பொருட்பாலில் மருந்து என்னும்
அதிகாரத்தில், திருவள்ளுவர் கூறுவது.
அற்றது அறிந்து கடைப்பிடித்து, மாறுஅல்ல
துய்க்க, துவரப் பசித்து. -
நல்ல உணவை அளவோடு உண்போர்க்கு நோய்கள் இல்லை.
திருக்குறள் தெளிவுரை:- சாமி சிதம்பரனார்.
கண்ணப்பன் பதிப்பகம்,
16, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை-600 016
தொலைபேசி: 22310805 விலை ரூ.40/- ( 274 பகங்கள், பாக்கட் சைஸ் )
உரம் மிக்க உடல் நலத்திற்கு 5 விதிகள்
1. நாளுக்கு இரு வேளை உணவு.
2. நாளுக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் ( 8 டம்ளர் )
3. நாளுக்கு ஒரு மணிநேர உடற் பயிற்சி
4. நாளுக்கு இரு முறை வழிபாடு
5.வாரத்திற்கு ஒருநாள் உபவாசம் ( உண்ணாவிரதம் )
மனிதர்களில் பலர் நிறையச் சாப்பிட்டால் அதிகமான உடல் வலிமையப்
பெற்று விடலாம் என்று எண்ணுகின்றார்கள். அதிக அளவு மருந்தினை
உட்கொண்டால் நோய் சீக்கிரம் தீர்ந்து நலம் பெற்று விடுவோம் என்று
எண்ணுவது எவ்வளவு தவறோ, அதற்கொப்பானதுதான் இதுவும்.
மனிதன் சாப்பிடும் உணவுப் பொருள் நன்கு ஜீரணமாகி உடலில் சேரும்
தனமையைப் பொறுத்தே அந்த மனிதனது உடல் அதற்குரிய சக்தியும்
வலிமையும் பெறும்.
உயிர் காக்கும் உணவை உண்டு உயிர் பேண வேண்டும். ஆதலால் உண்ணும்
உணவானது கூடுமானவரை இயற்கையானதாய் இருக்க வேண்டும்.
இன்றைய மனிதருக்கு ஏற்படும் நோய்கள் பலவற்றிற்கு உணவுப் பற்றாக்
குறை காரணமல்ல.
சாதாரணமாக வீடுகளில் வற்றல் வகைகள், அப்பளம், வடாம், முறுக்கு,
வடை உள்ளிட்ட பல்வேறுவகையான எண்ணெயில் வேகவைக்கப்பட்ட/
பொரிக்கப்பட்ட பொருட்களைச் சுவைக்காக அளவுக்கு மீறி சாப்பிடுபவர்கள்
மறுநாள் தவறாமல் சொல்வது ”வயிறு கொஞ்சம் “ சரியில்லை என்பதுதான்.
சிலர் புத்திசாலித்தனமாக வாரத்தில் ஒருநாள் மட்டும், சுட்ட அப்பளமும்
வத்தல் குழம்பும் தவறாமல் தொடர்ந்துஉண்ணும் பழக்கத்தைக்
கொண்டிருப்பர். அவர்களுக்கு மலச் சிக்கலே வராது.
மேலும் புளிக்காத தயிரைக் காலையிலோ அல்லது மதியமோ சேர்ந்த்துக்
கொள்வர்..இரவு ஒருவேளை அரிசிச் சோறு சாப்பிடும் அவசியம் ஏற்பட்டால்,
அது புளிப்பில்லாத மோராகத்தான் இருக்கும். எண்ணெயில்
பொரிக்கப்படுவதில் உள்ள மற்றுமொரு பெரிய கோளாறு, மறு சுழற்சி
முறையில் உபயோகித்த எண்ணெயினையே திரும்பத் திரும்பப்
பயன்படுத்துவதுதான்.
இவ்விதம் தவறாகவும் , அளவுக்கதிகமாகவும் உண்பதாலேயே பொதுவாக
நோய்கள் தொடர்ககதை ஆகின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம்,
வயிறு சரியில்லை என்றால், வீட்டில் உள்ள பெரியவர்கள் “ வயீற்றை ஒரு
நேரம் காயப்போடு “ எல்லாம் சரியாய்ப் போகும் என்பார்கள். அதுபடியே
வயிறும் சொன்ன சொற்படி கேட்கும்.
