Thursday, August 16, 2012

விக்டோரியா மகாராணி எழுதிய டைரியைத் தற்போது எல்லோரும் பார்க்கலாம்!




எம்மைப் பற்றி 
புலம் பெயர்ந்து கனடிய மண்ணில் ஏறத்தாழ முப்பது வருட வாழ்வியல் வரலாற்றைக் கொண்டவர்கள் தமிழ் மக்கள். கனடா நாட்டில்  ஏற்படுகின்ற மாற்றங்கள் அவர்கள் வாழ்க்கையில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந் நாட்டில் ஏற்படுகின்ற அரசியல், சமூக, பொருளாதர மாற்றங்களை எம் மக்கள் முன் கொண்டு வருவதுடன் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற இவ்வகையான மாற்றங்களை பகிர்ந்து கொள்ளவும்  இற்றை வரைக்கும் தமிழ் பேசும் மக்களுக்கென ஒரு ஊடகம் அமையப் பெறவில்லை. எனவே இதனை ஈடுசெய்யும் முதலாவது தமிழ் இணையத்தளமாக இ-குருவி இருக்கின்றது என்பதில் நாம் பெருமைப்படுகின்றோம். இ-குருவி கனடா மட்டுமன்றி உலக நடப்புக்கள், விஞ்ஞான தொழிற்நுட்ப மாற்றங்கள், பொழுதுபோக்கு விடயங்கள் மற்றும் விளையாட்டு செய்திகளையும் பகிர்ந்து கொள்ளும்.
இத்தருணத்தில் எமக்கு காணொளி உதவிகளை செய்யும்  Tamils' Business Connection (www.tamilbizcard.com)  நிறுவனத்திற்கும், நினைவுகள் (www.ninaivukal.com) இணையதளத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
அன்புடன் 
சாந்தன் & குழுவினர் nfo@ekuruvi.com  ekuruvi@gmail.com  



விக்டோரியா மகாராணியின் நினைவேடு இணையத்தில் வெளியீடு
May 25 2012 06:49:16

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பிரித்தானியாவை ஆட்சி புரிந்த விக்டோரியா மகாராணியின் நினைவேடுகள் ( டைரி ) தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. தன் எதிர்காலக் கணவரை சந்தித்ததுஇருவரும் இணைந்து நீச்சல் பயிற்சிக்கு சென்றது உள்ளிட்ட பல சுவராஷ்யமான குறிப்புக்களும் இந்த நினைவேட்டில் உள்ளன.

 முதன் முறையாக மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த நாட்குறிப்புக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. http://www.queenvictoriasjournals.org/home.do

 என்ற  iஇணைய தளத்தில் இவற்றை காணலாம். தான் ஆட்சி புரிந்த 63 வருடங்களிலும் தினமும் நிகழ்ந்தவற்றை நினைவேடுகளில் மகாராணி குறித்து வைத்துள்ளார். மகாராணியின் 193 வது பிறந்த தின நிகழ்வைக் குறிக்கும் வகையில் நேற்று முதல் இவை வெளியிடப்பட்டுள்ளன.  ( 25-05-2012 )

இதற்கு முன்னர் அரச குடும்ப ஆவணக் கலரிகளில் இந்த கையேடுகள் இருந்ததால் அனைவராலும் பார்க்க முடியாமல் போனது. முன் அனுமதி பெற்றோர் மட்டுமே காணக் கூடிய வகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

1 comments:

  1. நல்ல பதிவு. புதுமையாக உள்ளது.

    ReplyDelete

Kindly post a comment.