Friday, August 17, 2012

புதுச்சேரி , போகிக் கொண்டாட்டத்தில் கொளுத்தப்ப்ட்ட யோகி.வள்ளலாரின் கதை ? -விபரீதக் கற்பனை எழுத்தாளர்கள் ?

                   

பரதேசி நூலின் பெயர் :- எழுதியோர் ;-ரமெஷ்-பிரேம்

                                               
 பரதேசி,  நத்தைக் கதை, வியாசகுலம், மகாமுனிமூன்று பெர்னார்கள்                 
                   



முதல் நான்கும் புதிய சிந்தனைகளின் வெளிப்பாடாகவும், பழைய வரலாற்றுக்களின் சில அம்சங்களைப் புலப்படுத்துவனவாகவும் உள்ளன. மனதாறப் பாராட்டலாம்.

ஆனால் நான்காவதாக உள்ள , மூன்று பெனார்கள் ( பெனார்-பெர்னாட்ஸ் )

50 ஆண்டுகாலமாக ஒரு சாமியார்  தனியறையில் வக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட வருகின்றது. மனவி கூட, கணவனின் பத்தியக் காரத்தனத்தைச் சகிக்கமுடியாமல் பிரிந்து விடுகின்றாள்.திடீரென்று  கணவன் இறந்து போகிறான். வீட்டிற்கு வரும் மனவி கணவனின் நண்பரது உதவியால் அந்தச் சாமியாரின் பிணத்தை எப்படி CLOSE 
செய்கிறார்கள் என்பதுதான் கதை, சாமியார் யார் என்பது தலைப்பிலேயே
புரிந்திருக்கும்.

கதை எழுதிய இரட்டையர்களை விழுப்புரத்தில் சந்த்தித்து எப்படி இதுபோன்றேல்லாம் சிந்திக்க முடிகின்றது என வினவியபோது, புன்னகைகளே விடையாயின. ( சிரித்தது இரட்டையர்கள் அல்லவா? )

அதற்கும் முன்பாக,  விசாகை திவாகர் எழுதிய வரலாற்றுப் புதினம், எஸ்.எம்.ஸ்.எம்டன் 22-09-2014,

காவனூர், சோலை சுந்தரபெருமாள் (ஒற்றேழுத்து விடுப்ட்டமைக்கு அவரது பள்ளிச் சான்றிதழைப் பூர்த்தி செய்தவரே மூல காரணம் )
எழுதிய தாண்டவபுரம்

ஆகியவற்றைப்பற்றியும் சிறிது காண்போம். தாண்டவபுரம் ஆதரவு விமர்சனம் விரைவில் வரும்.

எஸ்.எம்.எஸ். எம்டன் கப்பலில் பயணித்தோர் பட்டியலில் ( விடுதலை வீரர், தீரன் ) டாக்டர் செண்பகராமன் பிள்ளை (சம்பகராம பிள்ளை அவர் குறிப்பிட்டுள்ளது ) என்றொருவர் பெயர் இல்லை. ஏதோ ஒரு காரணத்தால் 22, டெப்டம்பர்,1914 இரவில் சென்னை நகரின் மீது130 குண்டுகளை மட்டும்  எண்ணெய் டேங்குகள் மீது வீசி விட்டு உடனே திரும்பி விட்டது.என்று அதிதீவிர ஆய்வுக்குப்பின் விசாகப்பட்டினத்திலிருந்து  கொண்டு,திவாகர்
என்பவர்,வரலாற்றுப் புதினமாக எழுதியுள்ளார்ர்.

S M S emdan 22-09-1914 என்ற பெயரிலேயே, பழனியப்பா பிரதர்ஸ்,  சென்னை-14 முதற்பதிப்பாக  2008-ல் முதற் பதிப்பாகக் கொண்டு வந்தது, 2008-ல்!ஆய்வு செய்து எழுதியவர் திவாகர். நரசையாவின் அணிந்துரையும் திவாகரின் முன்னுரையும் எழுதப்பட்டுள்ளது.380 ப்க். 200ரூபாய்.வரலாற்று நவீனம் என்றால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பது விதி போலும்.

