்கீசிய வைசிராய்க்கள் கோவாவைத் தலைமை இடமாகக் கொண்டு கொச்சி, கள்ளிக் கோட்டை,மயிலாப்பூர் போன்ற துறைமுகக் கிராமங்களை ஆண்டு வந்தனர்.

மயிலாப்பூருக்கு 25 மைகள் தொலைவில் இருந்த புலிகட் டச்சுக்காரர்கள் வசமானது. அவர்களது தலைமையகம், ஹாலந்து.

1600-ல்  பிரிட்டிஷ்காரர்கள் கிழக்கிந்தியக் கும்பெனியை வணிகம் செய்யும் நோக்குடன் புதிதாய்த் துவக்கினர். ஒரு மாமங்கத்திற்குப்பின் இவ்ர்கள் வந்திறங்கிய இடம் மசூலிப் பட்டணம்.(1611 ) அவர்களது வணிகம் நெல்லூர் (ARMAGAUM ) வரை விரிந்தது.   இப்பகுதியின் பிரதிநிதி, பிரான்ஸிஸ் டே (FRANCIS DAY). வணிக விரிவாக்கத்திற்குத் தகுதியான இடத்தைத் தேர்ந்தெடுத்திட  தெற்கு நோக்கிப் பயணித்தான். டே யணித்த கப்பல் டச்சுக்காரர்கள் வசமிருந்த புலிக்கட்டையும் கடந்து மைலாப்பூர் வந்து சேர்ந்தது. திருவல்லிக்கேணி ஆறும் (கூவமும்) சங்கச்மிக்கும் இடம் கும்பெனியாரின் வியாபாரத்திற்கு உகந்ததெனக் கருதினான். 

கூவம் மணந்த காலம் அது. (1921 )அந்த இடம் பூந்தமல்லியை ஆண்ட நாயகர்களுக்குச் சொந்தமானதாக இருந்தது. அவர்களை அணுகினான்.  மயிலாப்பூரில் வணிகம் செய்து வந்த போர்ச்சுக்கீசியர்களும் பலமான சிபாரிசு செய்தனர். இருப்பினும்,  நாயக்கர் தன்னை ஆண்டு வந்த சந்திரகிரி அரசரின் அனுமதியையும் பெற்றுத் தரவேண்டிய கட்டாயத்தி இருந்தார். அரசரும் சம்மதித்தார். சந்திரகிரி ராஜாவுக்கும், பிரான்ஸிஸ் டேக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது (1639). ஆங்கிலேயர் ஆட்சி, சந்திரகிரியில் கருவாகி, மதராஸ் பட்டணத்தில் உருவாகி பின்னாளில் இந்திய மண்ணில் ஜனித்தது.

வைக்கோல் வேந்த கூரை வீடுகளில் ஆங்கிலேயர்கள் :-

பிரான்ஸின் டே, மற்ரும் எடுபிடிகள் உள்ளிட்ட 25 பேர்  மதராஸ் பட்டணத்தில் குடியேறினர்.மூங்ல்களையும், பனை ஓலைகளையும் கொண்ட குடிசைகள் ஆங்கிலேயர்கள் வசிப்பதற்காகக் கட்டப்பட்டன. .இத்தாலிய மருத்துவர், “மனுக்கி” ( MANUCCI) பழைய க்ரோனிக்கல் (chronical) பத்திரிக்கையில் இதனை எழுதியுள்ளார்.( 1686) அந்தக் காலத்திலிருந்தே இவ்விடம் “ செயிண்ட் ஜார்ஜ் கோட்டை “ என்றே அழக்கப்பட்டது  மனுக்கியின்  துணைவியார் ஓர் யுரேசிய விதவை. அவர் தங்கியிருந்த தோட்டம் ”மினுக்கி தோட்டம்’ என்றே அழக்கப்பட்டது. அந்தத் தோட்டத்திற்கு நடுவில் நீரோடை இருந்தது. அது பின்னாளில் டிராம் வண்டி ஓடும் இரும்புத் தடமாய் மாற்ற்ப்பட்டது. 

