Friday, August 24, 2012

எலி வளையானாலும் தனி வளை, செலவு ரூ.17,500/- தான்!






About Vijay Govindarajan

One of the world’s most brilliant minds in strategy and innovation, his provocative teaching style has made Govindarajan into one of the most popular professors at the Tuck School of Business.


http://blogs.hbr.org/govindarajan/2010/08/the-300-house-a-hands-on-lab-f.html

The $300 House: A Hands-On Lab for Reverse Innovation? 


புதிய தலைமுறை தொலக்காட்சிதான் தெரியவில்லை, எங்கள் வீடுகளில் ! ஆனால் சந்தா செலுத்தியிருப்பதால் புதிய தலைமுறை தவறாமல் வருகின்றது. மலர் 3/ இதழ் 49/ 30-08-2012 இதழ் ஓர் புதிய செய்தியைக் கொண்டு வந்தது.

செஙகல், சிமெண்ட், மணல், ஆகியவற்றைத் தவிர்த்து, உள்ளூரிலேயே  மலிவாகக் கிடைக்கும் களிமண், மூங்கில், தேங்காய் நார் ஆகியவற்றைக் கொண்டு, மிக மலிவான செலவில் வீடு கட்டும் தொழில் நுட்பத்தைக் கண்டறிந்துள்ளார், விஜய் கோவிந்தராஜ்
.
தமிழ்நாட்டில் பிறந்தவர். மேனேஜ்மெண்ட் தொடர்பான பல புத்தகங்களை எழுதியுள்ளார்.சர்வதேசத் தொழில் குறித்தும், ரிவர்ஸ் இன்னோவேஷன் என்னும் கருத்தாக்கம் தொடர்பான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றார்.

இந்தியா, எத்தியோப்பியா, ஹெய்த்தி ஆகிய மூன்று நாடுகளிலும் ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. இந்தியாவில் ஜார்கண்ட்,பீஹார், உத்தரப் பிரதேசம் என வெவ்வேறு மாநிலங்களில் ஆய்வுகள் தொடர்ந்தன.

இறுதியில் 500 சதுர அடியில் 300-க்கும் மேற்பட்ட மாதிரி வீடுகளை உருவாக்கி, அதில் 16 சிறந்த மாடல்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.


எலி வளையானாலும் தனி வளை என்று ஒரு பழமொழி உண்டு. வெளிநாடுகளில் ஒண்டுக் குடித்தனங்களில் வாழ நேர்ந்த குடும்பத்தினருக்குத்தான் இதன் உண்மை புரியும். ஒரே வீடு. இரண்டு மூன்று குடும்பங்கள். ஒரே அடுப்பு. தனித் தனியாகச் சமைத்துக் கொள்ளும் நிர்ப்பந்தம். வெஜ்/நான்வெஜ்  எல்லாம் பார்க்க முடியாது. மூக்கைப் பொத்திக் கொள்ள வேண்டியதுதான். இவை எல்லாம் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு வெளிநாடுகளில் வசித்த/ வசித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தினரிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட உண்மைகள்தான்.

மேலும் தற்காலத்தில் குடும்பம் என்பது கணவன், மனைவி, ஒரு குழந்தை என்ற அளவில் சுருங்கிப் போனது. பெற்றோருக்குத்தான் முதியோர் இல்லங்கள் இருக்கின்றனவே. அநாதைகள் என்று சொல்லிக் கூடச் சிலர் வீட்டை விட்டு வெளியேறி முதியோர் இல்லங்களுக்குச் சென்றுவிடுவதாகவும் விடுவதாகவும் கேள்வி. எனவே, 500 சதுர அடி என்பதே அதிகம்தான். மேலும் ஆசைப்பட்டு பெருந்தொகைக்குக் கடனில்  அடுக்கு மாடிக் குடியிருப்புக்களில் ஒன்று / இரண்டு / மூன்று பெட் ரூம் உள்ள பிளாட்டுகளை வாங்கிவிட்டுப் படும் அல்லல்களைவிட விட இது மேலானதேயாகும்.

இரு இணையதள முகவரிகளுக்குள் சென்றால் மேலும் சில தகவல்கள் ஆங்கிலத்தில் கிடைக்கும். அடுத்தபடியாக, கண்டுபிடித்த விஜய் கோவிந்தராஜ், சென்னைக்கு வருகின்றார். இண்டோ-கெர்மன் அர்பன் மேளா என்னும் நிகழ்வில் அந்த வீடுகளின் மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. அவரை நேரில் சந்தித்து ஐயப்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளலாம். நால்லதோர் வாய்ப்பை நழுவ விடலாமோ ?


0 comments:

Post a Comment

Kindly post a comment.