வாசகர்கள்  நம்பிக்கை வைத்துள்ள வல்லமையும் பாராட்டி விமர்சனம் செய்து தனது VALLAMAI .COM- ல் பிரசுரித்துள்ளது. வரலாற்று நாவலாக மட்டும் பார்த்து விட்டார்கள். தேசத்தைப் பார்க்கவில்லை.நேசத்தை மட்டுமே பார்த்திருக்கின்றது.


அண்மையில்,  சோலைசுந்தரபெருமாள் , தாண்டவபுரம் என்ற நூலை எழுதினார்.  குருமார்கள், மடையான்களும்  காடைகளும், மருதநிலமும் பட்டாம் பூச்சிகளும், நஞ்சை மனிதர்கள் போன்ற வரிசையில் தாண்டவபுரமும் வந்துள்ளது.. மண் வாசனையோடு அஙுகு வாழும் , வாழ்ந்த மனிதர்களின் அடிமை வாழ்வை / ஆரியரின் ஆதிக்க மனோபாவத்தைச்  சுட்டிக்காட்டியே அவரது படைப்பாக்கப்பணி தொடர்கின்றது.

 தஞ்சை மண்ணின் கீழ்க் கோடியில் உள்ள  சீர்காழி சத்ர் வேதி மஙளத்தில் துவங்கு கின்றது தாண்டவபுரம். ஆச்சாள்புரத்தில் வெண்ணீற்றூ உமை நங்கையார் சகிதமாக இருக்கும் சிலோக்கத்தியாகேசர் சிவ ஆலயம் உள்ளது. கருவறையும் சுற்று மதிலும் சிறிய கோபுரமும் உண்டு.  இன்று பல நிலைகளிலும் விரிவாக்கம் பெற்றுள்ளது. பழைய வாயிலின் தென்புறமாக திருஞான சம்பந்தரும், அவரை மணக்க இருந்த சொக்கியாரின் உருவச் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. அவ்விடமே ஆளுடையபிள்ளையை அடக்கம் செய்யப்பட்ட இடமாக அனுமானிக்க முடியும். மிகவும் பிர்காலத்தில் அம்மேனிகள் வழிபாட்டுக்கு உட்பட்டிருக்கலாம்.

ஆளுடைய பிள்ளையின்  ( திருஞான சம்பந்தர் ) சேத்திராடப் பயணம் பெருவாரியான மக்களை சிவ மதத்தின் மீதும், தமிழ் மீதும் திரட்டியிருக்கின்றது.சிவ மதம், பிராமண மதத்தைப் பின் தள்ளியிருக்கின்றது. காலப்போக்கில் பிராண மதம் , சிவத்தை உள்வாங்கிவிட்டது. இதைப் பொறுக்க மாட்டாதவர்கள் ஆளுடையபிள்ளையை ( திருஞான சம்பந்தர் ) அழித்துத் தீயிட்டு இருக்கின்றார்கள். தீயில் வெந்தவர்களைக் குவித்து கோவிலுக்குத் தென்புறம் அடக்கம் செய்து நினைவிடமாக்கப் பட்டிருக்கின்றது என்பதே இந்நாவலின் அடிநாதம்.

தானம் பெற்ற 108 பிராமண குலங்களுக்கு ஆதாரம் உண்டு. அவர்கள் மட்டுமே யாகம் முதலானவை செய்யவும் உரிமை உடையவர்கள். அந்த 108 குலங்களில், கணியன், சாண்டிலியன் ஆகிய இரண்டு கோத்திரங்கள் வரவில்லை.தண்டப்பாட்டம் செப்பேடு, சாசனதானப் பட்டியல்களிலும்,  சிவமாரப் பல்லவன் காலத்து “ஹல்லேகெரெ” செப்பேடுகள் மூலமும் , திருஞான சம்பந்தர்  கவுணிகக் கோத்திரமே என்று நிரூபிக்கிறார். இது பிராமண வழிக் கோத்திரத்தில் தொடர்புடையது அல்ல. இந்த மண்ணில் உருவான பூர்விகத் தன்மை கொண்ட சிவாச்சாரிகளின் கோத்திரர்.என்கிறார்.. எனவே இவர்களுக்கு வேள்வி செய்யும்  உரிமை இல்லை.