கோல்கொண்டாவை ஆண்ட முகம்மதிய மன்னர், கும்பெனியின் எதிரிகள் அனைவரையும் ஐக்கியப்படுத்தி இக்கோட்டை மீது படை எடுத்து இருமுறை தோல்வியுற்ற தகவலும் உண்டு. பார்த்த்சாரதி கோவிலின் மதில் சுவர்களில் பீரங்கி பொருத்தப்பட்ட நிகழ்வும் உண்டு. மூன்று மாத கால சண்டையிட்டும் வெற்ரி பெற முடியாததால், நவாப் தாவூத்கான் போரை நிறுத்த ஒற் விலை பேசினான். கும்பனியின் குறிப்பேட்டில் “முற்றுகை விலக்கப்பட்டது “ என்ற ஈரு வார்த்தகளும் உள்ளது. 

1746-ல் எற்பட்ட சண்டையில் ஆங்கிலேயர் தோற்றனர். ஆங்கிலேய கும்பெனி வியாபாரிகள் கைது செய்யப்பட்டு புதுவைக்கு அனுப்பப்பட்டனர். கோட்டையில் பிரெஞ்சுக்கொடி பறந்தது. பிரான்சுக்கும் இங்க்கிலாந்துக்கும் நடந்த போரின் இறுதியில் ஏற்பட்ட, ஐக்ஸ்-லா-சாப்பல் உடன்பாட்டால்  மீண்டும் கோட்டை ஆங்கிலேயர் வசமானது. (1748)

துவக்கத்தில் கோட்டை கடற்கரைக்கு இணையாக நீளவாட்டில் 198 கஜங்களும், அகலவாட்டில் 1100 கஜங்களும் கொண்டிருந்தன. அதச் சுற்றி பிற்காலத்தில் ஏற்பட்ட ஆங்கிலக் காலனிகளை இணத்து கோட்டை உருவாக்கப்பட்டது.   .இக்காலக்கட்டத்தில்தான், ராபர்ட் கிளைவ், 19-வது வயதில் கும்பெனியின் எழுத்தராக மதராஸ் பட்டணம் வந்தடைந்தார்.ன் அவரது சம்பளம்  ஆண்டுக்கு ஐந்து பவுண்டுகள் மட்டுமே. 8 ஆண்டுகளுக்குப்பின் சக எழுத்தரின் சகோதரியை மணம் புரிந்து கொண்டார்.


செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்கோட்டை போன்றும், அதச் சுற்ரி உருவான காலனி வெளிக்கோட்டை போன்றும் அமைந்தது. பின்னாளில் உட்புறச் சுவர்கள் அழிக்கப் பட்டன. வெளிப்புற மதிற்சுவர்கள் பல முறை தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்பட்டன. கோட்டையைச் சுற்றி உள்ள ஆழமான அகழியைத் தோண்ட பல ஆண்டுகள் தேவைப் பட்டிருக்கும்.
இங்கிலாந்தை இரண்டாம் ஜேம்ஸ் ஆண்டபோது, எலிஹூ யேல் மதராஸின் கவர்னராகப் பதவி ஏற்றுள்ளார்.

மதராஸ் பட்டணத்தின் வளர்ச்சி;-

கோட்டை வந்தது. கூட்டமும் சேர்ந்தது. அப்போதைய மொத்த ஜனத்தொகை 15000 -ஐ எட்டியது. இங்கிலாந்திலிருந்தும்  பணி நிமித்தம் வருவோர் எண்னிக்கையும் கூடியது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. ராணுவமும் தேவைப்பட்டது. வெள்லையர் நகரம், கருப்பர் நகரம் என இரு பிரிவுகளாயின. கருப்பர் நகரத்தில் பெரும்பாலும் இருந்தவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கலே. இவர்களை ஜெண்டூஸ் ( GENTOOS )  என்ற பெயரில் அழைத்ததாக ஆவணங்கள் கூறுகின்றன.

ஆங்கிலேயர் வருவதற்கு முன்னரே, ஆர்மேனியர்கள் மதராஸுக்கு வந்து விட்டனர். ஆர்மேனியர் தெரு ஒரு சான்று. இவர்களுக்கும் மண்னின் மைந்தர்களுக்கும் இருந்த நெருக்கத்தை பிரிட்டிஷார் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பீட்டர் உஸ்கான் என்ற ஆர்மேனியர் வியாபார உலகில் பெரும்புள்ளி. அவர் ரோமன் கத்தோலிக்கர். நாற்பது வருடங்கள் வளமாய் வாழ்ந்து, 70வது வயதில் காலமானவர். அடையார் நடுவில் இருக்கும், ”மர்மலாங்” (MARMALANG ) பாலத்தைக் கட்டிய பெருமை இவரையே சாரும். அப்பாலத்தில் உள்ள தூணில் இவர் பெயர் இன்றும் உள்ளது.பாலத்தைப் பராமரித்திடப் பணமும் ஒதுக்கியிருந்தார். செயிண்ட் தாமஸ் மலைப் படிக்கட்டுக்களை இவரே செப்பனிட்டார். கத்தோலிக்கர்களின் தேவாலயம் பிற்காலத்தில் ஆங்கிலிகன் தேவாலயத்திற்குச் சொந்தமானது.புனித மத்தியாஸ் கல்லறை ( St.MATHIYAS) இன்னமும் உள்ளது.