ஆதலால், போதுமான அளவிலும், ஒழுங்கான முறையிலும், உணவுப்
பழக்கத்தை அமைத்துக் கொண்டால் உடல் நலமும் சீராகும். நோய்களும்
மனிதரை. அணுகாது.
இன்றைய இயந்திரகதியான வாழ்க்கைக்கு அடிமையாகிவிட்ட நிலையில்,
முற்றிலும், அளவோடும், இஅற்கக்கு முக்கியதுவம் கொடுத்தும் வாழ்வது
கடினம்தான். ஆனால், வேறு வழியில்லை. இளமையிலிருந்தே நம்
சந்ததியினருக்கு அத்தகைய பழக்க வழக்கங்களை ஏற்படுத்தலாம். வயது
வந்தோர் 30-35 வயதிலிருந்தாவது, எண்ணெய்ப் பண்டங்களை முற்றிலும்
தவிர்த்து விட வேண்டும். இரவில் மட்டுமாவது பழ வ்கைகளோடு முடித்துக்
கொள்ள வேண்டும்.அப்படி உணவு அவசியம் வேண்டும் என்றால் சுட்ட
சப்பாத்தி முதலானவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
வயதானவர்கல் நோய்வாய்ப்பட்ட காலங்கள் தவிர மற்ற நேரங்களில் பழச்
சாறு வகைகளைப் பருகக்கூடாது.அந்தக்காலத்தில் சென்ற ஆண்டு வாங்கிப்
பாதுகாப்பாக வைக்கப் பட்ட புளியைத்தான் மறு ஆண்டு பயன்படுத்துவார்கள்.
திருமணம் மற்றும் ஏதேனும் விருந்துகளில் உங்கள் அருகில் அமர்ந்திருக்கும்
பெரியோர்கள் உண்ணுவதைச் சற்றுக் கவனியுங்கள். பட்டும்படாமலும் ஓரிரு
துளி நீரில் தொண்டை நனைத்துக் கொள்வார்கள். உண்ணும் பொழுது
இடையிடையே ந்ர்ர் அருந்தவும் மாட்டார்கள்.பருப்பு அல்லது
வைக்கப்பட்ட காய்கறி வகைகளில் நெகிழ்த்தியானவற்றில் ( பச்சடி )
போன்றவற்றில் சாதத்தைப் பிசைந்த்து சிறிது சாப்பிட்ட பின்னரே
மற்றவற்றைச் சாப்பிடத் துவங்குவர். சாம்பார் / காரக் குழம்பு எவ்வளவு
சுவையானதாக இருந்தாலும் நேரடியாக ரசத்திற்குச் சென்று விடுவர். மேலும்
சிலர் ரசம் ஒரு டம்ளர் வாங்கிக் குடித்துவிட்டு, மோர்/ தயிர் சாதத்துடன்
முடித்துக் கொள்வர். ஒரு டம்ளர் மோர் வாங்கிக் குடிக்கவும் தவற
மாட்டார்கள்.
கோதுமை ரொட்டி, கைக்குத்தலரிசி, தேன், எலுமிச்சை போன்றவற்றைப்,
பயன்படுத்தத் துவங்கலாம். டீ, காப்பி, புகைப் பிடித்தல், மது அருந்துதல்,
வெவெவேறு வகையான போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகாதிருத்தல்
ஆகியவை நோய்களை மனிதரை நெருங்க விடாது.
எனவே நோயற்ற வாழ்வு வேண்டுவோர்,
“வாழவே உண்ணவேண்டுமே தவிர,
உண்பதற்காக வாழக்கூடாது.”
டாக்டர்.ஜே. லட்சுமிநாராயணராவ் N.D.
ஆங்கில மூலத்தை தமிழாக்கம் செய்தவர்
, கி.சுப்பிரமணியம் . ( 1968 )
”இயற்கையோடு இயைந்த வாழ்வு”
இயற்கை மருத்துவ நிலையம்,
முதல் வீதி, காந்தி நகர், அடையாறு.
அந்த நூலில் படித்ததும் சொந்த அனுபவங்களும் கலந்ததோர் கலவை.
முதல் மற்றும் கடைசி அட்டைகளுடன் சேர்த்து
32 பக்கங்கள்.விலை 30 பைசா. சென்னை கோஷா
மருத்துவ மனை அருகில் ,தெருவோரக் கடை
ஒன்றில் வாங்கி 30 வருடங்களுக்கு மேல் இருக்கும்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.