அதுவும் வரலாற்று நவீனம்தான். அவரது கண்ணோட்டத்தில் தாண்டவபுரத்தைப் படைத்துள்ளார். அதில் என்ன தவறு? ஆனால், சோலை சுந்தரபெருமாளின் தாண்டவபுரம் நாவலுக்குக் கடுமையான எதிர்ப்பு. கண்டனக் கூட்டங்கள். எதிர்ப்பாளிகள், கோவில்களில் சமஸ்கிருத மந்திரங்கள் மட்டுமே வேண்டும் என்பவர்கள் என்றும் கொள்ளலாம்.

சென்னைக்குத்  தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழக சட்டசபையில் முதலில் சூட்டியவர் ஜீவா. இந்த உண்மை வரலாறு பலருக்குத் தெரியாது. இதற்காகவே உயிர் நீத்த ( பாத்க்காக்கப்படாமல் கொல்லப்பட்ட )
சங்கரலிங்க நாடாரைப் பற்றி எத்தனை பேர் நினைத்துப் பார்க்கின்றோம்..
( 1957) சுதந்திரத்துக்குப்பின் தமிழுக்காக உயிர்நீத்த முதல் மனிதர். பாடப் புத்தகத்தில் வருவதில்லையே ஏன்?

தமிழ் , தமிழ் என்று ஆள்வோர், தமிழுக்குப் புதிய வார்த்தைகளைக் கொண்டுவர முயல்வோர், கோவில்களில் உள்ள தெவங்களின் பெயர்களை எல்லாம் ஏன் தமிழ்ப் படுத்த முயலவில்லை ? எழுத்துச் சீர்திருத்தத்திற்கு, சுய உரிமைத் திருமணத்தினைச் ச்டமாக்கியது போன்று,  விரும்புவோர்கோவில் பூஜாரியாகலாம் என்பது போன்று செய்திருக்கலாமே ?

நாம் ஜெர்ர்மனி  அழக்கும் நாட்டை, அவர்கள் அவர்களது தாய் மொழியில்,
DEUTSCH LAND கூறுவார்கள். ஜெர்மனியில் சில ஆண்டுகள் வாசம் செய்த என் மகன் சொன்னது. வெளி நாடுகளுக்குச் செல்ல வேண்டியவற்றில் மட்டுமே ஜெர்மெனி இருக்குமாம். மீதி எல்லா இடங்களிலும் DEUTSCH . தானாம்.
அதே போன்று ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்றும் , தமிழில் தமிழ்நாடு என்றும்
 தமிழக நிதிஅமைச்சரது  தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை

தென் மாநிலங்களை ஒருங்கிணத்து தட்சிணப் பிரதேசம் அமைக்கும் முயற்சியும்  மேற்கொள்லப்பட்டது. தமிழகத்திலிருந்து, டெல்லி சென்றிருந்த காமராஜுக்குப் பெரியார் தந்தி கொடுக்க, அதன் அடப்படையில், தெட்ஷிணப் பிரதேசத்தைக் காமராசர் எதிர்க்க, நேருவும், காமராசருக்கு வேண்டாம் என்றால் எனக்கும் வேண்டாம் என்று கூட்டத்தைக் கலைத்தது வரலாறு.
இவை எல்லாம் ஏன் பாடப் புத்தகங்களில் இல்லை?.

