Wednesday, August 15, 2012

மின்வாரிய சேவைத்துறையைச் சந்தைக் காடாக்குவதா?

மின்வாரிய சேவைத்துறையைச் சந்தைக் காடாக்குவதா?
தமிழக மின் வாரியத்தை பற்றி நாள் தோறும் செய்திகள் வந்த வண்ணமாகவே உள்ளன. வருகின்ற செய்திகள் அனைத் தும் மக்களை தாக்கும் செய்திகளாகவே உள்ளன. அதாவது மின்வெட்டு நேர அதி கரிப்பு, 200 மடங்கு மின் கட்டண உயர்வு, நிர்வாக கோளாறினால் அனல் மின் நிலை யங்கள் தீப்பற்றி எரிதல், அதனால் மின் பற்றாக்குறை அதிகரிப்பு, மின் வாரியத்தில் லஞ்ச ஊழல், அதனால் அதிகாரிகள் சிறைப்பிடிப்பு, இவைகளுக்கெல்லாம் மேலாக சேவை கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதற்குண்டான நாடகத்தை துவங்கி உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு ஆட்சி கட்டிலில் ஏறிய உடன் பால் விலை யையும், போக்குவரத்து கட்டணத்தையும் உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் மின்சார கட்டணத்தையும் அபரிமிதமாக உயர்த்தி ரூ.20,000 கோடிக்கு மேல் மக்களின் பைகளில் இருந்து சூறையாடியது.

தமிழக மக்கள் அரசு உயர்த்திய மின் கட்டணத்தின் தாக்கத்தை முழுமையாக உணர்வதற்கு முன்பாகவே மின் இணைப் புக்கு, மின் மீட்டர் பொருத்துவதற்கு பழு தடைந்த மீட்டர், பழுதடைந்த பெட்டிகள், மீட்டர் வைப்புத்தொகை, மறு இணைப்புக் கட்டணம், மீட்டர் அட்டைக்கு உண்டான சேவைக் கட்டணங்கள் அனைத்தையும் பல மடங்கு உயர்த்துகின்ற பரவசத்தில் உள்ளனர்.

தமிழக மின் வாரியத்தில் மக்களின் சேவையைக் கணக்கில் கொண்டு பல சேவைகளுக்கு கட்டணம் என்பது இல்லா திருந்ததை கூட மாற்றி கட்டணங்களை நிர்ணயித்து உயர்த்தியுள்ளனர். அதாவது ஒரு முனை மின் இணைப்பு பெறுவதற்கு ரூ. 250-ஐ ரூ.900ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ. 500 என்பது ரூ. 1600 ஆக வும், ரூ. 1600 என்பதை ரூ.3000 ஆகவும், ரூ. 3000 என்பதை ரூ. 10,000 ஆகவும் மாற்ற முயற்சிப்பதோடு, நுகர்வோர்களே பணம் கொடுத்து வாங்கும் மீட்டர்களுக்கு கூட வாடகை நிர்ணயம் செய்து ஒரு முனை மீட்டருக்கு மாதம் ரூ. 10 ஆகவும், மும்முனை மீட்டர்களுக்கு மாதம் ரூ. 40ம், வணிக மீட்டர்களுக்கு மாதம் ரூ.50 வசூ லிக்க திட்டமிட்டு சுதந்திரத்திற்கு பின் இது வரை இல்லாத சுரண்டலை அரங்கேற்ற தமிழக அரசு முயற்சிக்கின்றது.

பழுதடைந்த மீட்டர் பெட்டிகள் மற்றும் மீட்டரை மாற்ற ஒரு முனை மின் இணைப்புக்கு ரூ. 150 என்பதை மாற்றி ரூ.500 ஆக உயர்த்தவும் மும்முனை மீட்டர்களை மாற்ற ரூ.150 என்பதை ரூ. 750 ஆகவும் ரூ.2000 ஆகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர். மீட்டர் வைப்புத் தொகையாக வீடுகளுக்கான ஒரு முனை மீட்டருக்கு இப்போதுள்ள வைப்புத் தொகை ரூ. 700யிலிருந்து ரூ.825 ஆகவும் மும்முனை எலக்ட்ரானிக் மீட்டருக்கு ரூ.2000 த்தில் இருந்து ரூ.3650 ஆகவும் உயர் மின் அழுத்த மீட்டர்களுக்கான

