Friday, August 17, 2012

சென்னையில்,புதிய தலைமுறை தொலைக்காட்சியை மறைகின்றது சூரியக் குடும்பம் ???


மாதக் கட்டணத்தை வாங்கிக் கொண்டு வீட்டில் இருந்து கொள்கின்றனர் கேபிள் டிவி நடத்தும் உரிமையாளர்கள். சென்னை வீடுகளில் தொலைக் காட்சியில் வழக்கமாகப் பளிச்சென்று வரும் 36 வது சேனலில் ( எஸ்.37 ) புதிய தலைமுறை வருவ்தில்லையே என்று கேட்டால், 80- வது சேனலை ட்யூன் ( யு 60 )செய்து பாருங்கள்; நிச்சயமாக வரும் என்றும் , நான் தற்பொழுது அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் பதில் கிடைக்கின்றதாம். ஒன்றிலிருந்து நூறு வரை எப்படி முயன்றாலும் புதிய தலை முறை தொலைக் காட்சி ஒளிபரப்பைப் பல வீடுகளில் காண முடிவதில்லை. கேபிள் சென்டரில் வேலைபார்க்கும் களப் பணியார்கள், வீடுகளுக்கு வந்து, ட்யூன் செய்து கொடுத்தாலும் 80 வது சேனலில் கர்புர் சத்தங்களுடன் கருப்பு வெள்ளையில் கோடு கோடாக ஏதோ வருகின்றது. அதுதான் புதிய தலை முறையாம். இன்னும் அதிகமாகக் கேட்கப்போனால் கன்சீல்டு வயர் உள்ள வீடுகளுக்கு உங்கள் வயர் சரியில்லை என்று சாக்குப் போக்குச் சொல்கின்றனர்.

 S C V என்பதை சுமங்கலி கேபிள் விஷன் அல்லது சன் சேபிள் விஷன் என்றோ பேசிக் கொள்வார்கள் அவற்றை மச்க்களுக்கு மாதம் ரூபாய் 100 அல்லது 150 கட்டணத்திற்குச் சாமான்ய மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் கேபிள் நெட் ஒர்க்கில் பணியாற்றும் களப்பணியாளர்கள். சென்னையில் ஒளிபரப்பும் அத்தனை கட்டுப்பாடும் சன் குழுமங்கள் கைகளில் இருப்பதால், கல்குவாரி ஒளிபரப்பான நாள் முதல், புதிய தலை முறையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டதாகச் சொல்லப் படுகின்றது.

புதிய தலை முறைக்கே இந்தக் கதி என்றால், எதிர்க் கட்சி நிலையில் உள்ள ஜெயா தொலக்காட்சி ஒளி பரப்பிற்கு சன் குழுமம் எப்படி அனுமதிக்கின்றது என்ற வினா எழுகின்றது. சென்னையைத் தவிர மற்ற இடங்களுக்குப் பல்வேறு கம்பெனிகள் ( ? ) உள்ளன. HATH WAY, JAK போன்றவையுடன் ஏதாவது ஒப்பந்தம் போட்டிருக்கக்கூடும் என்கின்றார்கள்.

 எல்லோரும் எல்லா தொலைக் காட்சிகளையும் பார்ப்பதில்லை என்றாலும், செய்திகளின் பொருட்டு பளிச்சென்று தெரியும் புதிய தலை முறையைப் பார்க்காமல் விட்டு வைப்பதில்லை. அதுசரி அரசுக் கேபிள் நிறுவனங்களுக்குப் போதுமான கட்டுமானங்கள் இல்லாததுதானே எல்லாவற்றிற்கும்   காரணம்.? பி.எஸ்.என்.எல். கேபிள் வயர்களைப் பயன்படுத்தி எல்லா வீடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் தொலைக் காட்சிகளை ஒளிபரப்பக் கூடுமல்லவா?

தொலைக் காட்சி ஒளிபரப்பை அரசுடைமையாக்கிவிட்டு, பி.எஸ்.என். எல். நிறுவனத்தைப் பயன்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டால், எதிராளியின் வலிமையைக் குறைத்ததாகவும்  இருக்கும்; அரசுத் துறைக்கு வருவாயை அதிகரிக்கச் செய்ததாகவும் இருக்கும்.

 பொறியியல் வல்லுநர்கள்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். மீண்டும் மீண்டும் சுமங்கலியோடு பேரம் பேசாமல் புதிய முயற்சிகளில் புதிய தலை முறை ஈடுபட்டு சென்னை வாழ் மக்களை மகிழ்ச்சிப்படுத்துமாக!

 பெருநகரங்களுக்கு செட் ஆப் பாக்ஸ் முறை கொண்டு வருவதை விட பி.எஸ்.என். எல் கட்டுமானங்களை பயன்படுத்த முற்படுவதே சாலவும் சிறந்தது..என்று மக்கள் கருதுகின்றார்கள்.

பொதுமக்கள் விருப்பம் நிறைவேறுமா?

2 comments:

  1. I thank you for this information.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பர் எல்.வி.பெருமாள்.

      Delete

Kindly post a comment.