மதத்தின் மீது வைத்துள்ள பக்தி தேசத்தின் மீது இல்லை. எனவேதான், எஸ். எம். எஸ்.எம்டன் 22-09-1914 பாராட்டப்படுகின்றது, டாக்டர் செண்பகராமன் பயணிக்க வில்லை, சென்னை மீது குண்டு மழை பொழியவில்லை என்பதற்காக. படைப்பாளியான திவாகருடன் விசாகைக்கு மும்முறை அலைபேசி மூலம் பேசினேன். இரண்டு தடவை மிகவும் அன்பாகவே வினாக்களுக்கெல்லாம் பதிலளித்தார். அந்தக் காலத்திலேயே இவ்வளவு அழகான திவாகர் என்ற ப்யரை எப்படி உங்கள் பெற்றோர் சூட்டினர், என்றபோது, எனக்குப் பெயர் வைத்தது பாட்டிதான். அன்றையத் திரப்படத்தில் வந்த பெயர் என்றெல்லாம் சொன்னார். மூன்றாம் முறை பேசியபோது எனக்குத் தமிழே தெரியாது என்று தமிழில் சொல்லி விட்டு பேச்சைத் துண்டித்துவிட்டார்.

தற்பொழுது மீண்டும் ரமேஷ்- பிரேம் கூட்டாக எழுதிய மூன்று பெர்னார்களுக்கு வருவோம். பெர்னாட்ஸ் என்னும் பெயருடைய மூவர். பெர்னார் என்பது பிரெஞ்சு வார்த்தை.

ழான் பெர்னர் என்பவர் 1998 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் நாள் மதுபான விடுதியில் குடித்துக் கொண்டிருந்த நிலையிலேயே உயிர் பிரிந்தார்.  எட்டு ஆண்டுகளுக்கு முன் சந்திததுப் பழக்கமானவர். அவரைப் பொறுத்தவரை அறுபது ஆண்டுகள் ஆறு மாதங்கள்  பதினேழு நாட்கள் வாழ்ந்து முடித்தாகிவிட்டது.

 காலமாகிவிட்ட ழான் பெர்னாருடைய குணாதிசியங்களை எண்ணிப் பார்க்கின்றேன்.

பெர்னாருக்கு ஒயினில் சுருட்டுச் சாம்பலையிட்டுக் கலக்கிக் குடிக்கும் பழக்கம் உண்டு.

அடிக்கடியும், அளவிற்கு அதிகமாகவும் குடிக்கும் பழக்கம் உண்டு. குடிபோதையில், விவாகரத்து ஆகாமலேயே தன்னை விட்டுப் பிரிந்துசென்று லண்டனில் குடியிருக்கும் மனைவியையும், ஆண்டுக்கொருமுறை வந்து பார்த்துச் செல்லும் மகனையும் பற்றி உளறுவார். மகன் வருவதும் நாளடைவில் குறைந்து விட்டதென்றும் வருந்துவார்.

அவரது வெள்ளைக்காரத் தந்தையான ரான்ஸ் பெர்னாருக்கும் , வடலூர் வள்ளலாருக்கும் இடையே ஆழமான பக்திப்பணைப்பு இருந்தது என்று குறிப்பிட்டார். வள்ளலார் என் இனத்தவர். மாபெரும் யோகி என்பதில் எனக்கு எப்போதும் ஓர் பெருமை. பெர்னாரின் அன்னையும் என் சாதியைச் சேர்ந்த கிறித்துவர். எனவே எங்களுக்குள் சாதீய நெருக்கமும் வளர்ந்து விட்டதத் தவிர்க்க முடியவில்லை.

காலப் போக்கில் நானுமென் மனைவியும்,  ழான்பெர்னார் எனனிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களைப்பற்றிப் பேசுவதே  ( அவரது உளற்களை ) பகிர்ந்து  வாழ்க்க்கையின்  ஓர் கடமையாகிப் போனது.  போனது

ஒரு சமயம் வள்ளலாரைப் பற்றிய  பேச்சின் போது பெர்னார் சொன்ன தகவல்கள் என்னை அதிர்ச்சி அடையச் செய்தன. 125 ஆண்டுகள் வாழப்போவதாகச் சொன்ன வள்ளலார், சொன்னபடி வாழ்ந்து முடித்தார் என்று சொன்னார் கிழம் போதையேறி உளறுகிறது  என அசிரத்தையோடு கேட்டுக் கொண்டிருந்தேன். அவருக்குப் பத்து வயது ஆகும்பொழுதுதான் , 1948-ல் தான் அந்தச் சுடர் அணைந்ததாகச் சொன்னார்.