வைப்புத் தொகை ரூ.40,000த்திலிருந்து ரூ.65,000 ஆகவும் உயர்த்த திட்ட மிட்டுள்ளனர். மின் இணைப்பு கட்டண மாக, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 6 மாதத்திற்குள் மின் இணைப்பு கோரும் எல்.டி. சிடி மீட்டர்களுக்கு இப்போதுள்ள கட்டணம் ரூ.300 இல் இருந்து ரூ.2500

ஆகவும், உயர் அழுத்த மின் இணைப் புக்கு இப்போதுள்ள ரூ.3000த்தை ரூ.4000 ஆகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளதோடு இப்போது இலவசமாக செய்யும் மின் எரிப்பு கணக்கீடு பண வசூலுக்கு கூட ஒரு வீட்டு இணைப்புக்கு ரூ. 10 என்றும் குறைந்த மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு ரூபாய் 100 என்றும் உயர் அழுத்த தொழிற்சாலை இணைப்புகளுக்கு மின் எரிப்பு கணக்கிட ரூ. 250 என்றும் நிர்ணயிக்க உள்ளதாகவும் மின் எரிப்பு பதிவு கணக்கீடு அட்டைக்கு கூட ரூ.5க்கு பத்தாக மாற்றி மின்சாரத் துறையில் தமிழக அரசு தனது சேவையை தொடர திட்டமிட்டுள்ளது.

மின் கட்டணம், சேவை கட்டணங் களை உயர்த்தி, மின் வாரியம் அரசுத்துறை நிறுவனமாக இருக்கும் போதே கொள்ளை இலாபத்துடன் செயல்படும் நிறுவனமாக மாற்றவும், அப்படி மாற்றியப் பின்னர் மின் துறையை தனியாருக்கு தாரைவார்க்கவும் திட்டமிட்டு செயல்படுகின்றனர்.

சேவைக்கட்டண உயர்வுக்கு மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்தை அணுகிட, ஒழுங்கு முறை ஆணையமும் அதை ஏற்று அமல்படுத்தும் நாடகத்தை துவங்கிட உள்ளது. இந்த சேவைக் கட்ட ணம் என்ற நாடகம் அரங்கேறுமானால் ஒரு வருடத்திற்கு மின் வாரியத்திற்கு 2500 கோடி ரூபாய் வருமானம் வரும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

அரசு உத்தேசித்துள்ள அநியாய கட் டண உயர்வுகள் அரங்கேறுமானால் சாதா ரண அப்பாவி மக்கள் மின் இணைப்பு பெற முடியுமா? பெற்ற மின் இணைப்பை பாதுகாக்க முடியமா? என்பது மக்கள் முன் எழுந்துள்ள பெரும் வினாவாக உள்ளது.

இந்த அநியாய கட்டண உயர்வை அரங் கேற்ற 7 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளுக்கு அதிகாரம் இல்லை யாம். மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரிகள் கருத்துக் கணிப்பென்ற நாடகத்தை நடத்தி, கட்டண திணிப்பு என்பதை அரங்கேற்ற உள்ளார்கள். இதை நாம் அனுமதிக்கலாமா? இனியும் தமிழக மக்கள் மவுனமாக இருந்திடாமல் கருத்துக் கணிப்பு கூட்டத்தில் கலந்து, கட்டண உயர்வுக்கு கால்கோள் இடுவதற்கு பதி லாக, கருத்துக் கேட்பு கூட்டங்களை கருத்து எதிர்ப்பு கூட்டங்களாக மாற்றிட வேண்டும்.
நன்றி:- தீக்கதிர், 15-08-2012  கட்டுரை ஆக்கம்:- எஸ்.எஸ்.சுப்பிரமணியன்

0 comments:

Post a Comment

Kindly post a comment.