தங்கச் சாலையில் யூதர்களின் மயானத்தின் ஒரு பகுதி இன்றும் உள்ளது. ய்ய்தர்கள் இஙிலாந்து மற்ரும் போர்ச்சுக்கீசிய நாட்டைச் சேர்ந்தவர்கள். வைர வியாபாரிகளாகவும், தனவந்தர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் திகழ்ந்தனர். கோல்கொண்டா வைரத்தை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தனர். பதிலுக்கு வெள்ளியையும் இறக்குமதி செய்தனர். பவளக்காரத் தெரு இன்றும் அத்தாட்சியாய் உள்ளது. கோல்கொண்டா சுரங்கங்கள் பொலிவை இழந்தபோது, யூதர்களும் காணாமற் போயினர். லேவாதேவியில் யூதர்கள் வல்லவர்கள். ஆனால் மதராஸில் ஏனோ எடுபடவில்லை. நாட்டுக் கோட்டைச் செஃப்ட்டியார்களின் திறமைக்குப் பின்னே யூதர்கள் திறமை எடுபடவில்லை. நெருக்கடியான தஙச்சாலையில் இன்று உள்ள தர்களின் சின்ன மயானத்தில் ஒரு அற்புத நிகழ்வு. கல்லறையில் பதித்த பெயர்க்கல் அங்கிருந்த மரத்தின் அசுர வளர்ச்சியினால் தரையிலிருந்து மேல் நோக்கிக் கிளையுடன் சென்ற நிகழ்ச்சி விசித்திரமானது.தற்போதைய மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஹிப்ரூக்களின் இந்த மயானம் இன்னமும் இங்கு வாழ்ந்திருந்த மனிதர்களின் கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

கும்பெனியின் ஊழியர்களாக இருந்த மகம்மதியர் / முஸ்லீம்கள் /முஸல்மான் ஆகியோர் “மூர்ஸ்” என்றே அழைக்கப்பட்டனர். மூர்ஸ் தெருவே இதற்குச் சாட்சி. எழும்பூர், திருவல்லிக்கேணி முதலான பகுதிகளில் இந்துக்களே அதிகம் வாழ்ந்தனர். கருப்பர்கள் வாழ்ந்த மூர்ஸ் பகுதியில் இருந்த ஒரே ஒரு மசூதியே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. 50 ஆண்டுகளுக்குப்பின் முத்தியால் பெட்டையில் மற்றொரு மசூதி உருவானது. கர்நாடக முஸ்லீம் மன்னர்கள் அடிக்கடி போர் தொடுத்துத் தொல்லைகள் தந்ததால், முஸ்லீம்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளேயே பிரிட்டிஷர் வைத்திருந்தனர். ஆயினும், தற்போது சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ராயப்பேட்டை பகுதிகளில் முஸ்லீம்கள் அதிகம் காணப்படுகின்றனர். ஆர்க்காட்டை ஆண்ட வாலாஜா நவாப் ஆங்கிலேயர்களுடன் நட்பாக இருந்ததே இதற்குக் காரணமாயிற்று. சைனா பஜார் இருந்திருக்கின்றது. ஆனாலும் எல்லா வியாபாரிகளும் சீனர்கள் அல்லர். தேயிலையும், பீங்கான் பொருட்களும் வர்த்தகப் பொருட்களாக இருந்தன்.கும்பெனி வியாபாரம் பெரும்பாலும் துணிகளைச் சார்ந்தே இருந்தது. எலிஹு யேல் என்ற கவர்னர்50 நெசவாளக் குடும்பங்களைக் குடியேறச் செதார். அதுவே “நைனியப்ப நாயக்கன்” தெரு. ஜார்ஜ் டவுனுடன் அதுவும் நெருக்கடி மிக்கதாயிற்று. காலடிப் பேட்டையில் ( COLLET ) நெசவாளர்களைக் குடியேற்ற வைத்த கவர்னர் தன் பெயரையே அதற்குச் சூட்டினார்.வடக்கே திருவட்டூர் அருகே இன்னமும் உள்ளது. அப்போது நெசவாளர் நகர் என்று அழைக்கப்பட்டதே இன்றைய சிந்தாதிரிப்பேட்டையாகும். வாஷர்மென்பெட் என்ற வண்னாரப்பேட்டையும் இவர்கள் உருவாக்கிய இடமே.