. கிழம் சொன்னத  என் மனைவியிடம் கூறியபோது இனி குடித்துவிட்டு மகான்களைப் பற்றியெல்லாம்  பேச வேண்டாம் என்று கடுமையோடு முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள் .

ஒருமுறை பெர்னாரிடம் கேட்டேன்,  “உங்களுடைய வீட்டில் எல்லா அறைகளையும் புழங்கி வருகின்றேன், பூஜை அறையை மட்டும் திறந்து காட்டவே இல்லையே” என்றேன்.

நீண்ட நேர மெள்னத்திற்குப்பின், ”வாழ்க்கையில் வினோதமும் யதார்த்தமற்ற போக்கும் மிகவும் அவசியம். ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயமற்ற நினைவு எப்படி அவசியமோ அதுபோலவே நிச்சயமற்ற புனைவும் அவசியம் “ என்று முதலில் ஃப்ரெஞ்சிலும், பின்னர் தமிழிலும் குளறியபடியே சொன்னார்.

அவரது வீட்டின், உள்கட்டுக்குள் நுழைந்ததும், வடலூர் இராமலிங்க சுவாமிகளின் மிகப்பெரிய வண்ண ஓவியம், தரையிலிருந்து சுவரில் சாய்ந்த நிலையில் நின்ற காவியுருவத்தின் காலடியில் பணிப்பெண் வைத்த் விட்டுச் செல்லும் நான்கந்து செம்பருத்திகள் எப்பொழுதும் இருக்கும். இடப்பக்கம் படுக்கையறை. வலப்பக்கம் பூஜையறை.

அவர வீட்டில் குண்டு விளக்குகள் மட்டுமே உபயோகத்தில் இருந்தது. அன்று இரவானதால்  அவற்றின் ஒளியும், மஞ்சள் மின்னொளியில்லும், போதையின் வெளிப்பாட்டிலும், வள்ளலாரின் ஓவியம் உயிரும் சதையுமாக நிற்பதைப் போலவே இருந்தது.

நான் சொன்னேன். “ வள்ளலார் இறக்கவில்லை; அவர் மறைந்து விட்டார்;  சித்தர்கள் என்றுமே அழிவற்றவர்கள்; நம்மோடு எப்பொழுதும் அலைந்து கொண்டிருப்பவர்கள் “

பெர்னார் போதையில், எனது ஃப்ரெஞ்சு மொழியைப் பகடி செய்துவிட்டு எனது
பேச்சை மாற்ற முற்பட்டார்.

நான் கடுப்பாகிப் போனேன். “வள்ளலாரை உமது குடும்பச் சொத்துப்போல பேசுகிறீரே. உமது பொய்க்கும் ஒரு அளவு வேண்டாமோ “ எனக் கத்திவிட்டேன்.

கிழவர் ஆடிப் போய்விட்டார்.  பெரிய சாவியை எடுத்துப் பூஜையறையைத் திறந்து விளக்கைப் போட்டுவிட்டு வந்து பார்க்கச் சொன்னார்.பிறகு நடந்தவை எனக்கு நிச்சயமற்றுத்  தெரிகின்றன.

என் மனைவியிடம் அதை நான் சொல்ல நீங்கள் அந்தக் கிழவரோடு சேர்ந்து பைத்தியமாகி விட்டீர்கள்., என கத்தினாள். இனி நான் அவரைச் சந்திக்கக் கூடாது எனக் கத்தினாள். சட்டையைப் படித்து உலுக்கினாள். பிறகு இரண்டு மாதம் கழித்து கிழவர் இறந்தபிந்தான்  அவர் வீட்டுக்குப் போனேன்.

ஜிப்மர் சவக்கிடங்கில் அவருடைய உடல் பதப்படுத்தி வைக்கப் பட்டிருந்தது. மகன் ஃப்ரான்சிலிருந்து வந்தபிறகு ஈமக் கிரியைகள் முடித்தனர். பெர்னாரின் மனைவி வரவில்லை..

ஃப்ரான்சிலிருந்து வந்த ழாக் பெர்னார் இளவயது கிழவரைப்போலவே இருந்தான் என்னைவிட இரண்டு வயது இளையவன். வீட்டை இடித்துவிட்டு அடுக்குமாடி வீடு கட்டப்போவதாகவும், அதற்கு நான் உதவ வேண்டும் என்றும் க்ற்ட்டுக் கொண்டான்.

 “கடசிக் காலத்தில் அப்பாவின் நண்பராய் இருந்திருகின்றீர்கள் அவரது பூஜை அறையின் மர்மம் பற்றியும்  அறிந்திருப்பீர்கள் தானே “  என ஒரு கிண்டல் தொனியுடன் கேட்டான்.

 “சுமார் 50 ஆண்டுகளாக ஒரு சாமியாரின் பிணத்தை வைத்துக் கொண்டு மாரடிக்கிறார்.”இதனால்தான் என் அம்மா இவரைப் பிரிந்து என்னையுக்ம் அழைத்துக் கொண்டு ஃப்ரான்சுக்கே போய்விட்டார். என் தாத்தா காலத்துப் பிணம் இன்னும் சவப் பெட்டிக்குள் கிடக்கிறது. இதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் அதற்கும் நீங்கள்தான் உதவ வேண்டும்.

நான் கண்களை மூடிக்கொண்டு மெள்னித்தேன்.” பதப்படுத்தப்பட்ட அந்த உடலுடன் கூடிய பெட்டியை நாம் வைத்துக் கொள்ளலாமா” என்று கண்கலங்க மனைவியிடம் கேட்டேன்.

அவள் என்னைப் பச்சாதாபத்தோடுதான் பார்த்தாள். அந்தப் பார்வையை என்னால் தாங்க் முடியாமல் தவிர்த்தேன்.

”நான் உங்களோடு வாழ்வதா வேண்டாமா?” என அமைதியாகக் கேட்டுவிட்டு, விருட்டென எழுந்து சென்று படுக்கறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

மறுநாள், ழா பெர்னாரிடம், அர்சிடம் ஒப்படைப்பது சாத்தியமில்லை.  அரசும், பத்திரிக்கை மீடியாக்களும் கேள்வி கெட்டுத் தொலைத்துவிடும். அந்த உடம்பின் ரகசியத்தை வெளிப்படுத்தினால் அது சமயப் பிரச்சினையாகி என் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

பிணம் ஒரு சாமியார் மட்டும் அல்ல. இந்திய ஆன்மீகத்தின் ஒரு சிகரம். ஃப்ரெஞ்சுகாரன் இதன் வெகுமானமோ,  அற்புதமோ, இதன் முலம் உருவாகப்போகும் ஆபத்துக்களோ என்னவென்று தெரியாது.” என்று நிதானமாகச் சொன்னேன். எனது நிதானம் அவனைக் கலவரப்படுத்தியது.

நீண்ட நேரம் ஒயினைப் பருகியபடி இருந்தோம். பிறகு எனது திட்டத்தைச் சொன்னேன். மகிழ்ச்சியில் என்னைக் கட்டித் தழுவிக் கொண்டான்.

மறுநாள் போகி. விடிய விடியக் குடித்தபடியே இருந்தோம்.  மனைவியோ தொலைபேசியில் அலறியபடியே இருந்தாள். அதிகாலை மூன்று மணிக்கு பூஜை அறைக்குள் சென்றோ. சவப்பெட்டி ஒரு காவித் துணியால் போர்த்தப்பட்டிருந்தது. துணியை அகற்றி விட்டு ஆணி அறையப்படாத பெட்டியைத் திறந்து பார்க்க முற்பட்டேன். ழாக் தடுத்தான். நான் அவனை ஏறிட்டுப் பார்த்தேன். பிறகு மூடியைத் திறந்து பார்த்தேன். காவித் துணியால் சுற்றப்பட்ட ஒரு பொட்டலம். பெட்டியோடு தூக்கி  வந்து வாசலில் வைத்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினோம். சட சடவென்று தீ எழுந்தது.