1749- பிரெஞ்சுப்படைகளும் ஆங்கிலேயரும் தென்னிந்தியாவில் மோதின.

1752-பிரெஞ்சுப்படைகள் தோற்கடிக்கப்பட்டன.

1756- ஐரோப்பாவில் பிரெஞ்சுப்படகளும்,ஆங்கிலேயர்களும் ஏழாண்டுக்காலம்
            யுத்தம் புரிந்தனர்.

1758- இந்தியாவில் கெள்ட்லாலி மதராஸை இரண்டு மாதகாலம் முற்றுகை
            இட்டான்.

1760- வந்தவாசியில் பிரெஞ்சுப்படைகள் ஆங்கிலேயரிடம் தோற்றன.

1761- பாண்டிச்சேரியை ஆங்கிலேயர் கைப்பற்றினர்.

1763. பாரிஸ் ஒப்பந்தப்படி புதுவை பிரென்ஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமானது.

          ஆனால்,, மீண்டும் புதுவை 1786 மற்றும் 1803-ல் ஆங்கிலேயர் வசமானது.

1781- 1760-ல் மைசூர் சுல்தானாகத் தன்னைப் பிரகடனப் படுத்திக்கொண்ட
         
            ஹைதர் அளி மரணமடைந்தான்.

1799-  ஹைதரின் மகன் திப்புசுல்தான் ஸ்ரீரங்கப்பட்டினப்போரில்
         
            கொல்லப்பட்டான்.
         
           
             மதராசைப்  பலமுறை முற்றூகை இட்டுத் தொல்லை தந்த ஹைதர்
             
            அலி, அவரது மகன் திப்புசுல்தான் மரணம் பிரிட்டிஷாருக்குப் பெரும்
             
             நிம்மதியைத் தந்தது..


1801- மதராஸில் உச்சநீதி மன்றத்தின் நீதித்துறை நிறுவப்பட்டது.

1855- வாரிசு அற்ற கர்னாடக அரசு கும்பெனியாருக்கு ஒரு குறையாகவே 
            
           இருந்தது.

 1836- மதராஸ் ரயில்வே திறக்கப்பட்டது.

 1857- சிப்பாய்க் கலகம்

 1861- உயர்நீதிமன்றம் நிறுவப்பட்டது.

மதராஸின் இன்றைய மாபெரும் வளர்ச்சிக்கு பிரிட்டிஷ்காரர்களின் சக்தி, உழைப்பு மற்றும் விடாமுயற்சி மட்டும் காரணமல்ல. வந்தாரை வரவேற்று வாழவைக்கும் இந்தியர்களின் பண்பாடும் காரணமாகும். ஆங்காங்கே பிரிந்து கிடந்த சிற்றரசர்களின் அட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்களின் புதிய இந்திய சாம்ராஜ்ஜியத்திற்கு இங்குதான் அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. இதன் சரித்திரம் ரத்தம் சிந்தும் யுத்த களங்களால் உருவானது என்பது மட்டும் உண்மை.

இந்தப் பதிவில் சுவையெனப்பட்ட செய்திகளை மட்டும் முதலில் விரிவாகக் கொடுக்கப்பட்டது. மேலும் மதங்கள், இனங்கள், பிரித்தாளும் சூழ்ச்சி, எட்டப்பர்களின் வேலை என பல்வேறு தகவல்கள் படிப்போர் ஐயங்களுக்கு விடைகாண இந்நூல் கைவிளக்காக அமையும்.

http://rssairam.blogspot.in/2012/08/blog-post_528.html

சென்னை வறட்சியைப் போக்க வ்ட்டக்கால்வாய்த் திட்டம்

-குமரி அனந்தன் கட்டுரையும், வரைபடமும் காண்க.0 comments:

Post a Comment

Kindly post a comment.