ஆங்காங்கே வீட்டு வாசல்களில் எதைஎதையோ போட்டுக் கொளுத்தத் துவங்கி விட்டனர். அரைமணி நேரத்தில் வாசலில் சாம்பல் புகைந்தது. சாம்பலிலே ஒரு கை அள்ளி எடுத்து வந்து எனது காரின் பின் இருக்கையில் வைத்துவிட்டு ழாக்கிடம் கை குலுக்கி விடைபெற்றேன். வ்ழி நெடுகிலும் வாசல்கள் தோறும் பெருந்தீ வளர்ந்து கொண்டிருந்தது.

ரமேஷ்- பிரேம் எழுதிய ஐந்து கதைகளும் வெவ்வெவேறு வகைப்பட்டவை.
அவற்றுள் வேறுபட்டது மூன்று பெர்னார்கள். அந்தக் கதையை வாசகர்கள்
மத்தியில் கொண்டு வரும்பொழுது,

 விசாகப்பட்டினத்திலிருந்து இரண்டு நாட்கள் அன்போடு பேசிவிட்டு, மூன்றாவது நாள்  எனக்குத் தமிழ் தெரியாது என்று தமிழில் சொன்ன திவாகர் எழுதிய எஸ்.எம்.எஸ். எம்டன் 22-09-1914
வரலாற்றுப் புதினம், சுதந்திரப் போராட்ட வீரன், தீரன் செண்பகராமன் பிள்ளையை, செம்பகராமன் என்று குறிப்பிட்டும், அப்படி ஒருவர் எம்டன் கப்பலில் பயணிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளதை எந்த தேசீய நண்பர்களோ, மற்றவர்களோ எதிர்க்க வில்லை என்பதோடு மட்டுமன்றி. அந்நூலைப் போற்றிப் புகழ்ந்து விமர்சனமும் செய்கின்றனரே ஏன்? 




நம் கண் முன்னாலேயே  சங்கரலிங்கப் பெருமாள் தமிழுக்காகச் சுதந்திரத் தமிழ்நாட்டில் உயிர்விட்டது, ஜீவா.முதன் முறையாகத் தமிழகச் சட்டசபையில் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று குரல் கொடுத்தது, திராவிட நாடு கோரிக்கையாளரான ஈ.வே.ரா.பெரியார், காமராஜர் உதவியோடு தெட்ஷிணப் பிரதேசமாக்கப் படுவதைத் தடுத்து நிறுத்தியது
ஆகிய வரலாற்று உண்மைகள் எல்லாம் பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்யாமல் இருப்பது போன்று , கடந்த கால அடிமைச் சமுதாயத்தின் உண்மைகளைப் பல்வேறு ஆய்வுகள் மூலம் காகனூர் சோலை சுந்தரபெருமாள் எழுதிய தாணடவபுரத்திலும் எழுதியுள்ளார். இந்து சமய அதீதப் பற்றாளர்கள் எதிர்ப்புக் குரல் கொடுக்கின்றனரே, ஏன்?. 


ரமேஷ்- பிரேம் எழுதிய ஐந்து கதைகளும் வெவ்வெவேறு வகைப்பட்டவை.
அவற்றுள் வேறுபட்டது மூன்று பெர்னார்கள். அந்தக் கதையைப் பட்த்திட நேரும்  வள்ளலார் பக்தர்கள் மனம் எவ்வளவுதூரம் வேதனைப்படும் என்பது
அந்த இரட்டை ரமேஷ்-பிரேம் எழுத்தாளர்களுக்குத் தெரியாதா?  வள்லலார் அன்பர்கள் மெள்னிப்பது ஏன்?

வெளியீட்டாளர்கள் :- மருதா பதிப்பகம்.

நூல் எண் 56. முதல் பதிப்பு டெசம்பர் 2003

E-Mail:- MANITHA1999@REDIFFIMAIL

100 பக்.ரூபாய் 40/-. 



0 comments:

Post a Comment

Kindly post a comment.